வாடகை தாய்-பெண்களுக்கு நடக்கும் அநீதியை சொல்லும் யசோதா படம்: Yashoda Movie Surrogacy Issue |Samantha

thumb_upLike
commentComments
shareShare

சமந்தா நடித்துள்ள யசோதா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா Myositis நோயால் ஏற்பட்ட உடல் நலக்குறைவையும்  தாண்டி, யசோதா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆன சமயத்தில் சமந்தா, ட்ரிப்ஸ் எடுத்துகிட்டே, யசோதா படத்துக்கான டப்பிங் வேலையை முடித்தேன், ட்ரைலருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு ரொம்ப நன்றி, என பதிவிட்டிருந்தார்.

null

யசோதா படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது வாடகை தாய்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு நடக்கும் அநீதியை பற்றி பேசும் கதைகளம் என  தெரிந்து விட்டது. வாடகை தாயாக இருக்க சம்மதிக்கும் சமந்தா, Eva என்ற வாடகை தாய் பராமரிப்பு மையத்தில் சேர நேறிடுது. அந்த நிறுவனத்தில் யாருக்கும், பிறக்கும் குழந்தை யாருக்கு போய் சேரும் என்ற விஷயத்தை சொல்வதில்லை, அதற்கு பதிலா, சமந்தாவோட அங்க இருக்கும் அத்தனை வாடகை தாய்களிடமும் உங்களின் குழந்தை VIP-கள், கோடீஸ்வரரர்கள் வீட்டில் வளர போகிறார்கள் என்று மட்டும் சொல்கிறார்கள்.

null

யசோதா என்னும் பெயர்கொண்ட சமந்தாவிற்கு, இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அந்த நிறுவனமும் அங்கு இருக்கும் அனைத்து பெண்களையும் நன்றாக பராமரித்து வருகிறார்கள், ஆனால் திடீர் என காஜல் என்ற பெண்ணிற்கு உடல் நிலை மோசமாகிறது, பரபரப்பா இருக்கும் நிலையில் அந்த நிறுவனம் தரப்பிலிருந்து சட்டவிரோதமான பல விஷயங்கள் நடக்கின்ற மாதிரி காட்சியமைக்கபட்டிருக்கு.

null

குறிப்பாக, ட்ரைலரில் "உனக்கு வேண்டியது பணம், அவங்களுக்கு வேண்டியது குழந்தை" என்ற வசனம், வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் விஷயத்தை எப்படி ஒரு வியாபாரமாக பார்க்கப்படுது, என்ற விஷயத்தை குறிக்கின்றது.

null

ட்ரைலர் பார்த்த பல பேருக்கும் வாடகை தாய்களை பராமரிக்க இப்படியெல்லாம் நிறுவனங்கள் இருக்கா? என வியப்பளித்துள்ளது. ஏனென்றால், தற்போது இருக்கும் சூழ்நிலையில் வாடகை தாய்களின் அவல நிலையை பற்றியும், அவர்களுக்கு நடக்கும் மோசமான விஷயங்கள் குறித்தும் நிறையவே கேள்விப்படுகின்றோம்.

null

அதுமட்டுமல்ல Commercial Surrogacy என்று  கூறப்படுகின்ற வணிகமயமாக்கப்பட்ட வாடகை தாய் முறைக்கு 2019-லேயே மத்திய அரசில் இருந்து தடை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இல்லாமல் இப்போ சமீபகாலமாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றபோது, வாடகை தாய்க்கான வழிமுறைகள் மக்களிடையே வலுவா பேசப்பட்டது.

null

ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெறனும் என்றால் அந்த தம்பதியின் உறவினர் தான் வாடகை தாயாக இருக்கணும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை விளக்கும் விதமா தான் நயந்தாரா-விக்னேஷ் சிவன், துபாயில் இருக்கும் தங்களின் உறவினரை தான் வாடகை தாயாக முடிவெடுத்தார்கள் என்ற உண்மையும் வெளிவந்தது. அப்படி இருக்க யசோதா படத்தில் பேசப்படும் விஷயம் சட்டவிரோதமாக நடத்தப்படும் வணிகமயமாக்கப்பட்ட வாடகை தாய் சந்தையை பற்றி இருக்கலாம் என ஒரு யூகம் எழுகின்றது.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close