பண திமிர காட்ரான்ணு அசிங்கமா பேசுவாங்க | Newsreader Mahalakshmi Emotional Interview

thumb_upLike
commentComments
shareShare

புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களின் மேல் சாமானியர்களுக்கு எப்போதும் பொறாமைப் பார்வை இருக்கும். 'அவங்களுக் கென்ன....' என்ற ஒற்றை வார்த்தை போதும் அதைப் பிரதிபலிக்க... பிரபலங்கள் ஒன்றும் வேற்றுகிரகவாசிகள் அல்லர்... பிரபலங்களை பிரச்னைகள் அண்டாதென ஒன்று மில்லையே... ஆனாலும் மக்கள் முன்னிலையில் புன்னகை முகமூடியோடு வலம்வர நிர் பந்திக்கப்பட்டவர்கள் அவர்கள். அப்படி ஒரு பிரபலம் தான் செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி, அவருடன் ஒரு நேர்காணல்.

தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கினேன்

null

நான் முதலில் தொகுப்பாளினியாக தான் என் பயணத்தை தொடங்கினேன், ஆனால் வக்கீலுக்கு பயிற்சியில் இருக்கும்போது ஆங்கரிங் அதற்கு செட்டாகவில்லை, வக்கீல் புரொபசனுக்கு ஒத்துபோற விஷயமா நியூஸ் ரீடிங் இருந்தது. அதனால் நான் இந்த துறைக்கு வந்தேன்.

செய்தி வாசித்து திட்டு வாங்குவேன்

null

செய்தி வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது, சிறுவயதிலே பேப்பரை எடுத்து தப்பு தப்பாக செய்தி வாசிப்பேன். அப்போது வீட்டிலுள்ள அனைவரும் திட்டுவார்கள். உனக்கு தமிழுக்கும் சம்பந்தமே இல்லை என்று என்னை கேலி செய்வார்கள் ஆனால் இன்று நான் செய்தி வாசிப்பாளர்.

பெண்கள் தான் அனைத்து துறையிலும் டாப்

null

நான் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளேன், வக்கீலாகவும் உள்ளேன், எனக்கு இரண்டும் ஈசியாக தான் உள்ளது. ஆண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள துறை இவையெல்லாம் என்று ஆனால் பெண்கள் தான் டாமினேட் செய்ய வேண்டும், பெண்கள் அனைத்து துறையிலும் டாப்பில் இருக்க வேண்டும்

என்னை என் குடும்பம் புரிந்து கொள்ளவில்லை

null

என் விவாகரத்து கேஸை நானே வாதாடினேன், அப்போது என் குடும்பம் என் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை, என் தோழி பிரியதர்ஷினி மட்டுமே என்னை புரிந்து கொண்டாள். கொஞ்ச நாள் கழித்து தான் என் அம்மா, தம்பி அனைவரும் என் முடிவை புரிந்து கொண்டார்கள்.

என் மகனும் நானும்

null

என் மகன் பல் மருத்துவராக உள்ளார், நீட் தேர்வில் பதினோராவது ஆளாக வந்து என்னை பெருமைப்படுத்தி உள்ளான். எங்கள் பிரச்சனைக்கு குழந்தைகள் பாதிக்க கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் அந்த நிலையம் மாறியது. ஓன்று குழந்தை என்னுடன் இருக்க வேண்டும் இல்லையேல் என் கணவருடன் இருக்க வேண்டும் என்ற நிலை வந்தது. என் மகனிடம் நான் சொன்னேன், அப்பாவுடன் செல்ல வேண்டும் என்றால் தாராளமாக செல் நான் எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் உன் வாழ்க்கையில் அதன்பின் நான் இல்லை என்றேன், அன்றிலிருந்து இன்று வரை என் மகன் என்னுடன் தான் உள்ளான்.

என் மகன் எனக்கு அப்பா போல் நடந்து கொள்வான், அவனை பொறுத்தவரை அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் இருவரும் அப்பா மகள் போல் தான் இருப்போம்.

தெரியாமல் தவறாக பேசுவார்கள்

null

என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, நான் என்ன மனநிலையில் உள்ளேன் என யாரும் பார்க்க மாட்டார்கள், ஈசியாக என்னைப் பற்றி பேசி விடுவார்கள். தெரியாமல் என்னை பற்றி தவறாக பேசுவார்கள், முதலில் கஷ்டமாக இருந்தது, இப்போது அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை.

முதுகில் குத்தினார்கள்

null

வாழ்க்கையில் அனைவருக்கும் முதுகில் குத்தும் விஷயம் நடக்கும், எனக்கும் நடந்தது. ஆனால் முதுகில் குத்தியவர் நெருங்கிய நண்பர் எனத் தெரியும்போது மனம் எவ்வளவு வேதனை அடையும், அந்த வேதனையை நான் அனுபவித்துள்ளேன்.

செய்தி வாசிப்பாளர் – வக்கீல்

null

வக்கீல் வேலையில் பலர் வந்து அவர்களின் மொத்த பிரச்சனையும் நம்மிடம் கொடுத்து விடுவார்கள், அதற்கு பணமும் தந்து விடுவார்கள். ஆனால் அது டென்ஷனாக இருக்கும், பயங்கர பிரஷரான வேலை. செய்தி வாசிப்பாளர் வேலை அப்படியே தலைகீழ் ஆனது. மேக்கப் போட்டு கொண்டு, நண்பர்களுடன் பேசிக்கொண்டு அப்படியே ஜாலியாக இருக்கும்.

பணத்திமிரு என்பார்கள்

null

நான் மீடியாவுக்கு வந்தபோது காசு சேர்த்து வைத்து கம்மல் எல்லாம் வாங்குவேன், அப்போது எனக்கு அதை யாரும் வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். இப்போது என்னிடம் உள்ளது, எனக்கு அப்போது கிடைக்காததை இப்போது மற்றவர்களுக்கு நான் கொடுத்து மகிழ்கிறேன், இதையும் பணத்திமிரு என சிலர் கூறுவார்கள்.

அம்மாவின் ஆதரவு

null

என் விவாகரத்து முடிவை மட்டும் தான் என் அம்மா ஏற்கவில்லை. மற்றபடி என் வாழ்க்கையில் என் அம்மாவின் பங்கு அதிகம். என் குழந்தையை வளர்த்ததில் இருந்து அனைத்திலும் என் அம்மா உறுதுணையாக இருந்துள்ளார். என் அம்மா இல்லையேல் நான் இல்லை.

எந்த வயதாக இருந்தாலும் அந்த வயதிற்கு அழகாக இருக்கணும்

null

நான் இளமையாக இருப்பதற்காக என்னென்னவோ செய்கிறேன் என்கிறார்கள். என் வயதை குறைத்து காட்டுவதில்லை எனக்கு விருப்பம் இல்லை. எந்த வயதாக இருந்தாலும் அந்த வயதிற்கு அழகாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம்.

சிறு வயதில் ஆட கூடாது என வீட்டில் எல்லோரும் சொல்வார்கள், ஆனால் எனக்கு ஆட பிடிக்கும். அப்போது செய்ய முடியாததை இப்போது செய்கிறேன். டான்ஸ், ஜும்பா போகிறேன். வீட்டில் சும்மா இருந்தால் ஓவியம் வரைவேன். பெல்லி டான்ஸ் கிளாஸ் கூட சென்றேன். வயதானாலும் அழகாக வயதாக வேண்டும் என்பது தான் என்னுடைய கான்செப்ட் என்கிறார் மகாலட்சுமி.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close