பல வருடம் வீடு கட்டும் கனவை நினைவாகிய செந்தில் ராஜலெட்சுமி | Singer Senthil Rajalakshmi Home Tour

thumb_upLike
commentComments
shareShare

தமிழகத்தில் சூப்பர் சிங்கர் ஷோவை பார்க்காத அல்லது கேள்விப்படாத சின்னத்திரை ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலகளவில் தமிழர்கள் மத்தியில் மிக பிரபலமான ஷோவாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செந்தில் - ராஜலட்சுமி ஜோடியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்கமாட்டார்கள்.

null

இவர்கள் இருவருமே கிராமிய பாடல்கள் மூலம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகி இருந்த நிலையில், சூப்பர் சிங்கரில் பங்கேற்று செந்தில் இறுதியில் சூப்பர் சிங்கர் டைட்டிலையும் தட்டி சென்றார்.

null

அதன் பின்பு சினிமாவிலும் இருவருக்கும் வாய்ப்புகள் குவிய தொடங்கின. காப்பான், சார்லி சாப்ளின் 2, சூரரைப் போற்று போன்ற படங்களில் செந்தில் கணேஷ் பாடிய பாடல் மிகப் பெரிய அளவில் ரீச்சை பெற்றது. அதே போல் ராஜலட்சுமி புஷ்பா படத்தில் பாடிய சாமி பாடலும் ஹிட் அடித்தது. தனியாக யூடியூப் சேனலும் தொடங்கி அதன் மூலமும் ரசிகர்களை இவர்கள் மகிழ்வித்து வருகின்றனர்.

null

சில தினங்களுக்கு முன்பு செந்தில் ராஜலட்சுமி தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரம்மாண்டமாக வீட்டு கட்டி இருந்தனர். அதே போல் தங்கள் 2 குழந்தைகளின் காதணி விழாவையும் சிறப்பாக நடத்தி முடித்து இருந்தனர். திருவிழா போல் பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

null

இந்நிலையில் தற்போது செந்தில் - ராஜலட்சுமி கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

null

தங்களது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் , தன்னம்பிக்கையாலும் இந்த உயரத்தை அடைந்து இருக்கும் செந்தில் - ராஜலட்சுமி தம்பதியை ரசிகர்களும், பொதுமக்களும் வாழ்த்தி வருகின்றனர்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close