பாம்பு, ஜெல்லிமீன் கூட நீந்தி வந்துருக்கேன்| Swimmer Girl Sanjana

thumb_upLike
commentComments
shareShare

சென்னையை சேர்ந்த பத்து வயது சிறுமி சஞ்சனா. இவர் கடந்த வருடம் மெரினா கடலில் பத்து கிலோமீட்டர் தொலைவை, குறைந்த நேரத்தில் நீந்தி கடந்திருக்கிறார். அவரும், அவரின் தாயாரும் நம்முடன் சஞ்சனாவின் நீச்சல் திறமை குறித்து பகிர்ந்துள்ளனர்.

நீச்சலில் ஆர்வம் வந்தது எப்படி?

null

ஆறாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சஞ்சனா கூறும்போது, எனக்குத் தண்ணீரில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். கடற்கரைக்குச் சென்றால் அதிக நேரம் அலைகளில் விளையாடிக் கொண்டிருப்பேன். எனது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் நீச்சல் வகுப்பில் சேர்த்து விட்டனர். என்னுடைய முயற்சியாலும்,  பயிற்சியாளர் அளித்த ஊக்கத்தாலும் விரைவாக நீச்சல் கற்றுக் கொண்டேன்.

நீச்சல் குரு

null

பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனைப் படைத்த குற்றாலீஸ்வரனுக்குப் பயிற்சி அளித்த நீச்சல் வீரர் கே.எஸ்.இளங்கோவன் தான், எனக்கும் ஆரம்பம் முதல் பயிற்சி அளித்து வருகிறார். நான் பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து சாதனை படைக்க, ஓராண்டு காலமாக காலையிலும் மாலையிலும், நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் கடுமையான பயிற்சி அளித்தார்.

பயிற்சி மற்றும் உணவுகள்

null

இப்படி கடினமாக நீந்தும் சஞ்சனா காலையில் 5.30 மணிக்கெல்லாம் பயிற்சிக்கு சென்று விடுவாராம். அவர் எடுத்துக்கொள்ளும் உணவுகள் பற்றி அவர் கூறும்போது, முட்டையின் வெள்ளை கருவை பாலில் கலந்து குடிப்பேன், வாழைப்பழம், ப்ரெட், பீட்ரூட் அல்லது கேரட் ஜூஸ், இவை பயிற்சி செல்லும் முன் எடுத்துக் கொள்வேன். கடலில் வெகு நேரம் நீந்த வேண்டும் அதனால் சீக்கிரம் உடல் சோர்வடைந்து விடும். இவை உட்கொண்டால் பசி எடுக்காது, கடலில் நீந்த தேவையான சக்தி கிடைக்கும் என்கிறார்.

சஞ்சனாவின் தாய்

null

சிறு வயதில் சாதனைகள் படைத்து வரும் சஞ்சனா குறித்தும், அவளின் பயிற்சி குறித்தும் சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் அவரின் தாய். அவர் கூறும்போது, சிறுவயதில் குழந்தை எடை அதிகமாக இருந்ததால் அதை குறைக்க வேண்டும் என்பதற்காக நீச்சல் வகுப்பில் சேர்த்தோம். நான்கு வயதில் இருந்து நீச்சல் கற்று வருகிறாள் ஆனால் கடலுக்கு சென்றது ஒன்பது வயதில் தான்.

இவளின் ஆசிரியர் இவளுக்கு நாகு பயிற்சி அளிக்கிறார். ஸ்போர்ட்ஸ் பொறுத்தவரையில் ஒழுக்கம் குழந்தைகளுக்கு வரும். இவள் நீச்சல் பயிற்சி சென்று வந்து அதன்பின் பள்ளி சென்று படிக்கிறாள். ஒரு நாள் கூட என்னால் முடியவில்லை என்று சொல்ல மாட்டாள்.

இதுவரை கடலில் பெண்கள் நீந்தியதில்லை, இவள் தான் முதல் பெண். இதன் பின் இதைப் பார்த்து நிறைய பெண்கள் வருவார்கள் என்று நம்புகிறேன். சஞ்சனா மாநில போட்டிக்கு செல்ல இருக்கிறாள், அதைத்தொடர்ந்து தேசிய அளவில் ஜெயித்து ஒலிம்பிக் செல்வாள் என்று நம்புகிறேன் என சந்தோசத்துடன் கூறினார் சஞ்சனாவின் தாய்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close