பாஜகவில் மைனாரிட்டி நலப்பிரிவு தலைவராக இருக்கும் டெய்சி சரணை பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில தலைவர் திருச்சி சூர்யா போன் செய்து மிரட்டியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாஜகவில் சமீபத்தில் இணைந்த திருச்சி சூர்யா, ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாஜகவின் தமிழக நிர்வாகிகளான டெய்சி, திருச்சி சூர்யா இடையேயான ஆபாச பேச்சு குறித்த கட்சி ரீதியான அதிகாரப்பூர்வ விசாரணை முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அக்கா, தம்பியாக இணைந்து செயல்படுவோம் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டெய்சியின் மகளும் சித்தா மருத்துவருமான ஷர்மிகா அவரின் கருத்துகளை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆடியோ எப்படி லீக்கானது
அவர் கூறியுள்ளதாவது, இந்த ஆடியோ எப்படி லீக்கானது என தெரியவில்லை. இது இவ்வளவு வைரலாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விஷயத்தில் பலரும் அம்மாவுக்கு தான் சப்போர்ட் செய்தார்கள். ஆனால் இறுதியில் அம்மா, சூர்யா சிவாவை மன்னித்து விட்டார்.
அம்மாவின் சமாதானம்
இவ்வளவு மோசமாக பேசிய நபரை அம்மா ஏன் மன்னித்தார் என தெரியவில்லை, ஏன் எதற்காக என நானும் என் சகோதரியும் அம்மாவிடம் கேட்கவில்லை. காரணம், அம்மா ஒரு முடிவு எடுத்தால் நிச்சயம் யோசித்து தான் எடுப்பார், அவரின் செயல் சரியானதாக இருக்கும் என்பதால் நாங்கள் எதுவும் கேட்கவில்லை.
எங்கள் கைகள் கட்டப்பட்டது
எந்த மகளுக்கும் தன் தாயை ஒருவர் பேசினால் கோபம் வரும். என் அம்மாவுக்கும் கோபம் வந்தது, வருத்தப்பட்டார். ஆனால் கட்சி என ஒன்று உள்ளது. அவர்கள் என்ன பேசினார்கள், எதற்காக சமாதானம் என தெரியவில்லை. எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என சொல்லலாம்.
நான் கருத்து சொல்ல விரும்பவில்லை
நான் அந்த ஆடியோவை கேட்கவில்லை, அதை கேட்டால் என்னால் சும்மா இருக்க முடியாது. அதனால் நான் அந்த ஆடியோவை கேட்கவில்லை. அதை தாண்டி அவர்கள் இருவரும் ஒரே கட்சியில் உள்ளார்கள். இந்த விஷயத்தில் எனக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை என கூறினார் டாக்டர் ஷர்மிகா.