என்னை எல்லாம் பிக்பாஸ் கூப்பிட மாட்டார்கள் ; Myna Throwback Interview

thumb_upLike
commentComments
shareShare

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் தொடங்குவதற்கு முன்பும் சரி தொடங்கிய பின்பும் சரி இதுக் குறித்த செய்திகளை தினமும் சோஷியல் மீடியாவில் பார்க்கலாம். மற்ற 5 சீசன்களை காட்டிலும் இந்த 6வது சீசன் லைவாகவும் ஹாட்ஸ்டாரில் டெலிகாஸ்ட் ஆகிறது.

null

அதனால் எல்லா விஷயங்களையும் கட் இல்லாமல் ரசிகர்கள் பார்த்து விடுகின்றனர். 20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியது. 1 வாரம் கழித்து 21 வது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே சென்றார். அவர் மீது ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

null

முதல்  வாரத்தில் ஸ்மார்ட்டாக பிளே செய்த மைனா விக்ரமுடன் சண்டை, மணிகண்டனுடன் சேர்க்கை என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அவரின் பேச்சும், உடல் மொழியையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மைனாவுக்கு கிடைக்கும் நெகட்டிவ் கமெண்டுகள் பற்றி அவரின் கணவர் யோகேஷ் சமீபத்திய  பேட்டியில் விளக்கம்  அளித்து இருந்தார். அப்போது மைனா இயல்பாக இருப்பதாகவும் அவரின் சுயமரியாதை மீது விமர்சனம் வைக்கும் போது தான் வெடிப்பதாகவும்  கூறி இருந்தார்.

null

இந்தநிலையில் பிக்பாஸ்-க்கு என்னை கூப்பிட மாட்டார்கள் என மைனா சில வருடங்களுக்கு முன்பு நமக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால், ஒவ்வொரு வருடம் பிக்பாஸ் ஆரம்பிக்கும்போது நீங்கள் பிக்பாஸ் போகிறீர்கள் தானே என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.

null

சத்தியமாக சொல்கிறேன் எனக்கு தெரியாது, விஜய் டிவி-யில் உள்ளதால் கூப்பிடுவார்கள் என கேட்டால் முதலில் டி.டி. அக்கா, மா.கா.பா இவர்களை தான் கூப்பிட வேண்டும். என்னை அழைத்தால் செல்வேனா என்றால், நிச்சயம் செல்வேன்.

null

எனக்கும் பிக்பாஸ் செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது, ஏனென்றால் நாம் இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் நமக்கு சம்பளம் உண்டு, செட்டில் ஆகி விடுவேன். ஆனால் நம்மளை மாறி ஆட்களை எல்லாம் இவர்கள் கூப்பிட மாட்டார்கள் என கூறியுள்ளார்.

சரியாக மூன்று வருடம் கழித்து மைனா நந்தினி இப்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close