பொதுவாக அனைவரது வீட்டிலும் பூஜை அறை கட்டாயமாக இருக்கும். ஒருவர் வீட்டில் பூஜை அறை இல்லையென்றாலும் கடவுளுக்கு என்று சிறிய இடமாவது ஒதுக்கி வழிபடுவார்கள். இந்த பூஜை அறையினை மிகவும் சுத்தமாகவும், நறுமணம் நிறைந்ததாகவும் வைத்திருப்போம்.
இத்தகைய பூஜை அறையில் நாம் எந்த சாமி படங்களை வைத்து வழிபட கூடாது ? விக்ரக வழிபாடு செய்யலாமா ? செய்வினை இருந்தால் பூஜை அறையில் நடக்கும் மாற்றங்கள் என அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் ரஜினி அம்மாள்.
சித்தர்களும், பெரியவர்களும்
மனிதர்களாக இருந்து தெய்வமாக மாறிய பெரியவர்களை வழிபடலாம். ஆதி சங்கராச்சாரியார், மஹா பெரியவர், புட்டபர்த்தி பாபா போன்றவர்களை வழிபடலாம்.
என்னுடைய இஷ்ட தெய்வம் ஷீரடி பாபா, அவரை வணங்கி வந்தேன் என்னுடைய நான்கைந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். அனைவரது பிரச்சனையை நான் தீர்த்து வைப்பேன், அந்த இறைவன் என்னுடைய விஷயங்களை பார்த்துக்கொள்வார்.
உக்கிரமான தெய்வங்கள்
பத்ரகாளி, வராஹி அம்மன், பிரத்யங்கரா தேவி, சோட்டானிக்கர பகவதி அம்மன் இவர்கள் உக்கிர தெய்வங்கள் தான், ஆனால் இவர்களை வழிபடுவது நல்லது. ஆகையால் இவர்களின் படங்களை வைத்து வழிபடலாம்.
எந்த தெய்வத்தை வீட்டில் வைத்து வழிபட கூடாது
காளி படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது. அதேபோல் காளியை அனைவரும் வழிபட முடியாது, குறிப்பிட்ட சிலர் மட்டுமே வழிபட முடியும். அங்காள பரமேஸ்வரியை காட்டேரி என வழிபடுகிறார்கள், அந்த தெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.
இறந்தவர்களின் படம் பூஜை அறையில் ?
இறந்தவர்களின் படத்தை, பூஜை அறையில் தெய்வப் படங்களின் நடுவில் வைத்து வழிபடக்கூடாது. வடக்கு, தெற்கு திசையில் வைத்துக் கொள்ளலாம்.
விக்ரக வழிபாடு ?
விக்ரக வழிபாடு தாராளமாக செய்யலாம். ஆனால் முறையாக பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டும். அதேபோல் நீங்க வைத்திருக்கும் விக்ரகங்களில் விரிசல் ஏற்பட்டால் பூஜை அறையில் இருந்து எடுத்து விடுங்கள், இல்லையேல் குடும்பத்தில் கஷ்டங்கள் வரும். விரிசல் விழுந்த விக்ரகத்தை பால், பன்னீர் கலந்து இத்தனை நாட்கள் என் குடும்பத்தை காப்பாற்றியதற்கு நன்றி என கூறி கடலில் கரைத்து விடுங்கள்.
செய்வினை அறிகுறிகள்
செய்வினை யாராவது உங்களுக்கு வைத்திருந்தால், உங்கள் பாதத்தில் அரிச்சல் அதிகரிக்கும். அது மார்பு வரை வந்தால் ஆபத்து. அதேபோல் வீட்டினுள் கருவண்டு பறக்கும், நீங்கள் வளர்க்கும் பிராணிகள் இறந்து போகும். பூஜை அறையில் உள்ள சாமி படங்களின் முகத்தை அப்போது பாருங்கள் நிச்சயம் கடவுளின் முகத்தில் மாறுதல் இருக்கும்.
அப்படி இருந்தால் கடவுளை வழிபடுங்கள், அதற்கு தேவையான நபர்களை சென்று பாருங்கள்.
சாமி படங்களை தூக்கி எறியாதீர்கள்
நீங்கள் வாங்கும்கேலண்டரில் எந்த தெய்வப் படங்கள் வந்தாலும், தூக்கி எறிந்து விடாதீர்கள். அது நல்லதல்ல.
இவ்வாறு பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் ரஜினி அம்மாள்.