பல ஆண்டுகளாக என் உடலுடன் நான் போராடினேன் ; சமீரா ரெட்டி

thumb_upLike
commentComments
shareShare

ஒருவேளை நான் வாழ்க்கையின் இளமைப்பருவத்தை திரும்பி சென்று பார்க்க முடியுமானால், அப்போதுள்ள சமீராவிடம் சுய மரியாதை தான் முக்கியம் என கூறுவேன், என கூறியுள்ளார் சமீரா ரெட்டி.

null

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் மேக்னாவா நம்மை ஈர்த்த சமீராவை நாம் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வந்தவர், அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.

null

சமீராவுக்கு ஹன்ஸ் மற்றும் நைரா என அழகான இரு குழந்தைகள் உள்ளனர். கல்யாணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த சமீரா ரீ-என்ட்ரி கொடுத்தது சோசியல் மீடியாவில் தான். அதுவும் தன் இரண்டாவது குழந்தையின் கர்ப்ப காலத்தில் தான்.

null

சமீராவை பொறுத்தவரை எந்த விஷயமாக இருந்தாலும், தைரியமாக பேசக் கூடியவர். கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், பிரசவத்திற்கு பின் வரும் மன சோர்வு, உடல் எடை அதிகரிப்பு என பல விஷயங்களை அவர் சோசியல் மீடியா மெல்லாம் பகிர்ந்து வருகிறார்.

null

சமீராவின் போஸ்ட்டுகள் அனைத்தும், பல பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வருகிறது. இந்த நிலையில், பிரசவத்திற்கு பின் தன்னை நேசிப்பது எவ்வளவு கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

null

காஸ்மோபொலிடன் என்னும் இதழுக்கு பேட்டி அளித்துள்ள சமீரா பிரசவத்திற்கு பின் தான் அனுபவித்த மன வலியை பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, பல ஆண்டுகளாக என் உடலுடன் நான் போராடினேன். நான் பார்க்க எப்படி உள்ளேன் என நினைத்து வருந்தியுள்ளேன்.

null

நான் இப்படி இருக்க வேண்டும் என நினைத்து பல கிலோ எடை குறைந்துள்ளேன். என் குறைகளை சுட்டிக்காட்டிய ஆண்களை டேட்டிங் செய்துள்ளேன். அது இன்னும் என்னை மோசமாக உணர வைத்தது.

null

பிரசவத்திற்கு பின் என்னை, என்னால் நேசிக்க முடியவில்லை. ஒரு பெண் பிரசவித்த பெண், சில மாதங்களுக்குள் எடை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். இது நம்பத்தகாதது.

null

எனக்கு இன்னும் தொய்வான வயிறு உள்ளது, அது எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் மாறவில்லை. ஒருவேளை நான் காலப்போக்கில் திரும்பி செல்ல முடியும் என்றால், சுய மரியாதை தான் முக்கியம் அதை முதலில் கவனி என அந்த சமீராவுக்கு சொல்வேன் என கூறியுள்ளார்.

null

சமீராவின் இந்த பேச்சுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது அவள் விருப்பம், அவளை ஏன் குண்டாக இருக்கிறாய், ஏன் ஒல்லியாக இருக்கிறாய் என கேட்பது. உடல் எடை குறைக்க சொல்வது எல்லாம் தவறான செயல்.

பெண்கள் எப்போதும் தங்களை சந்தோசமாக வைத்து கொள்ள வேண்டும்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close