பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்கள்- Revathy Sankaran

1 Reactions
thumb_upLike
commentComments
shareShare

தொழில்நுட்பத்தால் எந்திரமாக மனிதர்கள் இயங்கி கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆன்மிகமும், கடவுள் பக்தியும் குறைந்து வருகிறது என்றே சொல்லலாம். அதிலும் கடவுளை வழிபடும் முறைகள் பற்றியும் அதில் உள்ள விஞ்ஞானம் பற்றியும் நாம் பாதிக்கு பேருக்கு மேல் தெரிவதில்லை. இவை நம் பெற்றோர்கள், நம் வீட்டு பெரியவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் வெகு சில இடங்களிலே இவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொண்டுகின்றனர். இதனால் நம் முன்னோர்களின் அற்புதமான கருத்துக்கள் எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய் விடுகிறது. அவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் பக்தியையும், ஆன்மீகத்தையும் கேலி செய்து வருகிறார்கள். அவற்றை பற்றி தான் இன்று நம்முடன் ரேவதி சங்கரன் பகிர்ந்துள்ளார்.

கோவிலில் நடந்து கொள்ளும் முறை

கோவிலுக்கு செல்வது கடவுளை தரிசிக்க, மன அமைதியை பெற. ஆனால் இன்று கோவிலுக்கும் வரும் பலரும் அனாவசியமான உரையாடலை நிகழ்த்துகின்றனர். நேற்று அந்த சீரியல், பார்த்தாயா? இந்த சினிமா பார்த்தாயா என பேசுகின்றனர். இவற்றை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் கோயிலுக்குள் இருக்கும் கொடி மரத்தை நாம் வணங்கவேண்டும். அதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. அதாவது கொடிமரத்தை நிமிர்ந்து பார்க்கும் போது நம் முதுகெலும்பு நேராகிறது. மூலாதாரா, ஸ்வாதிஸ்தானா, மணிபுறா, அனாஹதா, விசுத்தா, அஞ்னா, சஹஸ்ராரா போன்ற 7 சக்கரங்களும் சீராகிறது. மூலாதாரத்தில் இருந்து குண்டலினி சக்தி சகஸ்ராரத்திற்கு செல்கிறது.

அதேபோல் தெய்வத்திற்கு அபிஷேகம் முடியவும் ஒரு ஸ்கிரீன் போட்டு மூடிவிடுவார்கள், உடனே வெளியே இருக்கும் மக்கள் நாம் பார்க்க கூடாதம் ,அதான் இப்படி செய்கிறார்கள் என்கிறார்கள். உள்ளே அபிஷேகம் செய்வதால் ஒரு பாசிடிவான சக்தி உருவாகிறது, அது உனக்கு வர வேண்டும் என்பதற்காக தான் முதலில் திரை போடுகிறார்கள். அந்த தீபாராதனையை நீ கண்ணில் வைத்துக் கொள்ளும்போது உனக்கு அந்த சக்தி கிடைக்கிறது.

பலி பீடங்களை தொட்டு வணங்குகின்றனர், அது கூடாது. கோயிலில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் வணங்க கூடாது. முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள்.

சிவன் கோயிலுக்கு சென்றால் திருநீரை பூசி விட்டு, வயிற்றில் தடவி கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நம் உடலை தட்டிவிட்டு தான் அங்கு இருந்து செல்ல வேண்டும். இதற்கு காரணம் நான் எதையும் இங்கிருந்து எடுத்து செல்லவில்லை என்பது தானாம்.

திருநீரை அணிந்து கொள்ள ஒரு காரணம் உண்டு. அதாவது என்றாவது ஒரு நாள் நாம் சாம்பலாக போகிறோம். அதற்குள் நல்ல விஷயங்களை மட்டும் நினைத்து, செய்து, இறைவனை வழிபட்டு போக வேண்டும் என்பதே இதன் பொருள்.

கோயிலில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவார்கள். அது தவறு, சற்று சிந்தியுங்கள். எலுமிச்சை ஈரம், அதனுடன் எண்ணெய் சேர்ப்பது நல்லதல்ல. அகல்விளக்கில் தீபம் ஏற்றுங்கள்.

கண் திருஷ்டி

நம் இந்தியாவில் மட்டும் தான் இந்த பழக்கம் உண்டு. பிறந்த குழந்தைகளுக்கு மை இடுவார்கள், அப்போது அந்த குழந்தைகள் வாயால் வித்தியாசமான ஒலி எழுப்புவார்கள். அது நம் நாட்டில் மட்டும் தான் நடக்கும்.

மை இடுவது குழந்தைக்கு திருஷ்டி பட்டுவிடக் கூடாது என்பதற்காக தான். அதனுடன் சேர்த்து அரைஞாண் கயிறு கட்டுகிறோம். இதனால் நாம் குழந்தையை ரசித்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்போம். கண் திருஷ்டியும் வராது.

என் பாட்டி திருஷ்டி போவதற்கு இரண்டு வழிமுறையை பின்பற்றினார். ஒன்று தண்ணீரில் மஞ்சள் தூள் கலந்து, சுண்ணாம்பு தண்ணி கலந்தால் அது ஆரத்தியாக மாறி விடும். அதில் கற்பூரம் வைத்து நமக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்கு வெளியே சென்று அதை கொட்டி விடுவார்கள். இதை தான் இப்போது ஹீலிங், ரேக்கி முறை என்று வெளிநாட்டவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இரண்டாவது முறை அனைவருக்கும் தெரிந்தது தான். கல்லுப்பு, மிளகாய், கடுகு வைத்து தலையை சுற்றி திருஷ்டி கழிப்பது. இவற்றை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் வராது.

வீட்டில் வைக்க வேண்டிய சாமி படங்கள்

நம் பூஜை அறையை சிறு கோவில் போல வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நிறைய சாமி படங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். பேப்பரில் பார்த்தேன் அதை வைத்துள்ளேன், அடுத்தவர் கொடுத்தார் வைத்தேன் என வைக்க கூடாது. உங்களின் முன்னோர்கள் வைத்து வழிபட்ட படங்களை வைத்தால் இன்னும் சிறப்பு.

முக்கியமாக குடும்பத்துடன் இருக்கும் சாமி படங்களை வைக்க வேண்டும், சிவபார்வதி, விஷ்ணு மகாலட்சுமி, முருகன் வள்ளி தெய்வானை, விநாயகர் சித்தி வித்தி இவர்களுடன் இருக்கும் படங்கள் சிறப்பு. சிலர் விவகாரமான கேள்வி ஒன்றை கேட்பார்கள், அதாவது முருகனுக்கு இரண்டு மனைவிகள், அந்த படம் வைத்தால் என் மகனுக்கும் இரண்டு மனைவிகள் வருமா என்று, இதுதான் மூட நம்பிக்கை.

முருகன், வள்ளி, தெய்வானை இவர்கள் மூவரும் ஒரே சக்தியே. இச்சா, கிரியா, ஞான சக்தி கேள்விப்பட்டதுண்டா. அவற்றை விளக்குவதே இதுவாகும். முருகன் ஞான சக்தி, வள்ளி, தெய்வானை இருவரும் இச்சா, கிரியா சக்திகள். இதை தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.

ராமர் படம் வைக்கலாம், அதுவும் போருக்கு போகும் படம் இல்லாமல், பட்டாபிஷேகம் படம் வைக்கலாம். காளி, காட்டேரி, ஆக்ரோசமான துர்கை படங்கள் வைக்க கூடாது. சாந்தமான புகைப்படங்களே வைக்க வேண்டும்.

சாமி படம் நான் வைக்க மாட்டேன் என்றால், விளக்காவது ஏற்றலாம். இறைவனை ஒளி வடிவில் காணுங்கள்.

மெய்ஞானமும் பார்க்கணும், விஞ்ஞானமும் பார்க்கணும். மெய்ஞானத்தில் உள்ள உண்மையையும், விஞ்ஞானத்தில் உள்ள யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் நமக்கு பல அறிய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்கள். அதை நாமும் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம் என அன்போடு இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார் ரேவதி சங்கரன்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close