என்னால முடிலனா Strong-ஆ No சொல்லிடுவேன் : Sindhu Shyam Exclusive Interview | Deivamagal

thumb_upLike
commentComments
shareShare

பூதக்கண்ணாடி என்னும் மலையாள படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சிந்து ஷ்யாம். தொடர்ந்து பல படங்களிலும், சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். சன் டி.வி-யில் ஒளிபரப்பான தெய்வமகள், விஜய் டி.வி.-யில் ஒளிபரப்பான பகல் நிலவு என இந்த இரண்டு சீரியல்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

null

நான் சிகப்பு மனிதன், போகன், ரங்கூன், ஸ்கெட்ச், கோப்ரா என பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு பரதநாட்டியம் கலைஞரும் கூட. அவரின் அடுத்த புராஜெக்ட்கள் குறித்தும், மகன் குறித்தும், இன்றைய தலைமுறை பிள்ளைகள் குறித்தும் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் சிந்து ஷ்யாம்.

25 வருடங்கள் இந்த துறையில்

null

இந்த துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆகி விட்டது, நிறைய நல்ல இயக்குனர்களுடனும், நல்ல நடிகர்களுடனும் நான் பணியாற்றியுள்ளேன். நல்ல நல்ல கதாப்பாத்திரங்கள் செய்துள்ளேன். அது எனக்கு சந்தோசமாக உள்ளது.

மக்களின் அன்பு

null

மக்களின் அன்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. தெய்வ மகள் சூட்டிங் தி.நகரில் நடந்தபோது, பலர் எங்களை பார்க்க வந்தனர். அப்போது என்னை அந்த கேரக்டராகவே அவர்கள் என்னை நினைத்து பேச ஆரம்பித்துவிட்டனர். அதேபோல் திருமணத்திற்கு முன் ஒரு மலையாள சீரியல் செய்தேன், அந்த கதாப்பாத்திரம் ரொம்ப பாவமான கேரக்டர். அப்போது என்னை பலர் பார்த்து என்னை வந்து கட்டிபிடித்து, ஆறுதலாக பேசுவர். மக்கள் நாம் செய்யும் கதாப்பாத்திரங்களாகவே நம்மை பார்க்கின்றனர். அவர்களின் அன்பு ரொம்ப சந்தோசம் தருகிறது.

சின்ன வயதில் இருந்தே பிசி

null

நான் நன்றாக படிப்பேன், ஸ்கூல் முடிந்தால் பரதநாட்டியம் கிளாஸ் செல்ல வேண்டும், அப்போது அப்படியே பிசியாக இருந்தேன். பத்தாவது முடிக்கும்போது எனக்கு சினிமா கதவுகள் திறந்தது. அப்போது இருந்து இப்போது வரை பிசியாக இருக்கிறேன்.

அழுது தான் என் கவலையை மறப்பேன்

null

நான் ரொம்ப சென்சிடிவ், சின்ன விஷயங்களுக்கு கூட நான் ரொம்ப அழுகும் ஆள். யாராவது நான் அழுகும்போது ஆறுதலாக பேசினால் இன்னும் அழுகை வந்து விடும். நான் அழுது தான் என் கவலையை மறப்பேன்.

வாழ்க்கையில் எப்போதும் PRESSURE இருக்கும். என்னால் அதை ஏற்க முடியவில்லை என்றால் நான் முடியாது என்று சொல்லி விடுவேன். அதனால் தான் செலக்டிவான புராஜெக்ட் மட்டும் செய்கிறேன்.

SLOW PHASE தான் என்னுடைய பெஸ்ட் டைம்

null

நடிப்பு, டான்ஸ், வீடு என அனைத்தையும் ஒரே நேரத்தில் கவனிப்பது சிரமமான விஷயம் தான். நான் எது தேவையோ அதை மட்டுமே செய்வேன். இப்போது நடிப்பு அவசியம் இல்லை என தோன்றினால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன். எனக்கு பண்ணனும் என தோன்றினால் நிச்சயம் நான் செய்வேன். அதனால் தான் ஒரு சமயத்தல் சினிமா, சீரியல்களில் தொடர்ச்சியாக என்னை பார்க்க முடியும், சில நேரங்களில் ஆளே இல்லாமல் போய் விடுவேன். சில சமயங்களில் என் மகன் என்னை நடிக்க சொல்லி வற்புறுத்துவான் அவனால் நான் நடித்து அதிகம்.

இந்த நாலு வருடமாக நான் நாட்டியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

அம்மாவாக நான்...

null

எனக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார், நானும் என் மகனும் நண்பர்கள் என்று தான் சொல்ல வேண்டும். நான் ஏதாவது கேட்டால் சொல்ல மாட்டான், அவனாக என்னிடம் வந்து நடந்த விஷயங்களை கூறுவான். நான் ஒரு விஷயத்தை செய்யாதே என சொன்னால், ஏன் செய்ய கூடாது என ஆயிரம் கேள்வி கேட்பான். நாம் எப்போதும் பிள்ளைகளை கவனித்து கொண்டே இருக்க முடியாது, ஆனால் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

வெப் சீரியஸ் கலாச்சாரம் பயமாக உள்ளது

null

இப்போது உள்ள வெப் தொடர்களில் ஆபாசம், கொலை இவை எல்லாம் சாதாரணம் என்பது போல் காட்டுகிறார்கள். நம்மால் அதை தடுக்க முடியாது, ஆனால் எது நிஜம், எது போலி என்பதை நாம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

பெற்றோரின் கடமை

null

இப்போது சிறு குழந்தைகளுக்கு கூட மொபைல் போன்கள் தான் பெற்றோர்கள் கொடுக்கிறார்கள். ஆனால் இது ரொம்ப ஆபத்தானது, குழந்தை சாப்பிட அடம்பிடித்தால் வேறு வழியில் தான் நான் பார்க்க வேண்டுமே தவிர மொபைல் போன் பழக்கம் கூடாது.

பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்

null

சுதந்திரம் என்பது யாது என்பதை நாம் தான் சொல்லி வளர்க்க வேண்டும். நான் ஒரு ஆண் பிள்ளையின் அம்மாவாக இருந்தாலும், தினமும் அவன் ஸ்கூல் செல்லும்போது எனக்கு பயமாக தான் இருக்கும். நான் எல்லா விஷயத்திலும் அவர்களை கட்டி வைக்க முடியாது, ஆனால் நல்லது கெட்டதை சொல்லி வளர்க்க முடியும்.

என் மகன் நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது நான் சொல்வது, உன்னுடன் பெண்கள் வந்தால், அவர்களுக்கு பாதுக்காப்பான உணர்வை கொடு, பத்திரமாக பார்த்துக் கொள். நல்ல விதமாக நடந்து கொள் என சொல்லி தா அனுப்புவேன்.

இவ்வாறு பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் சிந்து ஷ்யாம்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close