இந்த 3-யும் விட்டிங்கனா போதும் - Vidyulekha Reveals Transformation Secret | Weight Loss Secret

thumb_upLike
commentComments
shareShare

நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் வித்யூலேகா ராமன். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலம் இன்னும் பிரபலமானார்.

சற்று எடை அதிகமாக இருந்த வித்யூ ராமன், சமீபத்தில் உடை எடை குறைந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அவரின் வெயிட் லாஸ் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இதையடுத்து தன்னுடைய வெயிட் லாஸ் குறித்து வித்யூ நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

null

அவர் கூறும்போது, இது ஒரு நாளில் நடந்து விடவில்லை. ஒரு வருடம் நான் தினமும் உடற்பயிற்சி செய்தேன். எதுவும் ஒரு இரவில் நடந்து விடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். என்னிடம் மூன்று மந்திரங்கள் உள்ளது. அது என்னவென்றால், முதலில் உங்களுக்கு என்ன தேவை, எது உங்கள் டார்கெட் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், இரண்டாவது அதை பாலோ செய்ய வேண்டும், மூன்றாவது ரொம்ப முக்கியமானது பொறுமை.

உங்களுக்கு ஐந்து கிலோ குறைக்க வேண்டும் என்றால் ஒரு மாதம் ஒரு கிலோ குறைப்பேன் என டார்கெட் வைத்துக் கொள்ளுங்கள். அதை விடாமல் பாலோ செய்ய வேண்டும். ரிசல்ட் எப்போதும் ஒரே நாளில் தெரிந்து விடாது அதனால் பொறுமையாக இருங்கள். காத்திருங்கள் என கூறுகிறார் வித்யூ.

null

சாப்பாடு என்பது மிக முக்கியம், நான் சாப்பிடாமல் இருந்தால் எடை குறைந்து விடுவேன் என்பது உண்மையல்ல. சரியான அளவில், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதம் குறைவான அளவில் நான் எடுத்துக் கொள்வேன், சில சமயம் கினவா சாப்பிடுவேன்.

காய்கறி அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெண்டக்காய், கோஸ் போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாக்லேட் சாப்பிட வேண்டும் என தோன்றினால், டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள். அது நல்லது. எப்போதாவது சாப்ட் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கலாம். ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவில் ஒரு கண் வைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவை தான் எடுத்துக் கொள்கிறோமா என பார்த்துக் கொள்ளுங்கள்.

null

நான் வெயிட் லாஸ் செய்ததற்கு காரணம் கிண்டல் கேலிகளுக்கு பயந்து அல்ல. நான் உடை எடை அதிகமாக இருந்ததால், எனக்கு டையப்பெட்டீஸ், பிபி வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என டாக்டர்கள் கூறினார்கள். அதே போல் எனக்கு PCOS பிரச்சனை இருந்தது. நான் உடல் எடை குறைத்தால் தான் அதன் வீரியம் குறையும், இல்லை என்றால் அதன் வீரியம் அதிகமாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால் தான் நான் எடை குறைத்தேன்.

நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் நான் குறைத்தேன், வேறு எந்த காரணமும் இல்லை. நான் குண்டாக இருந்தபோதும் நான் சந்தோஷமாக, தன்னம்பிக்கையுடன் தான் இருந்தேன். ஆனால் ஆரோக்கியமாக இல்லை என தெரிவித்துள்ளார்.

null

அவரின் உடற்பயிற்சி குறித்து அவர் கூறுவது என்னவென்றால், நான் ஜிம் சென்று மட்டும் உடற்பயிற்சி செய்யவில்லை. யோகாவும் எனக்கு உதவியது என்கிறார் வித்யூலேகா ராமன்.

நிச்சயமாக அவரின் இந்த வெயிட் லாஸ் பலருக்கு உத்வேகம் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close