Varsha Bollamma's Skincare Routine & Beauty Secrets for Glowing Skin You Should Definitely Know

thumb_upLike
commentComments
shareShare

டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் வர்ஷா பொல்லம்மா, பார்ப்பதற்கு நஸ்ரியா போல் இருப்பதாலே இவருக்கு சினிமாவின் கதவுகள் திறந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் வர்ஷா.

null

 

இவர் 2015-ம் ஆண்டு 'சதுரன்' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர், பிகில் படத்தில் விஜய்யுடனும் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

இப்போது நமக்காக அவரின் சரும பராமரிப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.

ஸ்கின்கேர்

null

ஸ்கின் கேர் ரொம்ப முக்கியம். நான் பேசிக் ஸ்கின் கேர் பின்பற்றுவேன். அது எல்லாம் ஒரு பகுதி தான், சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நான் நிஜமாக சொல்கிறேன், ஆரோக்கியமான உணவுகளை உண்டு நான் டையட்டில் இருக்கும்போது என் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் உணவு ரொம்ப முக்கியமானது.

மேக்கப்

null

நான் மேக்கப் அவ்வளவாக போட மாட்டேன், அது எனக்கு செட் ஆகாது. ரொம்ப சிம்பிளான மேக்கப் தான் என்னுடையது. நான் எங்காவது வெளியே செல்ல வேண்டுமென்றால் ஐ-லைனர் மற்றும் லிப்ஸ்டிக் மட்டும் தான் பயன்படுத்துவேன். இது தான் என்னுடைய மேக்கப்.

மேக்கப் ரிமூவ்

null

ஷூட்டிங் நாட்களில் அதிக மேக்கப் போடுவோம், அது எனக்கு பிடிக்காது வந்தவுடன் மேக்கப் எடுத்துவிட்டு தான் தூங்க செல்வேன். மேக்கப் உடன் தூங்க செல்வது உங்கள் சருமத்திற்கு நல்லது அல்ல. எவ்வளவு நேரம் ஆனாலும் சரி மேக்கப் எடுத்துவிட்டு தான் தூங்க செல்வேன் என்று தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார் வர்ஷா பொல்லம்மா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close