அமீர் Family-ன் Skincare Tips : Shyji & Aishu About Daily Facecare Routine

thumb_upLike
commentComments
shareShare

மக்களின் பேவரைட் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் நிச்சயம் பிக்பாஸ்-க்கு முதல் இடம் தான். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

null

இந்த நிகழ்ச்சியின் சிறப்பே இதில் கலந்து கொள்ளும் நபர்கள் மக்களிடம் பெரும் புகழ் தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் திரைத்துறையில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அப்படி கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் குடும்ப நபர்களும் சில நேரங்களில் மக்களிடையே பிரபலம் ஆவார்கள்.

null

அப்படி போன பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட அமீரின் குடும்பத்தார் மக்களிடம் பிரபலம் ஆனார்கள். இதில் ஷைஜியும் அவரின் மகள்கள் இருவரும் நடன நிகழ்ச்சிகள் மூலம் ஏற்கனவே ஓரளவு பிரபலம் ஆனவர்கள் தான்.

null

அப்படி நடன திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ள ஷைஜியும் அவரது மகளும் அவர்களின் சரும பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.

ஸ்கின் கேர்

ஆயிஷு

null

ஸ்கின் கேர் ரொம்ப முக்கியமான விஷயம், மேக்கப் போடுவதால் கட்டாயம் ஸ்கின் கேர் பயன்படுத்த வேண்டும். மேக்கப் போட்டாலும் சரி, ஸ்கின் கேர் ஆனாலும் சரி கம்மியான பொருட்கள் பயன்படுத்துவது தான் நல்லது. நாம் மினிமலான ஸ்கின் கேர் தான் பயன்படுத்துவேன்.

ஷைஜி

null

என் அம்மா சொல்லிகொடுத்த பொருட்கள் தான் நான் என் சருமத்திற்கு பயன்படுத்துகிறேன். டான்ஸ் ஷோ இருப்பதால் மேக்கப் போட வேண்டிய கட்டாயம், ஆனால் மேக்கப் போட்டால் முகம் முழுக்க அலர்ஜி வந்துவிடும். என் அம்மா சொல்லி கொடுத்த பேஸ்பாக் தான் இன்றும் நான் கடைபிடிக்கிறேன். அதனால் என் சருமம் ஆரோக்கியமாக உள்ளது.

தேனும் எலுமிச்சை சாரும் தான் என்னுடைய முகத்திற்கு நான் பயன்படுத்துவது.  கடலைமாவு, மஞ்சள், பாசி பயர் இவை தான் நான் பயன்படுத்துவது. இவற்றை உபயோகப்படுத்தினாலே போதும், சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.

ஹேர் கேர்

null

ஹேர் கேர் குறித்து ஷைஜி கூறும்போது, நான் என்னுடைய தலைக்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துகிறேன். தேங்காய் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளிக்க மாட்டோம். நான் கேரளாவை சேர்ந்தவள், அதனால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தலைக்கு குளிப்பது வழக்கம்.

வீட்டில் உள்ள பொருட்களே போதும், உங்க சருமத்தை அழகாக வைத்து கொள்வதற்கு என்கிறார் ஷைஜி.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close