Megha Akash Beauty Tips and Skin care Secrets Reveled | Glowing Skin , Healthy Diet | Tamil Actress

thumb_upLike
commentComments
shareShare

ஒரு பக்க கதை தான் மேகாவிற்கு தமிழில் முதல் படம், இருந்தாலும் சில காரணங்களால் அந்தப்படம் தாமதாக வெளியானது. இதனால் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமே இவருக்கு அறிமுக படமாக மாறியது. இதைத்தொடர்ந்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்தார்.

null

இதில் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா அவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்தது. தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது கைவசம் ஏழு படங்களை வைத்துள்ள மேகா அவரின் சரும பராமரிப்பு குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

ஸ்கின் கேர்

null

அவர் கூறும்போது, சினிமாவில் இருப்பதால் சருமத்தை அதிக அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நான் மேக்கப் போடாமல் இருப்பதை தான் விரும்புவேன். காரணம் சூட்டிங் நாட்களில் அதிகமாக மேக்கப் போடுவோம், அதனால் மற்ற நாட்களில் மேக்கப் இல்லாமல் இருப்பதை தான் விரும்புவேன்.

அதேபோல், சூட்டிங் எவ்வளவு தாமதமாக முடிந்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் மேக்கப் ரிமூவ் செய்து விடுவேன். மேக்கப் உடன் தூங்க செல்லக் கூடாது. இது தான் நான் கடைபிடிப்பது.

ஹேர் கேர்

null

என் அம்மாவிற்கு நல்ல அடர்த்தியான தலைமுடி. அவர் மூலமாக எனக்கு நல்ல முடி உள்ளது. தலைக்கு குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் வைத்து குளிப்பேன். முட்டையின் வெள்ளை கரு, தயிர் சேர்த்து தலையில் மாஸ்க் போட்டு குளிப்பேன். இதை நான் சிறுவயதில் இருந்தே பின்பற்றுகிறேன். அதனால் எனக்கு தலைமுடி உள்ளது.

உணவு

null

உணவு மிக முக்கியமானது. ஆனால் நான் இந்த டையட் எல்லாம் இருக்க மாட்டேன். காரணம் சூட்டிங் செல்லும் இடத்தில் அங்கு என்ன கிடைக்கிறதோ அதை தான் உண்ண வேண்டும். சென்னையில் சூட்டிங் இருந்தால், வீட்டில் இருந்து உணவு வரும். நான் நிறைய காய்கறிகள் சாப்பிடுவேன். உணவு பொறுத்தவரை இவ்வளவு தான்.

ப்யூட்டி டிப்ஸ்

null

கண்டிப்பாக நான் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நானே இதை முதலில் கடைபிடிக்கவில்லை, இப்போது தான் கடைபிடிக்கிறேன். இரண்டே இரண்டு விஷயங்கள். ஒன்று தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், இரண்டாவது சன் ஸ்கிரீன். இது இரண்டு என்ன பெரிய வித்தியாசத்தை காட்டி விட போகிறது என நினைக்க வேண்டாம். நிச்சயமாக வித்தியாசத்தை கொடுக்கும். இதை தான் நான் தவறாமல் செய்கிறேன்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close