எப்பவும் சாப்பாடு பத்தி தான் நெனச்சிட்டு இருப்பேன் : Sherin Reveals About Her WeightLoss Secret

thumb_upLike
commentComments
shareShare

தனுஷின் துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான ஷெரின், விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா என்ற ஒற்றை பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். ஆனால் அதன்பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.

null

இதையடுத்து விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தன்னுடைய கொஞ்சும் தமிழாலும், அன்பான குணத்தாலும் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் கடைசி ஐந்து போட்டியாளர்களில் ஒருவராகவும் வந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் போது சற்று பருமனாக இருந்த ஷெரின், நூறு நாட்கள் முடிந்து வெளியே வரும்போது ஆளே தெரியாமல் மாறி போயிருந்தார்.

null

பிக்பாஸ் முடிந்த பிறகும் தன் உடல் எடையை அப்படியே பாதுகாத்து வரும் அவர், தனுடை வெயிட் லாஸ் பற்றியும், அதற்கு தான் எடுத்துகொள்ளும் உணவுகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறும்போது, நான் காலையில் ஒரு கப் டீ உடன் தான் என் நாளை தொடங்குவேன். பொதுவாக நான் அதிகம் சாப்பிட மாட்டேன். ஆனால் எப்போதும் சாப்பாடு பற்றியே யோசித்துக் கொண்டு, அதைப்பற்றியே பேசிக்கொண்டே இருப்பேன். என்னுடன் இருப்பவர்கள் என்னை கேட்பார்கள், நீங்கள் அளவாக சாப்பிடுகிறீர்கள். ஆனால் எப்போது பார்த்தாலும் சாப்பாடு குறித்தே பேசுகிறீர்களே என்று. என்னவோ நான் அப்படிதான்.

null

காலையில் இரண்டு முட்டை, அதில் வெண்ணெய் போட்டு உப்பு போட்டு சாப்பிடுவேன். மதியம் தான் அதிகமாக சாப்பிடுவேன். ஒரு ரொட்டி, ஒரு கிண்ணம் அளவு அரிசி சாதம், நிறைய காய்கைகள், கீரை குழம்பு, கூடவே மீன் எடுத்துக்கொள்வேன். எனக்கு சிக்கன் பிடிக்காது, ஆனால் மீன் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் சாம்பார் சாதம் என்றால் எனக்கு உயிர், அதனுடன் சிப்ஸ் வைத்து சாப்பிடுவேன் என்றார் ஷெரின்.

இரவு உணவு பற்றி அவர் கூறும்போது, இரவு ரொம்ப கம்மி தயிர் அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவேன். இல்லையென்றால் காய்கறிகள் வேக வைத்து சாலட் போன்று சாப்பிடுவேன். மீன் என்று சமைக்கிறோமோ அன்று நான் அதை இரவுக்கும் எடுத்துக் கொள்வேன். இது தான் என் உணவு பழக்கம். ஆனால் எப்போதும் காய்கறி சேர்த்துக் கொள்வேன் என்கிறார் ஷெரின்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close