காதல் என்பது புனிதமானது அது ஜாதி, மதம், மொழி அனைத்தையும் கடந்தது. மதங்களால் இன்று பிரியும் காதல் பறவைகள் ஏராளம். ஆனால் பத்து வருடங்கள் காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் இணைந்துள்ளது ஒரு காதல் ஜோடி. ஷைனி என்ற கிறிஸ்துவ பெண்ணும் அப்துல் என்ற முஸ்லிம் பையனும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துக்காக காத்திருந்து பத்து வருடங்கள் கழித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஒரு நேர்காணல்.
முதல் சந்திப்பு
ஷைனி என்னுடைய காலேஜ் ஜூனியர் பார்த்தவுடன் எனக்கு ஒரு பீலிங் என அப்துல் ஆரம்பிக்க, அப்துலை பார்த்ததும் எனக்கு முதலில் பயமாக இருந்தது, அதுவே எங்கள் முதல் சந்திப்பு என கலகலப்பாக பேச தொடங்கினார் ஷைனி.
காதல் உருவானது எப்படி
முதலில் எனக்கு பயமாக இருந்தது, ஏனென்றால் நான் கிறிஸ்டின் அப்துல் முஸ்லிம். நான் பிராக்டிகலாக யோசித்தேன், இது நடக்காது என நினைத்தேன். ஆனால் இப்படி ஒருத்தர் எங்கு தேடினாலும் கிடைக்காது என தெரிந்தபிறகு நான் சம்மதித்தேன் என்றார் ஷைனி.
முதல் அவுட்டிங்
காதலிக்க ஆரம்பித்த மூன்று மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக வெளியே செல்லாலம் என தோன்றியது. நான் எதுவாக இருந்தாலும் என் அக்காவிடம் தான் முதலில் சொல்வேன். நான் ஒருத்தரை விரும்புகிறேன், அவர் பெயர் அப்துல் என சொன்னபோது அக்கா ஷாக்காகி விட்டாள். அவளிடம் தான் நான் அனுமதி வாங்கி அவுட்டிங் சென்றேன். என் அப்பா ஸ்கோடா என்ற கார் கம்பெனி வைத்துள்ளார். அதை தாண்டி தான் நாங்கள் செல்ல வேண்டும். அதற்கே அப்படி பயப்படுவேன் ஒரு வேளை அப்பா பார்த்து விட்டால் என்ன செய்வது என்று பயப்படுவேன்.
வீட்டில் பிரச்சனை
ஆனால் வெட்டில் தெரிந்துவிட்டது, நான் அம்மாவிடம் சொல்லி அம்மா அப்பாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசினார். என் வீட்டில் என்னை அடித்தது கிடையாது, திட்ட கூட மாட்டார்கள் ஆனால் அட்வைஸ் கொடுப்பார்கள்.
பிரச்சனை தந்த சொந்தங்கள்
அம்மா அப்பா கூட எதுவும் என்னை சொல்லாத போது, என் சொந்தங்கள் என்னை பற்றி எதுவும் தெரியாத என் சொந்தங்கள் ரொம்ப தவறாக பேசினர். என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை, அதனால் நான் அப்துலிடம் சொல்லி கிட்டதட்ட மூன்று மாதங்கள் பேசாமல் இருந்தோம், ஆனால் மற்றவர்களுக்காக என் காதலை என்னால் தியாகம் செய்ய முடியாது என நான் உறுதியாக இருந்தேன்.
என் தோழி தான் காரணம்
நாங்கள் பேசாமல் இருந்தபோது, என் தோழி தான் எங்களை சந்திக்க வைத்தாள். எங்களை விட எங்கள் காதம் மேல் அவள் நம்பிக்கை வைத்திருந்தாள். எங்களிடம் இல்லாத போட்டோஸ் கூட அவளிடம் இருந்தது. என் நண்பர்கள் தான் என் திருமணம் எப்போது நடக்கும் என காத்திருந்தனர்.
எப்படி பெற்றோரை சம்மதிக்க வைத்தோம்
பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது என்பது நடக்காத காரியமாக இருந்தது. நாங்கள் காத்திருந்தோம், அந்த காலம் அவர்களை மாற்றி விட்டது. கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவரும் நல்ல மனதோடு எங்களை வாழ்த்தினர். இந்த ஜெனரேஷன் மக்கள் மாறி விட்டனர்.
காத்திருக்க தயாரானோம்
பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் நடக்க வேண்டும் என உறுதியாக இருந்தோம். ஏற்கனவே பத்து வருடங்கள் காத்திருந்தோம் இன்னும் ஐந்து வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை என தோன்றியது. பெற்றோர் தான் முக்கியம் அவர்களை காயபடுத்த கூடாது.
பிரம்மாண்டமாக நடந்த திருமணம்
நான் முதலில் இருந்தே அதிகமாக கனவு காண்பேன், என் திருமணம் இப்படி நடக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என ஆனால் நான் எதிர்பார்த்ததுக்கும் மேலாக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. எங்கள் முறைப்படி சர்ச்சில் வைக்க வேண்டும், ஆனால் அது வேண்டாம் என ஒரு ரிஷப்சன் மாதிரி வைத்து அனைவரையும் அழைத்து அங்கு தாலி கட்டி கல்யாணம் நடந்தது.
தாலியில் உள்ள குறியீடு
தாலியில் பொதுவாக மதம் சம்பத்தப்பட்ட அடையாளம் இருக்கும், ஆனால் எந்த மத அடையாளங்களும் இருக்க கூடாது என முடிவு செய்தோம். வாழ்க்கை முழுவதும் அணிய போவது நான் அதனால் என் விருப்பபடி இருக்கட்டும் என அப்துல் சொன்னார். ஒரு ப்ளைன் மாங்கல்யம் எடுத்து அதில் எங்கள் இருவர் பெயரும், ஹார்ட்டும் போட்டு மாங்காய்கள் மற்றும் நான்கு தங்க காசுகள் வைத்து நான் போட்டுள்ளேன்.
உண்மையாக இருக்க வேண்டும்
பத்து வருடங்கள் ஆகியும் நாங்கள் சேர்ந்து இருக்கோம் என்றால் அதற்கு காரணம் நாங்கள் எதையும் மறைக்க மாட்டோம், உண்மையை சொல்லி திட்டு வாங்கி கொள்வோம். உண்மையாக இருந்தாலே எந்த காதலும் தோல்வியை சந்திக்காது.
நிறைய காதலர்கள் இன்னும் பிரச்சனையை சந்திக்கிறார்கள்
எங்கள் திருமணத்திற்கு பின் நிறைய பேர் எங்களுக்கு மெசேஜ் செய்தார்கள், நான் வேறு மதம், நான் காதலிப்பவர் வேறு மதம், எப்படி பெற்றோரை சம்மதிக்க வைப்பது என கேட்கின்றனர். அப்போது தான் எவ்வளவு பேர் இன்னும் மதத்தினால் சேர முடியாமல் கஷ்டப்படுகின்றனர் என தெரிந்தது.
இவ்வாறு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர் ஷைனி அப்துல் தம்பதியினர்.