சுமங்கலி அமங்கலி அப்படி ஏதும் இருக்கா ? | Bombay Gnanam Interview

thumb_upLike
commentComments
shareShare

சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் பட்டம்மாள் அப்பத்தாவாக வரும் பம்பாய் ஞானம், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவற்றில் பிரேமி, கோலங்கள் மற்றும் சிதம்பர இரகசியம் உள்ளிட்ட தொடர்கள் சிலவாகும். ஞானத்திற்கு தமிழக அரசின் கலைமாமணி விருது 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

null

அதுமட்டுமல்ல அவ்வை சண்முகி, ஆஹா, நள தமயந்தி, அழகிய தமிழ் மகன் என பல படங்களில் இவர் நடித்துள்ளார், இருந்தாலும் இந்த காலத்து இளைஞர்களுக்கு இவர் பரிச்சயமானது எதிர்நீச்சல் பட்டம்மாள் ஆக தான்.

இவர் நாம் பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் குறித்து சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

ஆண் பாதி பெண் பாதி

null

இரு மனங்கள் திருமணம் செய்து ஒரு குடும்பமாக மாறும் போது இருவருக்கும் கடமைகள் உண்டு. ஆண் பாதி, பெண் பாதி. முன்னோர் காலத்தில் ஆணாதிக்கம் இருந்தது, இப்போது பெண்ணாதிக்கம் தான். அதனாலேயே என்னவோ இருவருக்கும் போட்டி மனப்பான்மை அதிகமாகி விட்டது. நீ இந்த வேலையை செய்தாயா, நீ செய்தாயா என போட்டி போடுகிறார்கள். ஆண் செய்யவில்லை என்றால் பெண் செய்யலாம். அவன் செய்யாமல் நாசமாக போகிறான் என்பதற்காக நாம் ஏன் அப்படி போக வேண்டும். நாம் நல்லதை சிந்திக்கலாமே.

பெண்களுக்கென சில கடமைகள் உண்டு

null

கோலம் பெண்கள் போடுவது, நமக்கே அந்த நளினமும் பொறுமையும் உண்டு. அது ஏன் நீ செய்ய மாட்டேன் என்கிறாய் என அவர்களை கேட்க முடியாது. அதுபோல் விளக்கு நாம் ஏற்றலாம். குழந்தை வளர்ப்பு பெண்கள் தான் முக்கியம். ஒரு ஆண்னை விட பெண்கள் தான் குழந்தை வளர்ப்பதில் சிறந்தவர்கள். தாய்மையும், பொறுமையும் நமக்கே உரித்தானது. அந்த பொறுமையினால் இவர்கள் ஆணாதிக்கம் செய்கிறார்கள், அதை பொறுத்து போக நான் சொல்லவில்லை.

மற்றவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்

null

சில பெண்கள் திருமணத்திற்கு முன், என் கணவன் எனக்கு என்ன செய்ய போகிறான், என் மாமியார் என்ன செய்ய போகிறார் என யோசிக்கின்றனர். நீ அவர்களுக்கு என்ன செய்ய போகிறாய் ? அதை யோசி. நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய போகிறோம், குழந்தைகளுக்கு என்ன செய்ய போகிறோம். இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய போகிறோம் என்பதை தான் யோசிக்க வேண்டும்.

சுமங்கலி அமங்கலி அப்படி ஏதும் இருக்கா ?

null

வீட்டுக்கு வருபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குங்குமம் கொடுக்கலாம். இப்போது சுமங்கலி, கணவர் இல்லாதவர் என்ற பாகுபாடு உள்ளது, என்னை பொறுத்தவரை அந்த பாகுபாடு தவறு என்று நான் சொல்வேன். ஏனென்றால் குங்குமமோ, தலையில் பூ வைத்துக் கொள்வதோ கணவர் வந்தபின் வந்தது அல்ல, சிறுவயதில் இருந்து நாம் வைக்கிறோம். கணவர் இல்லாதவர் பூவையும், குங்குமத்தையும் உதறவேண்டும் என்பதை நான் ஏற்க மாட்டேன்.

கணவன் இறந்தபின் தாலியை கழற்ற வேண்டும் ?

null

திருமணத்தின் போது நல்ல நேரம் பார்த்து, அங்கு இருக்கும் அனைவரும் ஆசீர்வாதம் செய்து, அம்மா அப்பா கையால் அந்த மாப்பிள்ளை பெண் கழுத்தில் கட்டுகிறார். ஆனால் இன்றைய காலத்தில் எத்தனை பேர் போட்டுக் கொள்கிறார்கள் என தெரியவில்லை. என்னை கேட்டால் போட்டுக் கொள்வது நல்லது. நமக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை அதைப் பார்த்து மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

கணவன் இறந்த பின் தாலியை கழட்டுவார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை, தாலியை கழட்டினால் மட்டும் கணவன் இல்லை, அவருடன் வாழ்ந்த வாழ்க்கை மறைந்து விட்டது என்றாகி விடுமா ? எங்கள் வீட்டில் கூட இது நடந்தது, ஒருவர் வந்து சொன்னார் பத்தாவது நாள் தாலி கழட்ட வேண்டும் என்று. என் மகனுக்கு கோபம் வந்துவிட்டது ஏன் என கேட்டான், இல்லை அப்பா கட்டினது என கூறினார்கள். அதற்கு என் மகன், அப்பா கட்டின தாலியை கழட்ட வேண்டும் என்றால் அப்பாவின் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோமே, எங்களை என்ன செய்வது என்றான். இது சரியான கேள்வி தான்.

சாஸ்திரங்களை நம்ப வேண்டும்

null

அம்மாவுக்கு பிடித்தால் அவர் போட்டுக் கொள்ளட்டும், இன்னொருத்தர் வற்புறுத்தி அதை அவர் கழட்ட கூடாது என்றான். அதற்கு நான் என்ன சொன்னே என்றால், சாஸ்திர சம்பிரதாயங்கள் என ஓன்று உள்ளது. அதை நாம் பின்பற்றுகிறோம். சாஸ்திரப்படி நடக்கும் சடங்கில் இதுவும் ஓன்று. நமக்கு சாதகமாக இருந்தால் அதை நம்புவது, இல்லை என்றால் தூக்கி போடுவது என இருக்க கூடாது.

இப்போது நாம் வெளிநாடு செல்கிறோம், அங்கு ஒரு ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்றால் அவன் சொல்லும் டிரஸ் கோடை நாம் பின்பற்ற வேண்டும். அதற்காக நாம் ஐம்பதாயிரம் செலவழித்து அந்த கோடை வாங்கி போட்டு செல்கிறோம். அங்கு அவன் சொல்லும் ரூல்ஸை பின்பற்றும் நாம் ஏன் நம் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்ற கூடாது. நாம், நம் சம்பிரதாயங்களை மதிக்க வேண்டும் என்றார் பம்பாய் ஞானம்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close