சீரியல் தம்பதிகள் திருமணம் மறைக்கப்பட்டது உண்மையா? | Dhivya Sridhar | Actor Arnav

thumb_upLike
commentComments
shareShare

கேளடி கண்மணி என்கிற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீதர். தொடர்ந்து இவர் மகராசி, செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அர்ணவ் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரின் மூலம் பிரபலமானவர். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

null

ஐந்து வருடம் காதலித்து லிவிங் டுகெதரரில் இருந்த இந்த ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அர்ணவை திருமணம் செய்து கொண்டதை நடிகை திவ்யா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை திவ்யா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

null

மேலும் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ணவ், தற்போது தன்னை விட்டு விட்டு வேறு ஒரு சீரியல் நடிகையுடன் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சமீபத்தில் தான் எனக்கும் அர்ணவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார்.

null

இரண்டு வருடத்துக்கு முன்னாடி நாங்க ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் எல்லாமே நான் தான் செட்டில் பண்ணி இருந்தேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ண கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணினேன்.

null

ஆனால் அர்ணவ் என்னை அடித்து நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிற்றில் அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழித்து தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை. என்னால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது" என்று திவ்யா கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

null

ஆனால் மனைவி திவ்யா மீது அர்ணவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், திவ்யாவை தாக்கினதாக சொல்லப்படுவது முற்றிலும் பொய், ஏற்கனவே திவ்யா திருமணம் செய்து விவாகரத்து ஆகி அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இப்போ சந்தேகப்ப்படும்படி பல சூழல்கள் உள்ளதால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். அதற்கான சி.சி.டி.வி. ஆதாரம் என்னிடம் உள்ளது என அர்ணவ் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருட காதல் இன்று இப்படி ஒரு சூழலுக்கு வந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும் கண்ணீருக்கு விடை கிடைக்குமா?

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close