சாக போற வயசுல இதுயெல்லாம் தேவையா கேட்டாங்க | TikTok Famous Thoufiq Rajamani Interview

thumb_upLike
commentComments
shareShare

டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்த பலரும் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கெத்து கிராண்ட்மா அல்லது தபிஃக் பாட்டி என்பவர் யார் என்பதை டிக்டாக் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். 72 வயதிலும் இளமையாக உள்ள கேரக்டர்களில் டிக்டாக்கில் தோன்றி அனைவரையும் அசத்துவார் என்பது அவருடன் அவருடைய பேரன் அடிக்கும் லூட்டிகள் கொண்ட வீடியோ வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

null

மனதால் இன்னும் இளமையாக இருக்கும் ராஜாமணி பாட்டியும் அவருடைய பேரன் தபிஃக்கும் அவர்களின் டிக்டாக் பயணம் குறித்தும், நெகடிவ் கமெண்ட்ஸ் குறித்தும் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளனர்.

டிக்டாக் பயணம் ஆரம்பித்தது எப்படி

null

நான் ஈரோடில் தான் ஸ்கூல் படித்தேன், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னை வந்து விஸ்காம் படித்தேன். அந்த சமயத்தில் நிறைய ஆடிசன் செல்வேன், அப்போத் தான் இந்த டிக்டாக் வந்தது. அது எனக்கு வரபிரசாதமாக மாறியது. நிறைய வீடியோஸ் போட்டேன், அப்பப்போ டிக்டாக் செய்யும்போது பாட்டி வந்து பார்ப்பார் என தபிஃக் ஆரம்பித்தார்.

வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு வீடியோ

null

ரூமுக்குள்ளே இருப்பதால் நான் சென்று பார்த்தேன், டிக்டாக் செய்து கொண்டிருப்பான். நடிக்க வேண்டுமென்றால் இதை ஏன் செய்கிறாய் யாராவது இயக்குனரிடம் சென்று வாய்ப்பு கேள் என்று சொன்னேன், அப்போது நீங்கள் இந்த டயலாக்கை பேசுங்கள் என்றான், நானும் பேசினேன் அந்த வீடியோ தான் எங்கள் வாழ்கையே மாற்றிவிட்டது என உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் ராஜாமணி பாட்டி. முதன்முதலில் நாங்கள் இணைந்து செய்த வீடியோ வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு கோடி, நீ பார்த்த என்ற டையலாக் தான்.

டிக்டாக்கில் பாட்டியின் ஆர்வம்

null

இவனுடன் சேர்ந்து நான் பண்ணும் வீடியோக்கள் வைரலாக ஆரம்பித்தன. ஒவ்வொரு வீடியோவும் வைரலாக ஆக எனக்கு டிக்டாக்கின் மீது ஆர்வம் வந்தது.

என்ன புதுமை செய்யலாம்

null

பாட்டியும், பேரனும் சேர்ந்து டிக்டாக் செய்வதை அனைவரும் விரும்ப ஆரம்பித்தார்கள். சரி அடுத்த கட்டத்திற்கு எப்படி செல்வது, ஏதாவது தனித்துவம் வேண்டும் என்று யோசித்த போது தான்  நாம் செய்யும் வீடியோக்களில், நடிகர் நடிகைகள் போட்ட ஆடைகள் போலவே போட்டு பண்ணலாம் என தோன்றியது. அந்த ரீ-கிரியேஷன் கான்செப்ட்டை கையில் எடுத்தோம், அதுவும் வொர்க் அவுட் ஆனது.

குடும்பத்தாரின் ஆதரவும் மக்களின் அன்பும்

null

மக்கள் எங்களை பாராட்ட ஆரம்பித்தார்கள், இது அனைத்தும் எங்கள் குடும்பத்தாருக்கே சேரும். குடும்பத்தின் ஆதரவு இல்லையன்றால் இதை செய்திருக்க முடியாது. என் பெரிய பேரன் வீடியோ எடுப்பான். என் சின்ன பேரன் மேக்கப் போட்டு விடுவான். என் மகள் எனக்கான ஆடைகளை வடிவமைப்பாள், மொத்தத்தில் என் குடும்பமே எனக்கு உறுதுணையாக உள்ளது, அதுபோல் வெளியே சென்றால் மக்களும் அன்போடு பேசுகிறார்கள் என உற்சாகமாக பேசுகிறார் ராஜாமணி பாட்டி.

எங்களுக்கு பிடித்த வீடியோ

null

எங்களுக்கு மிகவும் பிடித்த வீடியோ அந்நியன் மற்றும் சந்திரமுகி வீடியோக்கள் தான். ரொம்ப ஆர்வமாக, சந்தோசமாக அதை செய்தோம், அதுவும் நல்ல ரீச் கிடைத்தது.

நெகடிவ் கமெண்ட்ஸ்

null

நிச்சயம் நெகடிவ் கமெண்ட்ஸ் வரும், எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் நெகடிவ் கமெண்ட்ஸ் வரும். எங்களுக்கு 90 சதவீதம் பாசிடிவ் கமெண்ட்ஸ் வந்தால், பத்து சதவீதம் நெகடிவ் கமெண்ட்ஸ் வரும். சாகுற வயதில் உனக்கு இது தேவையா என கமெண்ட் செய்வார்கள். அதெல்லாம் நாங்கள் பார்க்க மாட்டோம். எங்களுக்கு வரும் நல்ல கமெண்ட்ஸ் மட்டுமே நாங்கள் எடுத்துப்போம்.

குழந்தைகள் தான் என் ரசிகர்கள்

null

நாங்கள் வெளியில் செல்லும்போது குழந்தைகள் அதிகமாக வந்து பேசுவார்கள், சந்தோசமாக இருக்கும். ஒரு அம்மா சொன்னார், என் இரண்டு வயது குழந்தை உங்கள் வீடியோ தான் பார்த்து ரசிப்பாள் என்று, அதை கேக்கும்போது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

ரீல்ஸில் கிளாமர் வேண்டாமே

null

இப்போது டிக்டாக், ரீல்ஸ் செய்பவர்களுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது, அதனால் நமக்கு பொறுப்பும் உள்ளது. ரீல்ஸ் வீடியோக்களில் கிளாமராக நடிப்பதை தவிர்க்கலாம், எதற்காக லைக்ஸ்காக தான் செய்கிறோம். நீங்கள் நார்மலாக வீடியோ போட்டாலும் பார்ப்பார்கள். ஏனென்றால் குழந்தைகள் நிறைய மொபைல் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள், அதனால் இதை தவிர்க்கலாம் என்றார் தபிஃக்

முதுமையை நான் ரசித்து வாழ்கிறேன்

null

நம் வாழ்வில் நமக்கு என்ன கிடைக்கிறதோ அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பலர் முதியவர்களை எங்கோ இல்லங்களில் சேர்த்து வருகிறார்கள், ஆனால் என் குடும்பம் என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறார்கள். நான் இந்த முதுமையை என்ஜாய் செய்கிறேன் என்றார் ராஜாமணி பாட்டி.

எப்படி தயாராகுவோம்

null

ஒரு படம் பார்க்கும்போதே இந்த டையலாக் வீடியோ பண்ணலாம் என நோட் செய்து வைத்துக் கொள்வோம், அதன்பின் அந்த சீனிற்கு என்ன மாதிரி உடை தேவை, லோகேசன் என்ன என்று ப்ளான் செய்ய ஆரம்பிப்போம். அப்படி தான் நாங்கள் ஒவ்வொரு வீடியோவுக்கும் தாயாராவோம்.

இன்றைய இளைஞர்கள் இப்படி இருக்க கூடாது

null

இன்றைய இளைஞர்கள் ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறார்கள், பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள். பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். யாரையும் காயப்படுத்தாமல் வாழ்வோம் என்றார் ராஜாமணி பாட்டி   .

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close