வர சொல்லி ரௌடியை வைத்து தாக்கியது ஏன்? கொந்தளிக்கும் சாந்தினி : Santhini About Ex-minister Manikandan

thumb_upLike
commentComments
shareShare

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். நாடோடிகள் படத்தில் நடித்தவர் துணை நடிகை சாந்தினி, இவர் மலேசிய சுற்றுலா கழகத்தில் ஒரு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் சாந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியதாம். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

null

இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் சாந்தினி 3 முறை கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மூன்று முறையும் சாந்தினியை வலுக்கட்டாயப்படுத்தி கர்ப்பத்தை மணிகண்டன் தனது மருத்துவ நண்பர் மூலம் கலைத்துள்ளதாகவும் சாந்தினி குற்றம்சாட்டியிருந்தார்.

சாந்தினி

null

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என புகார் கூறியிருந்தார் சாந்தினி. சாந்தினியின் புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கேட்ட மணிகண்டன்

null

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் பல முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு கடந்த ஜூலை மாதம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை உயர்நீதிமன்றம் வழங்கியது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சாந்தினி அளித்த புகார் வாபஸ்

null

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தினி அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. அப்போது நீதிபதி, சாந்தினி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் என மணிகண்டன் வழக்கு தொடர்ந்தால் என்னவாகும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மணிகண்டன் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ராமநாதபுரத்தில் மாஜி அமைச்சர்

null

இதையடுத்து அவரை சந்திக்க சாந்தினி அவரின் சொந்த ஊரான ராமநாதபுரம் சென்றார். வீட்டின் வாசலில் நின்று கூச்சலிட்டதால் மணிகண்டனின் வீட்டில் இருந்தவர்கள், மணிகண்டன் இங்கே இல்லை. இங்கிருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரின் நலன் கருதி நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தன்மீதான தவறை ஒப்புக்கொண்டு மணிகண்டன் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வழக்கை திரும்ப பெற்றேன். அதற்கு மறுநாள் முதல் அவர் தலைமறைவாகி விட்டார். நானும், எனது வக்கீல், போலீசார் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் மதுரை வந்தேன். நடைபயிற்சி சென்று கொண்டிருந்த அவர் என்னை பார்த்து கார் அருகில் செல்லுமாறும், தான் அங்கு வருவதாகவும் கூறினார். ஆனால், வரவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். உள்ளே இருந்த நிலையில் வீட்டில் இல்லை, பெங்களூரு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

காலில் காயம்

null

இது அவரின் ஊர் என்பதால் இங்கு வந்தேன். அவரது தாய் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் இங்கு இல்லை என்று கூறி என்னை தாக்கினர். இதில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. என்னிடம் வழக்கை வாபஸ் பெறும் முன் அளித்த வாக்குறுதிப்படி நடக்க வேண்டும். அதற்கு அவர் முதலில் என்னை சந்திக்க வேண்டும், அதுவரை நான் ஓயமாட்டேன். எனக்கு நீதி வேண்டும் அதுவரை போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து பஜார் காவல் நிலைய போலீசார் அவரை அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நடிகை சாந்தினி காரில் மதுரையில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். இதன்காரணமாக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் வீட்டின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

null

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வராமல், மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நடிகை சாந்தினி சென்றார். காலில் பேண்டேஜ் போடப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரிக்கு வந்த அவருக்கு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தலைசுற்றல் இருப்பதாக அவர் தெரிவித்ததால் டாக்டர்கள் அவரை படுக்கையில் அனுமதித்து குளுக்கோஸ் ஏற்றினார்கள். எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பு முறிவு இல்லை என தெரியவந்தது.

போன் எண்கள் பிளாக் செய்த மணிகண்டன்

null

எனது போன் எண்களை பிளாக் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதுரையில் வைத்து மணிகண்டனை நான் பார்த்துவிட்டேன். என்னை பார்த்ததும் அவர் ஓடிவிட்டார். இதையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நான் இங்கு வந்தேன். ஆனால் அவருடைய உறவினர்கள் என்னை தாக்குகிறார்கள்.

எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். என் முன் மணிகண்டன் வந்து நிற்கும் வரை நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். என்னை பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு இப்படி ஓடி ஒளிந்து கொள்ளலாமா என கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார் சாந்தினி.

என்னை ஏமாற்றி விட்டார்

null

நான் அவர் பின்னால் செல்லவில்லை, அவர் தான் என் பின்னாடி வந்தார். அவரின் திருமண வாழ்க்கை சரியில்லை என்றும், என்னை விரும்புவதாகவும் கூறினார். என்னை திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என கூறி நம்பிக்கை அளித்து ஏமாற்றி விட்டார்.

இந்த கேசுக்காக நான் 35 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். மீண்டும் பொருளாதார அளவில் முன்னேற வேண்டிய நிலையில் நான் உள்ளேன். அவர் என்னை திருமணம் செய்து கொண்டார், ஆனால் போட்டோஸ் எதுவும் நாங்கள் எடுக்கவில்லை. என்னுடைய குழந்தையாவது எனக்கு விட்டு வைத்திருக்கலாம். அதையும் கலைத்து என் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்.

இது அனைத்துக்கும் அவர் பதில் சொல்ல வேண்டும், அவரின் குடும்பத்தார் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார் சாந்தினி.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close