6 முதல் 60 வயது வரை யாரும் போகாத இடத்துக்கு கூட்டி போவேன் | Brinda Asokan Traveller

thumb_upLike
commentComments
shareShare

இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை. அதேபோல பெண்களின் காலடி படாத இடங்களே உலகத்தில் இல்லை என்ற நிலையம் வரவேண்டும்.

உலகம் முழுக்க தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சந்திரனுக்கு செல்வதாகட்டும், சமுதரத்தில் குதிப்பதாகட்டும், அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கான இடம் விசலாமாகி வருகிறது. ஆணுக்கு நிகர் என்பதை கடந்து, இன்று ஆணை விடவும் பெண்கள் செய்யும் சாதனைகள் பல.

அப்படி சோலோ ட்ராவலிங் செல்ல ஆரம்பித்த பெண் பிருந்தா, இன்று அவருடன் சேர்த்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் அவர்கள் பார்த்திடாத இயற்கையின் மறுப்பக்கத்தை காட்ட அழைத்து செல்கிறார். பிருந்தாவுடன் ஒரு நேர்காணல்.

பிருந்தா குறித்து..

null

நான் HUMAN RESOURCING TRAINING AND DEVELOPMENT EXPERT, THE MAGIC KEY என்ற கம்பெனி வைத்துள்ளேன். அதுமட்டுமல்லாமல் சோலோ ட்ராவலர், எனக்கு மலை ஏறுவது எல்லாம் ரொம்ப பிடிக்கும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்காவது புது இடத்திற்கு போகாமல் என்னால் இருக்க முடியாது.

மேஜிக் கீ கம்பெனி

null

மேஜிக் கீ கம்பெனி மூலம் நாங்கள் பல கம்பெனிகளுக்கு சென்று அங்குள்ள பணியாளர்களுக்கு ட்ரைனிங் கொடுப்போம். அதாவது அனைவருக்குள்ளும் திறமை உள்ளது, அதை கண்டுபிடிக்க உதவுவோம். அதுபோம் இன்னும் திறம்பட வேலை செய்ய வைப்பதே எங்கள் வேலை.

முதலில் அவர்களுக்கு பல கேம்கள் விளையாட கொடுப்போம், விளையாட விளையாட அவர்களுக்கு உள்ளிருக்கும் குழந்தை வெளிவர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அவர்கள் வேலை சம்பத்தப்பட்ட கேள்விகள் கேட்போம், அப்போது அவர்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும். LINKEDIN என் கம்பெனி செயல்படுவதற்கு உதவியாக உள்ளது, அதுமூலம் பல கம்பெனிகளுக்கு ட்ரைனிங் கொடுப்போம்.

இஞ்சினியர் TO ட்ராவலர்

null

நான் முதலில் மனதத்துவ நிபுணராக வேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலினால் இன்ஜினியரிங் படித்து இஞ்சினியர் ஆகி விட்டேன். நல்ல வேலை, நல்ல சம்பளத்தில் தான் இருந்தேன் ஆனால் எனக்குள் ட்ராவலிங் என்ற விஷயம் ஆழமாக இருந்தது. அதனால் எனக்கு பிடித்ததை தைரியமாக செய்ய ஆரம்பித்தேன்.

என்னுடைய பயணம்

null

மலை ஏறுவது எனக்கு ரொம்ப பிடிக்கும், நம் நாட்டில் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளது, அடிக்கடி ஹிமாலயா சென்று அங்குள்ள மலை மேல் ஏறுவேன், சோலோ ட்ராவலிங் செயபது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ட்ராவல் டீம் உருவானது எப்படி

null

நான் ட்ராவல் செய்யும்போது அதை இன்ஸ்டாவில் பதிவிடுவேன், நிறைய பேர் என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆசை என கூறுவர் ஆனால் எனக்கு முதலில் அந்த ஐடியா எதுவும் இல்லை. ஒரு நாள் என் பிரண்ட் இதெல்லாம் பார்த்துவிட்டு நாம் பலருடன் ட்ரெக்கிங் போவோம் நன்றாக இருக்கும் என சொல்ல அப்போது ஆரம்பித்தது தான்.

சிறுவர் முதல் பெரியவர் வரை

null

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் வருவார்கள், இந்த மாதிரி ட்ரெக்கிங் செல்லும்போது பலர் அமைதியானவர்களாக யாருடனும் பேசாத குணம் உள்ளவர்கள் வருவார்கள். ஆனால் அந்த இரண்டு நாள் முடிந்து போகும்போது பல நண்பர்களை சம்பாதித்து விட்டு செல்வார்கள். நாங்கக் கேம்பில் இருக்கும்போது ஒரு முதியவர் அழகாக பாட்டெல்லாம் பாடி டான்ஸ் ஆடினார்.

சிறுவனின் வார்த்தைகள்

null

முதல் நாள் என்னுடைய டென்ட்டுக்கு செல்வதற்கு முன் நான் ஸ்ட்ரிக்ட்டாக எல்லோரிடமும் சொல்லி விட்டேன், காலையில் 4.30 க்கு தயாராக இருப்பவர்களை மட்டுமே நான் அழைத்து செல்வேன். தயாராக இல்லாதவர்களை அழைத்து போக மாட்டேன். இவ்வாறு சொல்லி விட்டு வந்துவிட்டேன். மறுநாள் சரியாக 4.30 மணிக்கு 48 பேரும் என் டென்ட் வாசலில் தயாராகி இருந்தனர். அனைவரையும் அந்த கொழுக்கு மலையின் உச்சிக்கு அழைத்து சென்றேன். திரும்பி வரும்போது ஒரு எட்டு வயது சிறுவன் என்னை கட்டிபிடித்து இந்த ட்ரிப் நன்றாக இருந்தது ஆன்ட்டி, முதலில் பயமாக இருந்தது ஆனால் இப்போது இல்லை. அடுத்த ட்ரிப்புக்கு நிச்சயம் வருவேன் ஆன்ட்டி என்று சொன்னான். அது எனக்கு அவ்வளவு சந்தோசத்தை தந்தது.

என்னுடைய அடுத்த கோல்

null

நான் இந்த தடவை இத்தனை ஆயிரம் அடி மலை ஏறினேன் என்றால் அடுத்த தடவை அதை விட பெரிய கோல் தான் செட் செய்வேன். எப்போதும் உங்கள் எண்ணங்கள் மற்றும் கோல் பெரிதாக இருக்க வேண்டும்.

ட்ராவல் பட்ஜெட்

null

என்னுடைய ட்ரெக்கிங் ட்ரிப் இரண்டு நாட்கள் தான். அதற்கு வந்த்போகும் செலவு, சாப்பாடு செலவு, டென்ட் என அனைத்தையும் சேர்த்து 4500 ரூபாய் தான்.

ட்ராவலிங் என்பது நம்மை நாமே தேடிக் கொள்ளும் பயணம், நிச்சயம் அனைவரும் ட்ராவல் செய்ய வேண்டும் என்கிறார் பிருந்தா அசோகன்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close