பெண் சுதந்திரம் பத்தி பேசாதீங்க | Oorvambu Lakshmi Interview | Serial Actress

thumb_upLike
commentComments
shareShare

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த தொலைக்காட்சித் தொடர் செம்பருத்தி. அந்த சீரியலில் வில்லியாக நடித்தவர் லட்சுமி.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2003-முதல் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வருகிறார். லட்சுமியின் முதல் அறிமுகம் ‘பார்த்தாலே பரவசம்’ திரைப்படம் தான். இயக்குநர் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய பல பிரபலங்களுள் இவரும் ஒருவர். சீரியல் நடிகர்கள், தலைவாசல் விஜய், அப்சர், சஞ்சீவ், சாய் கிரண், பரத் கல்யாண் உள்ளிட்டோர்களுடன் பல சீரியல்களில் நடித்துள்ளார் லட்சுமி.

null

’ரெட்டை வாலு’, ‘வில் அம்பு’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ‘ரெட்டை வாலு’ படத்தில் இவரின் கதாபாத்திரம், பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படி அமைந்திருக்கும்.

ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஊர்வம்பு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அகல்யா சீரியல் மூலம் தொடர்களில் நடிக்க ஆரம்பித்த லட்சுமி வம்சம், செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

null

லட்சுமிக்கு திருமணமாகி மோகன் விராட் என்ற மகனும் உள்ளார். பல சீரியல்களில் காமெடி / வில்லி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், இரண்டும் கலந்த கேரக்டரில் செம்பருத்தி சீரியலில் நடித்து கலக்கினார். இப்போது பேரன்பு சீரியல்களில் அமுதாவாக நடித்து வரும் லட்சுமியுடன் ஒரு நேர்காணல்.

நான் நிஜத்தில் வில்லி இல்லை

null

சீரியல்களில் நெகடிவ் கேரக்டரில் நடிப்பதால் நிஜத்திலும் நான் அப்படி தான் என பலர் நினைப்பார்கள். ஆனால் நான் நிஜத்தில் ரொம்ப ஸ்வீட்டான ஒரு ஆள். என்னை நிஜத்தில் சந்திக்கும் பலர் ஆச்சர்யப்பட்டுப் போவர்.

மக்களின் அன்பு

null

வெளியில் செல்லும்போது மக்கள் என்னை பார்த்தால் நீங்கள் சீரியல்களில் வில்லியாக நடிக்கிறீர்கள், நிஜத்தில் அப்படி இல்லையே என கூறுவார்கள். நிஜத்தில் பேசியபின் என் மீது அவர்களுக்கு இருக்கும் அபிப்ராயம் மாறி விடும். சீரியலில் தான் நான் வில்லி, நிஜத்தில் ரொம்ப ஜாலியான, பாசமான பெண் தான்.

ஊர்வம்பு

null

ஊர்வம்பு சமயத்தில் நான் யாரிடமும் செட்டில் பேச மாட்டேன், நான் பணிபுரிந்தது எல்லாம் சீனியர் நடிகர்களுடன் அதனால் நாம் ஏதாவது பேசி தப்பாகி விடுமோ என அமைதியாக இருப்பேன். ஆனால் ஊர்வம்பு நிகழ்ச்சி பார்த்து இந்த பெண் அறிவாளி, நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளாள் என என்னை அழைத்து பேசுவார்கள்.

வீட்டில் என் நிலைமை

null

செட்டில் இருந்து கிளம்பும்போது, வனஜா, அமுதா என அனைவரையும் கழட்டி வைத்து விடுவேன், வீட்டிற்கு சென்றால் என் மகன் என்னைப் பார்த்து அம்மா நீங்கள் சின்ன பிள்ளை, அமைதியாக உட்காருங்கள் என்று சொல்லி விடுவான். என் மகன் மட்டுமல்ல, சீரியலில் என் மகனாக நடிப்பவர்களும் இதையே தான் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு வெகுளியான ஆள் நான்.

வனஜா, அமுதா, இருவருக்கும் உள்ள வித்தியாசம்

null

வனஜா, அமுதா இருவரும் அடிப்படையில் வில்லிகள் தான். ஆனால் இவர்கள் இருவருக்கும் நான் வித்தியாசம் காட்ட வேண்டும். நான் என்ன செய்தாலும் வனஜாவுடன் ஒப்பிடுவார்கள். இருவரும் உடுத்தும் உடையில், நகையில் இருந்து நான் வித்தியாசம் காட்ட தொடங்குவேன். அதேபோல் பிரியாராமன் போல் நான் உடை அணிய மாட்டேன், இங்கு ராஜராஜேஸ்வரி போல் உடை அணிய மாட்டேன். நான் லட்சுமியாக தான் எப்போதும் இருப்பேன்.

யூட்யூப்

null

சீரியல்களில் நடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும், இதில் நான் யூட்யூப் சேனலும் நடத்தி வருகிறேன். புதன்கிழமை வீடியோ போட வேண்டும் என்றாலும், செவ்வாய்கிழமை இரவு கூட சூட்டிங் செய்வோம். அது என் ஆத்ம திருப்திக்காக நான் செய்வது. பணமும் அதில் கிடைக்கும், ஆனால் அதையும் தாண்டி என்னை எப்போதும் பிசியாக வைத்துக் கொள்வேன்.

சரஸ்வதி பூஜை அன்று நடக்கும் அதிசயம்

null

ஆனால் நிச்சயம் நம் செய்யும் வேலைக்கு தகுந்த பரிசு கிடைக்கும். ஒவ்வொரு சரஸ்வதி பூஜைக்கும் எனக்கு அவார்ட் கிடைத்து விடும், மூன்று வருடங்களாக இது நடந்து வருகிறது.

பெண்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள்

null

பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும், தன்னம்பிக்கை இருக்க வேண்டும் அத்துடன் சேர்த்து முகத்தில் என்றும் மாறாத புன்னகை இருக்க வேண்டும். இவை மூன்றும் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

பெண் சுதந்திரம் பத்தி பேசாதீர்கள்

null

பெண் சுதந்திரம், பெண் சுதந்திரம் என்று பேசாதீர்கள், நம் சுதந்திரம் நம்மிடம் தான் உள்ளது. பெண்கள் வீட்டில் தான் இருக்கணும் என்று சொல்வது எனக்கு கடுப்பாக இல்லை, ஆனால் பெண்கள் வெட்டில் தான் இருக்கனுமா என கேட்பது தான் கடுப்பாக உள்ளது.

கடமைகளை சரியாக செய்தால் உங்கள் உரிமைகள் உங்களிடம் வந்து விடும். வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள் என காட்டி விட்டால், வீட்டில் இருந்தே இவள் இவ்வளவு செய்கிறாள் வெளியில் சென்றால் எவ்வளவு செய்வாள் என்ற என்னத்தை கொண்டு வாருங்கள். ஒரு நம்பிக்கையை உருவாக்குங்கள்.

இவ்வாறு லட்சுமி பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close