பழங்கள் சருமத்திற்கு இயற்கையின் அமுதம் என்று கூறப்படுகிறது. அதேபோல பழச்சாறுகளுக்கும் இது பொருந்தும். பொதுவாக பெண்கள் தங்கள் சருமத்தில் வறட்சி மற்றும் பொலிவற்ற தன்மை போன்ற சிக்கலைகளை எதிர்கொள்கின்றனர். இதனை சரிசெய்ய பேஷியல், பேஸ் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், முகப்பொலிவு என்பது வெறும் ஒப்பனை அலங்காரங்களால் மட்டும் கிடைக்காது. உடலின் உட்புற அமைப்பு ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும் போது முகப்பொலிவு தானாக வரும். அப்படியானால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருவர் கட்டாயம் பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
அப்படி சருமம் பொலிவு பெற எந்த மாதிரியான பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார் டாக்டர் ஷர்மிகா.
நெய்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுத்தமான பசு நெய் எடுத்துக் கொள்ள வேண்டும். நெய் உருக்கி, நீர் சுருக்கி, மோர் பெருக்கி குடிக்க வேண்டும் என்ற பழமொழியே உண்டு. நெய் அதிகாலையில் குடிப்பதனால் நம் சருமம் பொலிவாகும்.
பிரம்ம முஹூர்த்த வேலை என கூறப்படும் 3.30 – 5.30 சமயத்திற்குள் நெய் உட்கொள்ள வேண்டும். அதன்பின் நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்தலாம். அதன்பின் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஜீரா தண்ணீர்
தண்ணீரில் ஜீரகம் அல்லது சியா விதைகள் கலந்து குடிப்பது மிக நல்லது. உங்கள் சருமத்தை அவ்வளவு அழகாக வைத்துக் கொள்ள இது உதவும். நிறைய பேர் கொலாஜன் பவுடர் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது இயற்கையாகவே ஜீரகம் மற்றும் சியா விதை தண்ணீரில் உள்ளது.
காலை உணவு
காலை உணவாக ட்ரை ப்ரூட்ஸ் ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஐந்து பாதாம், ஐந்து பிஸ்தா, பதினைத்து ட்ரை கிரேப்ஸ், மூன்று பேரிச்சைபழம், இரண்டு அத்திபழம், ஐந்து வால்நட் இவை அனைத்தையும் இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை எடுத்துவிட்டு புது தண்ணீர் சேர்த்து மிக்ஸில் அடித்து ஜூஸ் ஆக்கி குடிக்க வேண்டும்.
இது வாரத்திற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும், ஜூஸ் ஆக இல்லாமல் அப்படியே நான் சாப்பிடலாமா என கேட்டால் நிச்சயம் கூடாது, அப்படி எடுத்துக் கொண்டால் சொத்தை பல் வருவதை தடுக்க முடியாது. இந்த ஜூஸ் தொடர்ந்து எடுத்து வந்தால் உங்கள் சருமம ஆரோக்கியமான பொலிவை பெரும்.
கிட்னியில் கல் இருப்பவர்கள், சக்கரை நோய் வியாதி இருப்பவர்கள் இந்த ஜூஸ் குடிக்க வேண்டாம்.
மாதுளை ஜூஸ்
இன்னொரு ஜூஸ் நான் குடிக்க சொல்வது மாதுளை தான். பால், ஜீனி, ஐஸ் சேர்க்காமல் மாதுளை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.
ஏன் சரும பிரச்சனைகள் வருகிறது ?
குடலில் அழுக்கு இருப்பதால் முகத்தில் பிரச்சனை வருகிறது. கரும்புள்ளிகள், நிறம் கருத்து போவது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்யுங்கள், அப்போது வேர்வை அதிகம் வரும். நம் உடல் அதிகம் வேர்த்தால் தான் உடலுக்குள் இருக்கும் கிருமி வெளியே வரும். அதன்பின் தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்
ஸ்கின் டேன்
முகம் நிறம் மாறுவது இயற்கையான ஒன்று தான், குடலில் அழுக்கு இருந்தாலும், வெயிலில் சென்று வந்தாலும் முகம் கருப்பாக மாறும். இதற்கு ஒரே தேர்வு கற்றாழை தான். உலக அழகி கிளியோபாட்ராவே கற்றாழை தான் உட்கொள்வாராம். இந்த கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து ஏழு முறை தண்ணீரில் கழுவி அதன்பின் ஜூஸ் ஆக மாற்றி குடிக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் உங்க முகம் அழகாவது உறுதி என கூறுகிறார் டாக்டர் ஷர்மிகா.