Skin-க்காக Sweet சாப்பிடுறத நிறுத்திட்டேன் : Sindhu Shyam Interview About Skincare

thumb_upLike
commentComments
shareShare

பூதக்கண்ணாடி என்னும் மலையாள படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சிந்து ஷ்யாம். தொடர்ந்து பல படங்களிலும், சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். சன் டி.வி-யில் ஒளிபரப்பான தெய்வமகள், விஜய் டி.வி.-யில் ஒளிபரப்பான பகல் நிலவு என இந்த இரண்டு சீரியல்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

நான் சிகப்பு மனிதன், போகன், ரங்கூன், ஸ்கெட்ச், கோப்ரா என பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு பரதநாட்டியம் கலைஞரும் கூட. இன்றும் இளமையாக இருக்கும் சிந்து அவரின் ஸ்கின் மற்றும் ஹேர் கேர் சீக்ரெட்சை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஸ்கின் கேர்

null

ஸ்கின் கேர் நான் எதுவும் செய்வதில்லை, அது தன் உண்மை. நான் நிறைய தண்ணீர் குடிப்பேன், அத்துடன் நல்ல உணவு எடுத்துக் கொள்வேன். நான் எப்போதுமே எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்ண மாட்டேன். அதுமட்டுமில்லாமல் என் கணவர் என்னை சந்தோசமாக வைத்துள்ளார், அதுவும் ஒரு காரணம். என்னை புரிந்து நடப்பதால் நான் சந்தோசமாக உள்ளேன்.

ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்கும் ஆனால்...

null

ஸ்வீட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதிகமாக ஸ்வீட்ஸ் சாப்பிடுவேன். ஆனால் முகத்தில் அதனால் சில பிரச்சனைகள் வரும்போது சாப்பிடாமல் சில நாட்கள் தவிர்த்து விடுவேன்.

பரதநாட்டியம்

null

தினமும் நான் பரதநாட்டியம் ஆடுவேன், பசங்களுக்கு கற்றுக் கொடுத்தான் வருகிறேன். அதனால் உடல் தன்னால் மெயின்டெயின் ஆகிறது. நாட்டியம் ஆடும்போது நிறைய வேர்வை வெளியேறும் அது உடலுக்கு நல்லது. அதனால் சருமம் நன்றாக இருக்கிறது.

பிராணாயாமம்

null

நாம் மனிதர்கள் தானே நமக்கு பிரச்சனைகள் வரும். அதனால் சில சமயங்களில் ரொம்ப சோர்வாகி விடுவேன், ஒரு இரண்டு நாட்கள் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருந்து விடுவேன். அதிக மனசோர்வு இருக்கும்போது பிராணாயாமம் செய்வேன்.

ஹேர் கேர்

null

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய தலைமுடி நல்ல நிலையில் இல்லை. சென்னை தண்ணீரும் ஒரு காரணமாக இருக்கலாம்.

25 வருடங்களாக நான் பின்பற்றுவது

null

இந்த 25 வருடங்களாக நான் ஒரு விஷயத்தை தவறாமல் பின்பற்றுகிறேன். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் அருந்துவேன். இதை செய்யாமல் இருக்கவே மாட்டேன். அதன்பிறகு நான் காபி எடுத்துக் கொள்வது வழக்கம்.

முகப்பரு பிரச்சனை

null

எனக்கும் முகப்பருக்கள் வரும், கொசு கடித்தால் கூட என் சருமம் சிவந்து விடும் அந்தளவுக்கு சென்சிடிவ் சருமம் என்னுடையது. மாதவிடாய் நாட்களில் முகம் முழுக்க பருக்கள் வரும், அது நாம் தவிர்க்க முடியாதது.

இதை தவிர நான் எதுவும் செய்வதில்லை என்கிறார் சிந்து ஷியாம்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close