1000 கணக்கான குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சேமித்து கொடுத்து எப்படி? | Milk Donation | SINDHU MONIKA

thumb_upLike
commentComments
shareShare

கோயம்புத்தூரைச் சேர்ந்த இளம் தாயான சிந்து மோனிகா 7 மாதங்களில் 42 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்து ஏறத்தாழ 1,400 பச்சிளம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

சிந்து மோனிகா

null

கோவை மாவட்டம் கனியூரைச் சேர்ந்தவர் சிந்து மோனிகா. 30 வயது இளம் தாயான சிந்துவிற்கு வெண்பா என்கிற 18 மாத பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் மகேஷ்வரன், தனியார் பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

தாய்பால் தானம்

null

என்னுடைய மகள் பிறந்த சில நாட்கள் எனக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை, ஆனால் ஒரு வாரத்திற்குப் பின்னர் தாய்ப்பால் சுரப்பு இருந்த போதும் அவள் என்னிடம் பால் குடிக்கவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் என்னுடைய மகள் வெண்பாவிற்கு தாய்ப்பாலை வெளியே எடுத்து பாட்டிலில் ஊற்றித் தான் புகட்டி வந்தேன். ஒரு வித மன உளைச்சலில் சிக்கிக்கொண்டதை உணர்ந்து அதில் இருந்து நானே விடுபடும் வழியைத் தேடினேன். 90 நாட்கள் இப்படியே கடந்து கொண்டிருக்க ஒரு நாள் யதேச்சையாக இன்ஸ்டாகிராமில் தாய்ப்பால் தானம் கொடுப்பது பற்றி அறிந்தேன்.

கோவையைச் சேர்ந்த ’அமிர்தம்’ என்கிற தன்னார்வ அமைப்பு இளம் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை தானமாகப் பெற்று அரசு மருத்துவமனைகளில் கொண்டு போய் சேர்க்கிறது என்பது தெரிந்து அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டேன். தாய்ப்பாலை pumping செய்வதற்கான கருவியை ஏற்கனவே நான் வைத்திருந்தேன். ஆனால், தாய்ப்பாலை எப்படி சேமித்து வைத்து தானம் கொடுப்பது என்பது தெரியவில்லை. பின்னர், அமிர்தம் அமைப்பைத் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தேன். தாய்ப்பாலை சேமிப்பதற்கென்றே தனியாக storage bag-கள் இருக்கின்றன, அவற்றை வாங்கிக் கொள்வதற்கான வசதி இருந்தால் நாமே வாங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தன்னார்வ அமைப்பு தந்து உதவி செய்கிறது. என்னால் வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் நானே தனியாக ஆர்டர் செய்து வாங்கினேன்.

null

இந்த பேகுகளில் தேதி மற்றும் நேரத்தை முன்னரே குறிப்பிட்டு தாய்ப்பாலை எடுத்து அதில் ஊற்றி fridge-இல் உறையவைத்துவிட வேண்டும். ஒரு பவுச்சில் 250மிலி தாய்ப்பாலை பதப்படுத்தி வைக்கலாம். தேதி மற்றும் நேரம் வாரியாக குறிப்பிடுவதனால் தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனையில் அவற்றைக் கொண்டு சேர்த்த பின்னர் நாட்களை கணக்கு செய்து பச்சிளம் குழந்தைகளுக்கு பால் புகட்டுவதற்கு உதவியாக இருக்கும்

நம்முடைய குழந்தைக்கு பால் புகட்டும் போது எந்த அளவிற்கு தூய்மையை பின்பற்றுகிறோமோ அதே போன்று மற்ற குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை தானமாகக் கொடுக்கும் போதும் அதே அக்கறை இருக்க வேண்டும்

குடும்பத்தினரின் ஆதரவு

null

தாய்ப்பால் தானம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் தோன்றியதுமே என்னுடைய கணவரிடம் முதலில் வெளிப்படுத்தினேன். என்னால் செய்ய முடியும் என்றால் எந்த தயக்கமும் வேண்டாம் என்று கூறி எனக்கு ஆதரவு தெரிவித்தார். குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கூட தாய்ப்பால் தானம் முடிவிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்

தாய்ப்பால் தானத்தின் அவசியம்

null

அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் கிடைக்காமலும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் பச்சிளம் குழந்தைகளைப் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகே எனக்கு வெண்பா பிறந்தாள், இந்த இடைபட்ட காலத்தில் புதிதாக ஒரு உயிரை பூமிக்கு கொண்டு வருவதற்கு ஏங்கும் தாய்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். அப்படி ஒரு உயிரின் மதிப்பு எனக்குத் தெரிந்ததால் தான் தயங்காமல் இயற்கையின் வரமான கலப்படமில்லாத தாய்ப்பாலை மற்ற உயிர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்று நினைத்தேன்.

தாய்ப்பால் சுரப்பு என்பது நாம் எந்த அளவிற்கு எடுக்கிறோமோ அந்த அளவிற்கு தேவை இருக்கிறது என்பதை உணர்ந்து உடல் தானாகவே சுரக்கும். இதற்காக நான் தனியான ஊட்டச்சத்துகளை, அதிக உணவை உட்கொள்வது போன்ற எதையும் செய்யவில்லை.

வெண்பா பிறந்த 100வது நாளில் இருந்து நான் தாய்ப்பால் தானம் செய்து கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டு தொடங்கி ஏப்ரல் 2022 வரை 7 மாதங்களில் 42 லிட்டர் அளவிற்கு தாய்ப்பால் தானம் கொடுத்திருக்கிறேன்.

சாதனை

null

’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ’ஆசியன் புக் ஆஃப் ரெக்காட்ஸ்’ இரண்டிலும் தாய்ப்பால் தானத்தை சாதனையாக பதிவு செய்து சான்றிதழை பெற்றிருக்கிறேன்.

 பெண்கள் அனைவரும் தாய்ப்பால் தானம் கொடுக்க வேண்டும் என்கிறார் சிந்து.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close