Time Table போட்டு ஊட்டிவிடுவாங்க.. Shrutika Arjun | My Beauty Secret, Glowing, Skin Treatment

thumb_upLike
commentComments
shareShare

மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, 2002-ம் ஆண்டு சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற படங்களிலும் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிகா.

ஆனால் சினிமா வாழ்க்கையில் பெரிதாக ஆர்வம் இல்லாத ஸ்ருதிகா அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகனும் இருக்கிறார்.

null

சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஸ்ருதிகா சில மாதங்கள் முன்பு தொடங்கிய குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் அதில் டைட்டில் வின்னராகவும் வந்தார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள ஸ்ருதிகா இந்த வயதில் இளமையான அழகுடன் இருக்கிறாரே என பலர் நினைத்திருக்கலாம். அப்படி நினைத்த அனைவருக்கும் ஸ்ருதிகா அவரின் சரும பராமரிப்பை பகிர்ந்துள்ளார்.

ஹாப்பி ஹெர்ப்ஸ்

null

ஸ்ருதிகா, சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு ஹாப்பி ஹெர்ப்ஸ் என்னும் ஸ்கின் கேர் பிராண்டை தொடங்கினார். இயற்கை முறையில் தயாராகும் அந்த பொருள்களை தான் ஸ்ருதிகா பயன்படுத்துவாராம்.

அது தவிர்த்து அவரின் அழகு ரகசியம் குறித்தும் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

அம்மா தான் காரணம்

null

என் சருமம் நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம். அவரின் சருமம் என் சருமத்தை விட இரண்டு மடங்கு அழகாக இருக்கும். இப்போது அவருக்கு வயதாகிவிட்டது இருந்தாலும் அம்மாவின் சருமம் மிருதுவாக இருக்கும். அவரிடமிருந்து தான் எனக்கு நல்ல சருமம் கிடைத்துள்ளது.

23 வருடம் நான் அனுபவித்தது

null

என் அம்மா சில விஷயங்களை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக கடைபிடிப்பார். எனக்கு 23 வயதில் திருமணம் ஆனது, அதற்கு முன் வரை ஒவ்வொரு நாளும் தவறாமல் டைம் டேபிள் போட்டு எனக்கு ஜூஸ் கொடுத்தார். திங்கள்கிழமை பீட்ரூட், செவ்வாய்கிழமை கேரட் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜூஸ் இருக்கும். இதில் காய்கறி ஜூஸ் வேறு, அதிலும் பாகற்காய் ஜூஸ் கொடுப்பார். இது ஒரு நாள் கூட தவறாமல் 23 வருடமும் நடந்தது.

அதிலும் என் வாழ்க்கையில் என் அம்மாவிடம் இருக்கும் வரை டீ, காபி குடித்ததில்லை. என் அம்மா ஜூஸ், பால் மட்டுமே தந்தார்.

அதன் பலன் இப்போது தெரிகிறது. இப்போது நான் என் மகனுக்கு அதை பின்பற்றுகிறேன்.

உடற்பயிற்சி

null

நான் எப்போதும் ஜிம்மிலேயே இருப்பேன். எனக்கு உடற்பயிற்சி செவது என்றால் கொள்ளை பிரியம். நான் நன்றாக சாப்பிடும் ஆள், அளவுக்கு அதிகமாக கூட உண்பேன். ஆனால் உடல் எடை அதிகமாகி விடும், அதனால் வொர்க் அவுட் செய்வேன். சில நேரங்களில் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்வேன்.

இவை தான் நான் என் வாழ்க்கையில் பயன்படுத்தும் விஷயங்கள் என அவரின் அழகு ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஸ்ருதிக்கா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close