டப்பிங் கலைஞராக தனது கேரியரை துவங்கிய ரவீணா இப்போது நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஐ, தெறி படங்களில் எமி ஜாக்சனுக்கு, கத்தி படத்தில் சமந்தவுக்கும், வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் படங்களில் அமலா பாலுக்கும், அனேகன் படத்தில் அமைராவுக்கும் பின்னணி குரல் கொடுத்தவர் தான் ரவீணா. இவரது அம்மா ஸ்ரீஜா ரவியும் டப்பிங் கலைஞர் தான்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி வந்த ரவீணா, ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலமாக நடிகையாகவும் மாறினார். அதைத்தொடர்ந்து ராக்கி, வீரமே வாகை சூடும் படங்களிலும் நடித்துள்ளார் ரவீணா.
இப்போது நமக்காக அவரின் சரும பராமரிப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.
உணவு
அவர் கூறும்போது, உணவு ரொம்ப முக்கியம். எனக்கு ஆயில் ஸ்கின், ஆயில் ஸ்கின் இருப்பவர்களுக்கு தான் அதிகமாக முகப்பரு வரும். அதுமட்டுமில்லாமல், நான் சாக்குலேட் அதிகமாக சாப்பிடுவேன். அது சருமத்திற்கு நல்லதே இல்லை. அதனால் எனக்கு அதிக முகப்பரு வந்தது. நான் சினிமாவில் நடிக்கும்போது எனக்கு மேக்கப் இல்லை, அதனால் நம் சருமம் எப்படி உள்ளதோ அப்படியே கேமராவில் காட்டும். அதற்காக நான் சாக்குலேட் சாப்பிடுவதை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். இதுவே எனக்கு பெரிய மாற்றத்தை கொடுத்தது. அதனால் சாக்குலேட் உண்பதை தவிருங்கள்.
ஹேர் கலரிங்
காலேஜ் படிக்கும்போது என் தோழிகளுடன் சேர்ந்து ஹேர் கலரிங் செய்தேன். அது ப்ளான்ட் கலர். அது என்ன ஆகும் என்றால், தலைக்கு குளிக்க குளிக்க வெள்ளை நிறத்தில் மாறிவிடும். என் டீச்சர் பார்த்துவிட்டு என்னமா உனக்கு இந்த வயதில் இப்படி வெள்ளை முடி வந்துவிட்டது என்றார். என் வாழ்க்கையில் மீண்டும் அந்த தவறை செய்ய கூடாது என்று நினைக்கிறேன்.
மேக்கப் ரிமூவர்
நான் ரொம்ப சோம்பேறி என்றே சொல்ல வேண்டும். வெளியில் சூட்டிங் சென்று வந்தால் அவ்வளவு அசதியாக இருக்கும், வீட்டுக்கு வந்தவுடன் தூங்க வேண்டும் என்று இருக்கும். ஆனால் மேக்கப் ரிமூவ் செய்ய வேண்டும். அதனால் எவ்வளவு நேரம் ஆனாலும், மேக்கப் ரிமூவ் செய்து விட்டு தான் தூங்குவேன். மேக்கப் எடுக்காமல் அப்படியே விட்டால், அதுவே சருமத்திற்கு பல தீங்குகளை விளைவிக்கும்.
DE TAN
டப்பிங் செல்லும்போது ஏ.சி.ரூம். அதனால் சருமத்திற்கு எதுவும் ஆகாது. ஆனால் நான் சூட்டிங் செல்லும்போது வெயிலில் உடல், முகம் எல்லாம் கருத்து போய்விடும். இதை சரிசெய்ய நம் வீட்டில் உள்ள பொருட்கள் தான் நான் பயன்படுத்துவேன். தக்காளி, தயிர் அல்லது கடலைமாவு இவை நன்றாக உதவும். நம் சருமத்தின் உண்மையான நிறத்திற்கு அது கொண்டு வந்து விடும் என்று அவரின் சரும பராமரிப்பு பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டார் ரவீணா.