MY Honest SKINCARE Routine.. Ft. Nithyashree | Beauty Tips, Home Remedies | Get NithyaFied, Vijay TV

thumb_upLike
commentComments
shareShare

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார் நித்யஸ்ரீ. அதன்பின் பாலிவுட் டி.வி. ஷோ ஆன இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று இந்திய ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார். அதுமட்டுமல்ல ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு மலையோரம் என்ற பாடலை பாடி திரைத்துறையில் அறிமுகமானார் நித்யஸ்ரீ.

null

தனக்கென ஒரு யூட்யூப் சேனல் வைத்துள்ள நித்யா அதில் பல பாடல்களை கவர் வெர்சன் பாடியுள்ளார். தொடர்ந்து பல படங்களில் பாடி வரும் நித்யா அவரின் சரும பராமரிப்பு பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார்.

இயற்கை வைத்தியம் தான்

null

அவர் கூறும்போது, என்னை பார்க்கும் சிலர் இவள் காஸ்ட்லியான ப்ராடக்ட் எல்லாம் வாங்குவாள் என நினைப்பார்கள். ஆனால் உண்மையில் நான் வீட்டில் உள்ள பொருட்களை தான் அதிகம் பயன்படுத்துவேன். வேப்பிலை, உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், ஐஸ் இதுதான் தினமும் நான் பயன்படுத்தும் பொருட்கள்.

நான் டேர்மாடாலஜிஸ்ட் எல்லாம் பார்த்து அந்த பொருட்கள் எல்லாம் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் இயற்கையாக நம் வீட்டில் இருக்கும் பொருட்கள் தான் பெஸ்ட். ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் தான் உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும்.

ஹேர் கேர்

null

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என் அம்மா, பாட்டி இவர்களுக்கு எல்லாம் நல்ல முடி. நல்ல அடர்த்தியாக நீளமாக இருக்கும். அவர்களிடம் இர்ருந்து எனக்கு கிடைத்தது தான் இது. என் குடும்பத்திலேயே நான் தான் முதலில் கலரிங் செய்தேன். அதற்கு காரணம் எனக்கு வித்தியாசமாக முயற்சி பண்ண பிடிக்கும். அதனால் நிறைய கலரிங் செய்துள்ளேன்.

கேன்சர் நோயாளிகளுக்காக என்னுடைய தலைமுடியில் 17 இன்ச் கொடுத்தேன்.

null

நான் தேங்காய் எண்ணெய் வைத்து தலைக்கு குளிப்பேன். வேறு எதுவும் கிடையாது. அதிலும் ஷாம்பூ பயன்படுத்த மாட்டேன். சீகக்காய் தான் பயன்படுத்துகிறேன். எப்போதாவது கலரிங் செய்யும்போது, பார்லரில் கொடுக்கும் ஷாம்பூ பயன்படுத்துவேன்.

முடி சீக்கிரம் வளர என் பாட்டி எனக்கு ஓன்று கற்றுக் கொடுத்தார். அதாவது இரவு தூங்க செல்லும் முன் முடியை நன்றாக பிண்ணி ஜடை போட்டு தூங்க வேண்டும். இதனால் சீக்கிரம் முடி வளரும்.

சருமம் பளபளப்பாக

null

உருளைக்கிழங்கு மசித்து சருமத்தில் பேஸ்ட் போல போட்டு வந்தால் சருமம் பளபளப்பாகும். வேப்பிலை தண்ணியில் முகம் கழுவினால் முகப்பரும் எதுவும் வராது, அது நம் சருமத்திற்கு பொலிவை கொடுக்கும். இது இல்லாமல் புதினாவை கிளிசரீன் உடன் சேர்த்து நைட் முகத்தில் பயன்படுத்தி வந்தால் அதுவும் சருமத்தை பளபளப்பாக்கும் என கூறுகிறார் நித்யா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close