நிறைய பேர் என்கிட்ட அடி வாங்கிருக்காங்க - பல தடைகள தாண்டி வந்திருக்கேன் : Annalakshmi Interview

thumb_upLike
commentComments
shareShare

விஜய் டி.வியின் 'கலக்கப்போவது யாரு?' அன்னலட்சுமி என்றால், தெரியாதவர்கள் கிடையாது. நிகழ்ச்சியின் நடுவர்கள் அவரை 'அக்கா' என அழைத்தே கலாய்த்து தள்ளினார்கள். அந்த சீசனில் அன்னலட்சுமி தேர்வாகாவிட்டாலும் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. தற்போது, சன் டி.வியின் 'காமெடி ஜங்ஷன்' நிகழ்ச்சியில் கலக்கிவருகிறார்.

பலரை தன் பேச்சால் மகிழ்விக்கும் அன்னலட்சுமியுடன் ஒரு நேர்காணல்.

அன்னலட்சுமி பற்றி

null

என் சொந்த ஊர் திருச்சி, நான் ஆசிரியராக இருந்தேன், அதுமட்டுமல்லாமல் பட்டிமன்ற பேச்சாளரும் கூட. இப்போது முழு நேர பட்டிமன்ற பேச்சாளராக உள்ளேன். அத்துடன் டிவி காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறேன்.

ஏன் காமெடி ட்ராக்

கிராமங்களில் பட்டிமன்ற பேச செல்கிறோம் என்றால் இரவு பத்து மணிக்கு மேல் தான் பட்டிமன்றம் ஆரம்பிக்கும், அந்த மக்களை தூங்க விடாமல் பேச்சை ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக காமெடி ட்ராக்கை கையில் எடுத்தேன். இன்று அதுவே என் அடையாளம் ஆகி விட்டது.

பட்டிமன்றம் வந்தது எதனால் ?

null

ஒருவேளை எனக்கு அரசாங்க வேலை கிடைத்து இருந்தால் நான் பட்டிமன்ற பேச்சாளராகி இருக்க மாட்டேன். ஆனால் எனக்கு சிறுவயதில் இருந்தே பேச்சு, பாடல், நடனம் இவை அனைத்திலும் ஆர்வம் அதிகம். அதனால் நிறைய ஆடிசன்கள் சென்றேன், அப்படி எனக்கு கிடைத்தது தான் பட்டிமன்ற வாய்ப்பு. தஞ்சை இன்புமணி அவர்கள் தான் எனக்கு பட்டிமன்ற வாய்ப்பு கொடுத்தது, அவர் இல்லை என்றால் இந்த பட்டிமன்ற உலகில் இன்று அன்னலட்சுமி இல்லை. 

என் குடும்பத்தாரின் ஆதரவு ?

என் குடும்பத்தார் முதலில் என்னை அனுமதிக்கவில்லை, எதிர்த்தார்கள். நீ படித்து டீச்சர் வேலைக்கு தான், அதற்கு தான் போக வேண்டும் என சொன்னார்கள். என்னை தனியாக கூட அனுப்ப மாட்டார்கள், அண்ணன் அப்பா யாராவது துணைக்கு வருவார்கள். அதேபோல் நான் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததால், மற்ற ஆசிரியைகள் மூலம் சில பிரச்சனைகள் இருந்தது. தடைகளை தாண்டி வந்ந்து சாதித்த பெண் தான் நானும்.

இரவு நேரத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்

null

இரவு நேரத்தில் பயணம் செய்வது இப்போது சாதாரணமாகி இருக்கலாம், முன்பெல்லாம் நிறைய பிரச்சனைகள் இருக்கும். சீட்டின் இடையே கைவிட்டு சில்மிஷம் செய்வார்கள், நிறைய பேர் என்னிடம் அடியும் வாங்கியுள்ளார்கள். சில சமயம் இரவு நேரங்களில் பனிரெண்டு மணிக்கு பட்டிமன்றம் முடிந்தபின் அங்கு பஸ்ஸே கிடைக்காது, மூன்று மணி வரை காத்திருப்போம்.

கிராமத்தில் சந்தித்த சங்கடம்

கிராமத்தில் சில இடங்களில் இன்னும் ஜாதி பிரச்சனை உள்ளது. எங்களுக்கு அந்த சங்கடம் நேர்ந்தது. சில வயதானவர்கள் தான் இன்னும் ஜாதி பார்க்கிறார்கள். பாத்ரூம் செல்வடஹ்ர்கு கூட ஜாதிக் கேட்டு எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

மேடைப்பேச்சில் வரும் பிரச்சனை

null

சில நேரங்களில் குடித்து விட்டு நம்மிடம் வாக்குவாதம் செய்வதெல்லாம் நடக்கும், அந்த சமயங்களில் காமெடியாக பேசி சமாளித்து விடுவேன். முதல் தடவை இதெல்லாம் பார்க்கும்போது பயமாக இருந்தது, இப்போது இல்லை.

கஷ்டமான தலைப்பை எங்களுக்கு தருவார்கள்

சேனலில் பட்டிமன்றம் வரும்போது எங்கள் சீனியர் தேர்ந்தெடுக்கும் தலைப்புக்கள் தான், ஆனால் கிராமத்தில் குறிப்பிட்ட பத்து தலைப்புக்கள் தான் இருக்கும். அப்போது எங்களுக்கு சிக்கல் தரும் இடத்தில் தள்ளி விடுவார்கள், இருந்தாலும் நான் காமெடியாக பேசுவதால் சமாளித்து விடுவேன்.

எந்த தலைப்பு கொடுத்தாலும் எப்படி பேசுவது

null

எந்த தலைப்பு கொடுத்தாலும் நாம் பேசுவதற்கு தயாராக இருக்க வேண்டும். யூட்யூப் எல்லாம் வந்துவிட்டதால் ஒரு இடத்தில் பேசியதை இன்னொரு இடத்தில் பேச முடியாது கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் முதலே அதற்காக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய புத்தகங்கள் படிப்போம், அதிலுள்ள விஷயங்களை மூலையில் பதிவு செய்து கொள்வேன், தக்க சமயத்தில் அதை பேசி விடுவேன்.

நெகடிவ் கமெண்ட்ஸ்

நான் இதை பற்றி சொல்லியே ஆக வேண்டும், நெகடிவ் கமெண்ட்கள் வருவது இன்று சகஜமாகி விட்டது, ஆனால் அது தவறு. என் பேச்சில் குறை இருந்தால் நான் அதை எடுத்துக் கொள்வேன், ஆனால் ஒருவரின் தோற்றத்தை வைத்து தான் இங்கு கமெண்ட்டுகள் வருகின்றன. பேச்சில் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்வேன் ஆனால் அநாகரிகமான கமெண்ட்டுகள் வேண்டாம்.

மக்களை ஈர்ப்பது எப்படி ?

பட்டிமன்ற பேச்சில் மக்களை ஈர்ப்பது தான் மிக முக்கியமான ஒன்று. முன்னாட்களில் நான் இலக்கிய நயத்துடன் பேசுவேன் அப்போது எல்லாம் எனக்கு வாய்ப்புகள் வந்ததில்லை, ஆனால் காமெடி ட்ராக்கை எடுத்த பின் தான் வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது, ரசிகர்களும் பெருக ஆரம்பித்தார்கள். அதனால் மக்களை ஈர்க்க ஒரே வழி அவர்களை சிரிக்க வைப்பது தான் என்கிறார் பட்டிமன்ற பேச்சாளர் அன்னலட்சுமி.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close