Face Glowing ஆ இருக்க இத பண்ணா போதும் : Serial Actress Sahana Skin Care Secrets Revealed

thumb_upLike
commentComments
shareShare

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதிலும் சன் தொலைக்காட்சி தான் சீரியல்களின் அரசனாக இருந்து தொலைக்காட்சி தொலைக்காட்சி சீரியல்கள் பொறுத்த வரை சன் டிவி தான் இல்லத் தரசிகளின் ஒரே சாய்ஸ்.

null

 

அந்த வகையில் சமீபத்தில் நிறைவடைந்த ‘அழகு’ சீரியல் இல்லத் தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ரேவதி, உல்ட்டா பலர் நடித்தனர். இந்த தொடரில் ரேவதியின் மகளாக நடித்து வந்தார் சஹானா. ஆனால், இவர் பாதியில் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

null

அவர் தற்போது சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் ஒரு ரோலில் நடித்து வருகிறார். பகல் நிலவு தொடர் மூலமாக அறிமுகம் ஆனா அவர் அதற்கு பிறகு அழகுக்கு சீரியலில் நடித்து பாப்புலர் ஆனார்.

சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்து இருக்கும் சஹானாவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சஹானா நம்மிடம் அவரின் அழகு ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.

ஸ்கின் கேர்

null

தினமும் மேக்கப் போடுவதால், சருமம் அதிகமாக பாதிக்கப்படும், சூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்ததும் மேக்கப் ரிமூவ் செய்துவிட்டு முகத்தில் எண்ணெய் தேய்த்து விடுவேன். எண்ணெய் முகத்தில் தேய்த்து வரும் காரணத்தினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

அதேபோல் சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் நாட்களில் முகத்தில் எந்த பொருளும் பயன்படுத்த மாட்டேன். இது தவிர்த்து பழங்கள் சாப்பிடுவது என் சருமத்தை அழகாக வைத்திருக்கிறது.

ஹேர் கேர்

null

நான் அதிகமாக கலரிங் ட்ரீட்மென்ட் எல்லாம் செய்துள்ளதால், இயற்கை பொருட்கள் அதிகமாக பயன்படுத்துவேன். வெந்தயம் அரைத்து தலைக்கு பயன்படுத்துவேன். முட்டை மற்றும் தயிர் இவை தான் என்னுடைய தலைக்கு நான் பயன்படுத்தும் பொருட்கள்.

உடற்பயிற்சி

null

நான் ஸ்ட்ரிக்ட்டாக வொர்க் அவுட் செய்யும் ஆள் இல்லை, எப்போது தோன்றுகிறதோ, எப்போது என் உடல் ஒத்துழைப்பு கொடுக்கிறதோ அப்போது தான் உடற்பயிற்சி செய்வேன்.

டையட் கண்ட்ரோல்

null

இரண்டு வேளை அதிகமாக சாப்பிட்டாலும் ஒரு வேளை உணவு அளவாக எடுத்துக் கொண்டால் வெயிட் கண்ட்ரோலில் இருக்கும். நான் இரண்டு வேளை உணவாக நன்றாக எடுத்துக் கொள்வேன், ஒரு வேளை பழங்கள் மட்டுமே உண்பேன்.

இதுதான் என் அழகின் ரகசியம் என கூறுகிறார் சஹானா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close