காட்டுக்குள்ள எனக்கு நடந்த திகில் சம்பவம் : Women Wildlife Photographer Divya Barathi Interview

thumb_upLike
commentComments
shareShare

புகைப்படம் எடுப்பது ஒரு கலை. அதிலும் வனவிலங்கு புகைப்பட கலைஞராக இருப்பது மிகப்பெரிய விஷயம். அதில் உள்ள நன்மைகள், கஷ்டங்கள், சவால்கள் குறித்து நாம் அறிந்திராத பல அறிய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் திவ்யா பாரதி.

திவ்யா பாரதி

அவர் கூறும்போது, சிறுவயதில் இருந்தே விலங்குகள் பார்க்க போவன், எனக்கு அது ரொம்ப பிடிக்கும். எட்டு வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரிக்கு வந்தபோது தான் “Wildlife” முயற்சி பண்ணலாம் என்ற எண்ணம் வந்தது. அதற்கான பயிற்சி வகுப்புகள் சென்றேன்.

பெற்றோரின் ஆதரவு

என் அப்பாவும், அம்மாவும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்களை பொறுத்தவரை என் விருப்பம் தான் முக்கியம். அதனால் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். புகைப்படம் எடுக்க வனம் செல்லும்போது, அப்பாவும் கூட வருவார்.

சவால்கள்

வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பது சாதாரண காரியமல்ல. அதற்கு நாம் பயன்படுத்தும் கேமரா உபகரணங்களே தூக்க முடியாத அளவு பாரம் இருக்கும். நம் உடல் ஆற்றல் இழந்து விடும். வனத்தில் கழிப்பறை இருக்காது, அதற்கேற்ற முன் ஏற்பாடுகள் உடன் தான் செல்ல வண்டும். இப்படி சில சவால்கள் உண்டு.

சிறந்த அனுபவம்

null

இந்த துறையை பொறுத்தவரை பொறுமை தான் முக்கியம். ஒரு புலியை படம் எடுக்க மூன்று வருடம் காத்திருந்தேன். அதன் பெயர் பிரின்ஸ். மூன்று வருடங்களுக்கு பிறகு அதை பார்த்த போது அதன் ஒவ்வொரு அசைவுகளையும் நான் படம் எடுத்தேன்.

எதிர்மறை பக்கம்

பலமுறை உடன் வரும் கலைஞர்களின் நெறிமுறையற்ற நடத்தையை பார்த்துள்ளேன். அதாவது வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும்போது, ப்ளாஷ் பயன்படுத்தக் கூடாது. ஆனால் ப்ளாஷ் பயன்படுத்தி விலங்குகளுக்கு தொல்லை தருவார்கள். வட இந்தியாவில் உள்ள ஒரு இடத்தில் புலியை சுற்றில் இவர்கள் ஜீப்பை விட்டு பயமுறுத்துவதை பார்த்திருக்கேன். இந்த மாதிரி விஷயங்கள் அவ்வப்போது நடக்கும். நல்ல புகைப்படத்திற்காக இதெல்லாம் செய்வார்கள். ஆனால் நல்ல புகைப்படம் கிடைக்கிறது, இல்லை அதெல்லாம் தாண்டி, இதெல்லாம் ஒரு அனுபவம் தான். அதனால் நான் விலங்குகளை துன்புறுத்த கூடாது.

அலாரம் கால்

யானை வருவதை என்னால் கண்டறிய முடியும். அதன் வாசனையை வைத்து கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒரு அலாரம் கால் உண்டு. அதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

விலங்குகளின் சேஸ்

ஊட்டியில் இருந்து திரும்பி வரும்போது, மஞ்சூர் என்னும் இடத்தில் யானைகளின் கூட்டம் வந்தது. அப்போது அது எங்களை பயமுறுத்தி துரத்த பார்த்தது, அது மறக்க முடியாத அனுபவம்.

பிடித்த புகைப்படம்

null

நான் எடுத்த அனைத்து புகைப்படங்களும் எனக்கு பிடிக்கும். ஆனால் ஹார்ன்பில் பறவையை படம் எடுத்தது தான் என்னால் மறக்க முடியாது.

ஹார்ன்பில் பெண் பறவை முட்டையிடும் போது, மரத்தின் அந்த பெரிய ஓட்டைக்குள் சென்று விடும், அதன் இறகுகளை பிய்த்து, கூடு கட்டும். ஆண் பறவை, கட்டை இவையெல்லாம் கொண்டு வந்து அது வாயிலிருந்து சுரக்கும் திரவத்தை வைத்து, ஒரு கதவு மாதிரி மரத்தில் செய்யும். அந்த ஆண் பறவை மட்டும் வெளியே சென்று உணவு எடுத்து வரும்.

ஒருவேளை ஆண் பறவை இறந்துவிட்டால், அந்த குடும்பமே அழிந்து விடும். அப்படிப்பட்ட பறவையை நான் படம் எடுத்தது தான் எனக்கு மிக பிடித்தது.

விழிப்புணர்வு அவசியம்

பல கல்லூரிகளில் வனவிலங்குகள் குறித்தும், அவற்றின் அவசியம் குறித்தும் கருத்தரங்கு நடத்தி வருகிறேன். நான் மசினகுடி சென்றிருந்த போது, அங்கு ஒரு குரங்கு அடிப்பட்டு கிடப்பதை கண்டேன். விசாரித்த போது தான் தெரிந்தது, மனிதர்கள் அதற்கு உணவு கொடுத்து பழக்கியதால், அது ரோட்டிற்கு வந்து அடிபட்டு கஷ்டப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என முடிவு செய்து, பல பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கு நடத்தி வருகிறேன்.

முதலீடு

null

உண்மையை சொன்னால் இது காஸ்ட்லியான பொழுதுபோக்கு. இதிலிருந்து நமக்கு பெரிதாக ரிட்டன்ஸ் எதுவும் கிடைக்காது. ஆனால் கேமரா உபகரணங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்க்ரேட் செய்ய வேண்டும். அதற்கு முதலீடு செய்து தான் ஆக வேண்டும்.

என் பையில் என்ன இருக்கும்

null

கேமரா உபகரணங்கள் தவிர்த்து, ரெயின் கோட், எனர்ஜி பார்ஸ், ஜூஸ், ஷூஸ், பைனாகுலர், நோட், பென் இவைகளை எடுத்து செல்வேன்.

விருதுகள்

நான் முதலில் சொன்னது போல் பெரிய ரிட்டன்ஸ் எதுவும் இதில் இல்லை, ஆனால் நிறைய விருதுகள் வாங்கியுள்ளேன்.

என் புகுந்த வீட்டாரும் எனக்கு ஆதரவே

சமீபத்தில் தான் எனக்கு திருமணம் நடந்தது. என் புகுந்த வீட்டாரும் எனக்கு ஆதரவே. என் கணவரும் உனக்கு என்ன விருப்பமோ அதை செய் என்று சொல்லிவிட்டார், உனக்கு இங்கு எந்த தடையும் இல்லை என கூறிவிட்டார். அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று நான் நினைக்கிறேன். என் கணவர் என்னை ஆப்ரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளார் என கூறினார் திவ்யா பாரதி.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close