பெண்களுக்காக எழுதினேன்; எதிர்ப்பும் இருக்கு : Viral Lyricist Pottuvil Asmin Exclusive Interview

1 Reactions
thumb_upLike
commentComments
shareShare

விஜய் ஆண்டனியின் “நான்” திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்.

 

null

அவர் எழுத்தில் தற்போது வெளிவந்துள்ள பாடல் ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்கிற தனிப்பாடல்.கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக இந்தப் பாடல் இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

null

இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக. பாடலைப்பாடியுள்ளார் பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க.

 

பொத்துவில் அஸ்மின், ஏற்கனவே விஸ்வாசம்,அண்ணாத்த ஆகிய படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் வைரலாகின.ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.

 

மொழி தெரியாமலே உலக இசை இரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை இரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

null

இதனால் கவிஞர் பொத்துவில் அஸ்வின் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்தப் பாடல் குறித்து அவருடன் ஒரு நேர்காணல்

பெண்கள் கொண்டாடும் பாடல்

null

பொதுவாக காதலில் தோல்வி அடைந்த ஆண்கள் பெண்களை இழிவுபடுத்தி பாடல்கள் வந்துள்ளன. ஆனால் எந்த பெண்ணும் ஏமாற்றிய ஆண் குறித்து இவ்வாறு இழிவுபடுத்துவதில்லை. இந்த பாடல் வெளியான போது அனைத்து பெண்களும் கொண்டாடினார்கள். 50,000 பேர் இந்தப்பாடலை டிக்டாக் செய்துள்ளார்கள். 4 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தப்பாடலை யூ-ட்யூபில் பார்த்துள்ளார்கள்.

பெண்கள் தான் எல்லாம்

ஏமாறப்பட்ட பெண்களின் வலியை ஒரு ஆண் எழுதியுள்ளாரா என அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். பெண் தான் அனைத்தும், அவள் இல்லாமல் இந்த உலகமே இல்லை. அதனால் பெண்ணுக்காக நான் இதை எழுதியுள்ளேன் என்பது பெருமை.

என்னை கடிந்து கொண்ட ஆண்கள்

இந்தப்பாடல் நான் எழுதியதற்காக சில ஆண்கள் என்னை கடிந்து கொண்டார்கள், சில ஆண்கள் இந்தப்பாடலை அவர்களுக்கு ஏற்ற மாதிரி மேல் வெர்ஷன் செய்து வெளியிட்டார்கள். ஆனால் இது அனைத்தும் பெண்களுக்கும் பிடித்துள்ளது, அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்.

மொழி பெயர்ப்புக்காக என்னிடம் வந்த பாடல்.

null

இது சிங்களத்தில் வெளியான பாடல்,அதை தமிழில் வெளியிட வேண்டும், நீங்கள் அதற்கு தமிழ் வரிகள் எழுத வேண்டும் என கேட்டு கொண்டனர். ஆனால் அந்த வரிகளை அப்படியே மொழி பெயர்க்க வேண்டும் என கேட்டு கொண்டனர். நான் அதற்கு சம்மதிக்கவில்லை, இன்னொருவர் எழுதியை மொழிபெயர்க்க விருப்பமில்லை. அதனால் வேறு மாதிரியாக இதை எழுதினேன். அனைவருக்கும் இது பிடித்துவிட்டது.

மொழி புரியாத பாடல்

பாடலுக்கு இசையமைத்துள்ளார் இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக. பாடலைப் பாடியுள்ளார் பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க. மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட "மனிகே மகே ஹித்தே" பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஜய் ஆண்டனிக்கு கடமைப்பட்டுள்ளேன்

null

விஜய் ஆண்டனி நடித்த நான் படத்திற்கு பாடல் எழுத சர்வதேச அளவில் போட்டி வைத்தார் அதில் நான் வெற்றி பெற்றேன். எனக்கு அந்தப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார். அப்படி உருவானது தான் தப்பெல்லாம் தப்பேயில்லை என்ற பாடல். என்னை அறிமுகபடுத்தியது விஜய் ஆண்டனி அவர்கள், அதனால் நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.

அண்ணாத்த, விஸ்வாசம் வாய்ப்புகள்

null

கோச்சடையான் வெளியான சமயத்தில் அதில் நான் பாடல் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என முகநூலில் சில வரிகளை பதிவிட்டேன். உலகெங்கும் உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் அதை கொண்டாடினர். பின் விஸ்வாசம், அண்ணாத்த திரைப்படங்களில் ப்ரோமோ பாடல்கள் எழுதியது சந்தோசமாக இருந்தது.

நடிகர்கள் பாடல் எழுதுவது....

null

பாடல் எழுத கவிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, வார்த்தைகளை அழகாக கோர்க்க தெரிந்தால், வர்ணிக்க தெரிந்தால் போதும் பாடல் எழுதலாம். இங்கு யார் வேண்டுமானாலும் பாடல் எழுதலாம்.

இவ்வாறு பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் பொத்துவில் அஸ்மின்

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close