எனக்கே தெரியாமல் செய்த இந்த விஷயம் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது நடிகை வைஷு விளக்கம்.

thumb_upLike
commentComments
shareShare

எனக்கே தெரியாமல் செய்த இந்த விஷயம் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது நடிகை வைஷு விளக்கம்.

 

தொலைக்காட்சி தொடர்களின் முக்கிய கதாபாத்திரமாகவும், மாடல் மற்றும் நடிகையாகவும் சமீபத்தில் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வலைத்தொடரில் நடித்த திருநங்கை வைஷு அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

இன்ஸ்பெக்டர் ரிஷி வலைத்தொடரின் ஆடிஷன் நடந்தது.நானும் அதில் கலந்து கொண்டேன்.அதில் திருநெல்வேலி பேச்சு வழக்கில் பேச வேண்டும் எனக் கூறினார்கள்.ஒரு பாதியளவுக்கு தண்ணீரில் மூழ்கியபடியான காட்சிகள் இருக்கும்.அதில் இந்த பாஷை பேசி நடிக்க வேண்டும்.அதில் நான் திட்டு வாங்கி கொண்டே வேலை செய்யும் ஒரு பரிதாபமான ரோலில் நடித்திருப்பேன்.நிறைய இடங்களில் நான் நடித்த காட்சிகளை கட் செய்து விட்டார்கள்.அது மிகவும் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது.மனம் வருத்தப்பட்டேன்.

பிறகு எனக்கு இதில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நந்தினி மேம்க்கு நன்றி சொல்லிக்கிறேன்.அமெசான் பிரைம் வீடியோவிற்கு நன்றி.தயாரிப்பாளர் சுப்தேவ் அவர்களுக்கு நன்றி.என்னுடன் சேர்ந்து பணியாற்றிய சக கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி.இது எல்லாவற்றிற்கும் மேலாக என்னை இந்த நேர்க்காணலிற்கு அழைத்த உங்கள் சேனலிற்கு நன்றி.

இந்த வலைத்தொடர் ஆரம்பத்தில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.இதில் என்னால் மறக்க முடியாத நினைவுகள் என்றால் அது அந்த தண்ணீரில் இறங்கி நடித்த காட்சிகள் தான்.கும்கி படத்தில் நடித்த அதே யானையுடன் நடித்த அனுபவம் மிகவும் சுவாரசியமாக இருந்தன.அந்த யானைக்கு ஒரு இணை இருக்கும்.கேரளாவில் யானையை நன்றாகவே டிரெயின் செய்து வைத்திருந்தார்கள்.

அதே போல் அந்த காட்சியில் தண்ணீரில் இறங்கும் போது அங்கு அதிக ஆழம்.கீழே பாறைகள் அதன் மேல் நிற்கிறோம்.முக்கால்வாசி தண்ணீரில் மூழ்கியபடி இருப்போம்.காட்டில் தான் ஷுட்டிங் நடக்கும்.அதிக குளிராக இருக்கும்.இந்த வேலை எனக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.மேலும் நிறைய ஆராய்வது தேடுவது எல்லாமே இருந்தது.இந்த படப்பிடிப்பில் நிறைய துணை இயக்குநர்கள் வேலை செய்தனர்.ஒரு உண்மையான காவல்துறை போலவே படம் முழுவதும் இருந்தது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

பொதுவாகவே நாம் ஒரு படம் நடிக்கிறோம் என்றால் அடுத்து ஒரு படம் வந்த பிறகு நம்மை மறந்து விடுவார்கள்.இந்த வலைத்தொடர் எனக்கு ஒரு ரீஎன்ட்ரியாக இருந்தன.இதில் நடித்த பிறகு எனக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன.நிறைய வழிகளில் என்னை ஊக்குவித்தார்கள்.

இதில் பாகம் இரண்டு மூன்று போன்ற யோசனையும் இயக்குநருக்கு இருக்கு.எனவே எல்லோரும் பாருங்கள்.சப்போர்ட செய்யுங்கள் என நடிகை வைஷு பேசிய தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

Trending Articles
AvalGlitz in Social Media
Share to your pages!
Close