My Green Detox Juice.. Sakshi Agarwal | Fitness, Diet, Weight Loss, Workout, Celeb Talk

thumb_upLike
commentComments
shareShare

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருபவர் சாக்சி. சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியே இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

null

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அரண்மனை 3 படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடித்தார். இப்போது ஆறு படங்களை கைவசம் வைத்துள்ள சாக்சி பிட்னஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமல்ல பார்ப்பதற்கு இன்றும் காலேஜ் பெண் போல் இருக்கிறார். அவர் நம்மிடம் அதன் ரகசியங்களை பகிர்ந்துகொண்டார்.

காலை உணவு

null

அவர் கூறும்போது, காலையில் எழுந்தவுடன் இரவு ஊறவைத்த பாதாம் உட்கொள்வேன், சிறிது நேரம் கழித்து கிரீன் ஜூஸ் எடுத்துகொள்வேன். அதில் பாகற்காய், கருவேப்பிலை, புதினா, வெள்ளரிக்காய், கொத்தமல்லி என மொத்தம் ஐந்து பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அதன்பின் சிறிது நேரம் கழித்து இஞ்சி டீ குடிப்பேன். இஞ்சி டீ குடித்தால் தான் என்னால் அடுத்த வேலையை செய்ய முடியும்.

டையட்

null

நான் பெரிதாக டையட் எல்லாம் பின்பற்ற மாட்டேன். வீட்டு உணவு தான் எடுத்தக் கொள்வேன். சப்பாத்தி, பருப்பு இவை தான் என்னுடைய உணவு. எனக்கு டையட் செய்வதில் நம்பிக்கை இல்லை. நன்றாக சாப்பிட வேண்டும், அதுவும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும், அது தான் முக்கியம்.

நான் அந்த தவறை செய்திருக்க கூடாது

null

நான் பள்ளியின் இறுதி ஆண்டில் இருந்தபோது, என் அம்மா செய்யும் பாதாம் அல்வாவை விரும்பி சாப்பிட்டேன், அதன் விளைவு 11 கிலோ வெயிட் போட்டு விட்டேன். காலேஜ் செல்வதற்கு இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது, அதனால் எப்படியாவது எடை குறைக்க வேண்டும் என்று கடுமையான டையட் இருந்தேன். காலையில் சாத்துக்குடி ஜூஸ், இரவில் சூப் இவ்வளவுதான். ஒரே வாரத்தில் ஏழு கிலோ வரை குறைத்தேன். ஆனால் அது என் உடம்புக்கு தீங்கையே விளைவித்தது. சாப்பிடாமல் இருந்து எடை குறைப்பது என்பது நல்லதல்ல.

உடற்பயிற்சி

null

உடற்பயிற்சியையும் என்னையும் பிரிக்க முடியாது. நான் பல வருடங்களாக உடற்பயிற்சி செய்து வருகிறேன், எனக்கு உடற்பயிற்சி செய்வது சந்தோசத்தை கொடுக்கிறது. அது என் வாழ்வின் முக்கிய அங்கம் ஆகி விட்டது என்கிறார் சாக்சி.

இவ்வாறு அவரின் டையட், மற்றும் உடற்பயிற்சி ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close