கந்தசஷ்டி முதல் ஐயப்ப பாட்டு வரை ஆன்மீகத்தில் அசத்தும் இஸ்லாமிய மாணவி : Heena Kowser Sing Hindu Song

thumb_upLike
commentComments
shareShare

இசைக்கு மொழி இல்லை என்பர், அதேபோல் இசைக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை என்று நிரூபித்துள்ளார் இஸ்லாமிய பெண் ஹீனா கௌசர். ஐயப்ப பூஜையில் கலந்து கொண்டு ஐயப்ப பாடல்கள், கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி இணையத்தில் வைரலாகி உள்ளார் இந்த பெண். அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்த ஹீனாவுடன் ஒரு நேர்காணல்.

அப்பா தான் காரணம்

null

என் பெயர் ஹீனா கௌசர், நான் ஐயப்பா பூஜையில் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடியது வைரலாகி விட்டது. அனைவரும் ஒரு இஸ்லாமிய பெண் பக்தி பாடல் பாடுகிறாரே என ஆசார்யப்பட்டனர். அதற்கு காரணம் என் அப்பா தான். என் அப்பா தான் நான் பாடுவதை பாராட்டி என்னை எப்போதும் ஊக்குவிப்பார்.

அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

null

என் அப்பா எல்லா மதமும் ஓன்று தான் என சொல்லி என்னை வளர்த்துள்ளார். ஜாதி, மதம் என இரண்டு பாதையாக உள்ளது அது ஒற்றுமையாக இருக்க வேண்டும் எல்லா மதமும் ஒன்றாக தான் இருக்க வேண்டும், நம் மக்களுக்குள் எதற்கு பிரிவினை ? ஜாதி மதம் என மக்களை பிரிக்க கூடாது.

ஆதரவும், எதிர்ப்பும்

null

என் நண்பர்கள், குடும்பம், என் ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். சிலர் என்னை எதிர்த்தார்கள், நீ ஒரு முஸ்லிம் நீ ஏன் கோவில் செல்கிறாய் ஏன் ஐயப்ப பாடல்கள் பாடுகிறாய் என எதிர்த்தார்கள் அதை நான் கண்டுகொள்ளவில்லை.

உங்களின் திறமையை வெளி கொண்டு வாருங்கள்

null

எனக்கு பாடல்கள் பாட பிடிக்கும், அதேபோல் நிறைய பேருக்கு நிறைய திறமைகள் உள்ளது, வீட்டில் அதற்கு ஒத்துழைப்பு இருக்காது என்பதற்காக மனதிற்குள் அதை பூட்டி வைக்கிறார்கள். அது தவறு உங்கள் திறமையை வெளி கொண்டு வாருங்கள். பெற்றோரிடம் எனக்கு இது பிடித்திருக்கிறது இதுதான் செய்வேன் என சொல்லுங்கள்.

என் குடும்பம்

null

என் அப்பா, அம்மா இருவரும் எனக்கு ரொம்ப சப்போர்ட். எனக்கு ஐ.ஏ.எஸ் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை, என் பெற்றோர் அதற்கு எனக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் தருகிறார்கள்.

வைரலானது எப்படி

null

என் அப்பா ஒருமுறை அவர் நண்பரிடம் என்னைப்பற்றி சொன்னார், அவர் தான் என்னிடம் வந்து ஐயப்ப பூஜை உள்ளது, நீ நன்றாக பாடுகிறாயே கலந்து கொள்கிறாயா என கேட்டார். நானும் அங்கு சென்று பாடினேன். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விட்டது.

ஒற்றுமையாக இருங்கள்

null

நம்மை படைத்த கடவுளே ஜாதி மதம் பார்ப்பதில்லை, நாம் ஏன் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் எல்லோரும் ஒன்று தான், எல்லோரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றார் ஹீனா கௌசர்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close