Bus-ல தூங்குறப்போ மேல கை வைக்குறாங்க  கொந்தளித்த Actress Nakshatra | Green Airline Travels

2 Reactions
thumb_upLike
commentComments
shareShare

இன்றைய காலத்தில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிய தொடங்கி விட்டனர். எல்லா இடங்களுக்கும் தைரியமாக சென்று வருகின்றனர். சமையல் அறையில் மட்டுமே வாழ்க்கையை கழித்து வந்த காலம் மாறத் தொடங்கிவிட்டது. பெண்கள் சுதந்திரமாக தங்களது பிடித்த வேலைகளை செய்யத் தொடங்கி விட்டனர்.

ஆனால் அவர்களுக்கான முழு சுதந்திரமும் கிடைத்துவிட்டதா என்றால் அது மிகப்பெரிய கேள்விகுறி தான். காலையில் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வேலைக்கோ பேருந்துகளில் பெண்கள் செல்லும்போது, ஆண்களின் உரசல்களுக்கு ஆளாகிறார்கள். வேலை பார்க்கும் இடத்தில், பள்ளியில், கல்லூரியில் என எங்கு சென்றாலும் பெண்களுக்கு சில ஆண்களால் தொந்தரவு இருக்கத்தான் செய்கிறது.

இது இப்படியென்றால், வெளியூருக்கு பயணம் செய்யும்போது கூட இந்த மாதிரி தொந்தரவுகள் நடக்கிறது என்பது அதிர்ச்சியாக உள்ளது. ஜீ தமிழ் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நக்சத்ரா, இவரின் தங்கை சென்னையில் இருந்து ஆழுவாவிற்கு ஒரு தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அந்த பேருந்தின் இரண்டாம் ஓட்டுனர் இரவு நேரத்தில், நக்சத்ராவின் தங்கை மீது கைது வைத்து தவறாக நடக்க பார்த்துள்ளார். அவரின் பெயர் ஜெயசங்கர்.

இதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்த நக்சத்ரா, தமிழ்நாடு அரசாங்கம், அல்லது கேரளா அரசாங்கம் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அந்த பதிவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், சென்னை போலீஸ் இவர்களையும் டேக் செய்துள்ளார்.

இப்படி ஒரு பேருந்தில், நள்ளிரவு நேரத்தில் ஒரு ஓட்டுனர் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close