Dubbing Artist To நடிகையானது எப்படி ? : Raveena Ravi Interview | Pradeep, Love Today

thumb_upLike
commentComments
shareShare

சமந்தா, எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், ராஷி கண்ணா, அமலா பால் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயககிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துக்கொண்டு வரும் ரவீணா ரவி, ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றார்.

null

தற்போது பிரதீப் ரங்காநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் நடித்து கவனம் பெற்ற இவர் புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள். இவருடன் ஒரு நேர்காணல்

லவ் டுடே படத்தில் நடித்துள்ளீர்கள், காதல் மீது உங்கள் அபிப்ராயம் என்ன ?

null

நான் 90-ஸ் கிட், அதனாலேயே எனக்கு கல்யாணம் என்றால் பயம். கல்யாணம் என்றால் அந்த நபர் நல்ல புரிதலோடு இருக்க வேண்டும், என்னுடைய துறையில் அவருக்கு உடன்பாடு இருக்க வேண்டும்.

என் அம்மா அப்பாவிடம் நான் கற்றுக்கொண்ட ஒன்று எத்தனை சண்டை வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வர். அந்த புரிதல் இருக்க வேண்டும் என நான் நினைகின்றேன்.

டப்பிங் துறையில் உள்ள வரவேற்பு பற்றி ?

null

டப்பிங் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளது, நல்ல வரவேற்பும் உள்ளது. என் அம்மா காலத்தில் அவர்கள் பெயர் கூட வெளியே மக்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது அப்படி இல்லை டப்பிங் கலைஞர்களின் பெயரும் வெளியே தெரிகிறது. மக்களிடம் வரவேற்பு உள்ளது.

அம்மா ஐந்து மாநில விருது வாங்கியுள்ளார், அப்போது தான் அவர்கள் நேர்காணல் கொடுப்பார்கள். இன்று அப்படி இல்லை. இது ஒரு நல்ல துறை. முதலில் உங்கள் குரல் இனிமையாக இருந்தால் தான் டப்பிங் என்று இருந்தது, ஆனால் இப்போது அப்படி இல்லை.

வாய்ஸ் ஆக்டராக இருந்ததற்கும் இப்போது நடிகையாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் ?

null

டப்பிங் செய்யும் போது என் குரலுக்காக கூட நான் எதுவும் மெனக்கெட்டது இல்லை, ஆனால் நடிகை ஆனபின் டையட், வொர்க்அவுட் என ரொம்ப கஷ்டமாக உள்ளது. சருமத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், இது எல்லாம் எனக்கு மிக பெரிய விஷயமாக உள்ளது.

உங்கள் சருமத்தை எப்படி பராமரிக்கிறீர்கள் ?

null

நான் இதுவரை பேஷியல் கூட செய்ததில்லை, என் முகத்தில் நிறைய பருக்கள் உண்டு. வீட்டில் இருக்கும் தயிர், கடலைமாவு தான் நான் பயன்படுத்துகிறேன்.

அம்மா குறித்து

null

என் அம்மா தான் எனக்கு எல்லாம், அவர் தான் என்னுடைய குரு. நான் பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கூட டப்பிங் பேசிவிட்டு வந்தார். அந்தளவுக்கு கடுமையாக உழைக்கக் கூடியவர். இப்போது கூட மலையாளத்தில் சாய் பல்லவிக்கு பேசியுள்ளார்.

என் அம்மா எனக்கு எப்போதுமே பக்கபலமாக இருந்துள்ளார்.  அம்மா நான் பேசும் படங்கள், நடிக்கும் படங்கள் இவற்றால் சந்தோஷமாக இருக்கிறார். அதுவே எனக்கு சந்தோசம்.

பெண்களுக்கு சம்பாத்தியம் எவ்வளவு முக்கியம்?

null

பெண்கள் சம்பாதிக்க வேண்டும், உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவாது நீங்கள் சம்பாதிக்க தொடங்குங்கள். நான் கல்லூரி படிக்கும்போது இருந்து சம்பாதிக்கிறேன், கல்லூரி பீஸ் கூட நான் என் பணத்தில் தான் கட்டினேன். நாளை கல்யாணம் செய்து இன்னொரு வீட்டிற்கு செல்வோம், அதனால் எப்போதும் பெண்கள் சம்பாரிப்பது அவசியம்.

டப்பிங் பேச வரும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை

null

டப்பிங் யார் வேண்டுமானாலும் பேசலாம். யூ.ட்யுபில் ஒரு காட்சியை போட்டு பார்த்து அதை உள்வாங்கி, சவுண்ட் ம்யூட் செய்து நீங்கள் பேசி பாருங்கள். பிராக்டீஸ் செய்ய செய்ய தான் வரும், தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

டிக்டாக்கில் டயலாக்கிற்கு வாய் அசைப்பதும், டப்பிங் செய்வது முற்றிலும் வேறு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தெய்வ நம்பிக்கை குறித்து

null

தெய்வ நம்பிக்கை எனக்கு உண்டு, நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது. போன வருடம் என் அப்பா இறந்ததிலிருந்து நான் அவ்வளவாக சாமி கும்பிடுவதில்லை. கெட்டவர்கள் எல்லாம் இருக்கும்போது என் அப்பா ஏன் சென்றார் ? என்ன நடக்குமோ அது தான் நடக்கும் என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டேன்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close