BJP தலைவர் அண்ணாமலையின் வெற்றிகரமான காதல் கதை | BJP K.Annamalai | AkilaAnnamalai

thumb_upLike
commentComments
shareShare

கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய போது கர்நாடக சிங்கம் என அங்குள்ள மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தான் அண்ணாமலை. அதன்பின் தேசிய கட்சியான பா.ஜ.க-வில் இணைந்து, ஒரே வருடத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் ஆனார். தன்னுடைய நியாயமான கம்பீர பேச்சால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் அண்ணாமலை காதல் திருமணம் செய்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

null

அகிலா சுவாமிநாதன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுடைய மனைவி. கார்பரேட் மற்றும் தொழில் வளர்ச்சி பிரிவில் நல்ல அனுபவம் கொண்டவர்.

கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி - பரமேஸ்வரி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறக்கிறார் அண்ணாமலை. தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தவுடன், கோவையில் உள்ள புகழ் பெற்ற P.S.G கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிறார். அங்கு தான் அவரின் வாழ்க்கை துணையான அகிலா சுவாமிநாதனை சந்திக்கிறார் அண்ணாமலை.

null

அந்த சமயத்தில் அகிலா அதே கல்லூரியில் B.SC Computer Science படித்து வந்தார். இருவருமே முதலில் நல்ல நண்பர்களாக இருந்து, பின் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் கல்லூரி படிப்பை முடித்த பின், அண்ணாமலை லக்னோவில் உள்ள Indian Institute of Management-ல்  தன்னுடைய MBA படிப்பை படிக்க ஆரம்பிக்கிறார்.

அகிலாவும் பெங்களூரில் உள்ள Indian Institute of Management - ல் MBA படிக்க ஆரம்பிக்கிறார். அண்ணாமலை அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு IPS ஆபிசர் ஆகனும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அகிலாவிற்கு வியாபாரம், தொழில் வளர்ச்சி போன்ற பிரிவுகளில ஈடுபாடு அதிகமா இருந்தது.

அதனால், பெங்களூரில் MBA படித்து கொண்டிருக்கும்போதே Aditya Birla Company-ல் மூன்று மாத Internship program முடித்து, பின் மும்பையில் JSW இரும்பு நிறுவனத்தின் அசிஸ்டென்ட் மேனேஜராக சில காலமும், டெபுட்டி மார்கெட்டிங் மேனேஜர் ஆக சில காலமும், இரண்டு வருடங்கள் அங்கு பணிபுரிந்தார்.

null

அதே போல் மீண்டும் கோவை வந்து, Payoda Technologies என்ற கம்பெனியில் மார்கெட்டிங் மேனேஜராகவும், மீண்டும் பெங்களூரில் உள்ள HP நிறுவனத்தில் பிசினஸ் பிளானிங் மேனேஜராக 8 வருட காலம் பணிபுரிந்து உள்ளார்.

இடைபட்ட காலத்தில் அண்ணாமலை IPS தேர்ச்சி பெற உத்த்ரான்சலில் ஒரு 4 மாதம் பயிற்சி, 2011-ல் இருந்து 2013 வரை சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியில், Officer Trainee-யாக பணிபுரிந்துள்ளார். இந்த கால கட்டத்தில் தான் இத்தனை ஆண்டுகளாக காதலித்த அகிலாவை மணமுடிக்கிறார்.

null

அண்ணாமலை IPS, அகிலா Management என்று இருவருக்கும் இரு வேறு கனவுகள், இரு வேறு லட்சியங்கள். ஆனால் இவர்களின் வேலைகளால் எந்த ஒரு சிக்கலும் இவர்களின் காதலுக்கு வரவில்லை. இருவீட்டார் சமதத்துடன் அண்ணாமலை - அகிலா திருமணம் நடந்தது. கால போக்கில் கர்நாடகா உடுப்பிக்கு எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்ட அண்ணாமலை, பின்னாடி கார்காலா, சிக்மகலூர், பின் தென் பெங்களூர்க்கு டெபுட்டி கமிஷனராக இணைகிறார்.

கிட்டத்தட்ட 15 வருட காலம் கார்பரேட் அனுபவத்தை பெற்ற அகிலா அண்ணாமலை அவர்களோடு சேர்ந்து CoRE Talent and Leadership Pvt. Ltd என்ற கம்பெனியை நிறுவி இன்றுவரை அதன் துணை நிறுவினராக பணிபுரிந்து வருகிறார். அண்ணாமலை IPS பதவியில் இருந்து விலகி, அரசியலுக்கு வந்த சமயத்தில் வீட்டுக்கான செலவுகளை அகிலா தான் பார்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

null

இவருடன் பணிபுரிந்த அத்தனை பேரும் அகிலாவின் பகுப்பாய்வு மற்றும் தொழில் யுக்திகளை ரொம்பவே சிலாகித்து பேசுவதுண்டு. அண்ணாமலை அகிலா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர் முதல் முதலில் அரவகுறிச்சி தொகுதியில் போட்டியிட்ட போது, அகிலாவும் அவரது கணவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

The Man Behind the Women, the Women behind the Man என்று சொல்வர். அதேபோல் அகிலாவும், அண்ணாமலையும் ஒருவருக்கொருவர் துணையாக காதலுடன் இணைந்து பயணித்து வருகின்றனர்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close