My Honest Skincare Routine.. Manjima Mohan | Makeup, Beauty, Fitness

thumb_upLike
commentComments
shareShare

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். 1997 முதல் 2001 வரை குழந்தை நட்சத்திரமாக எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நிவின் பாலியுடன் நடித்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக, அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார்.

null

அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்த எப்ஐஆர் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

null

மஞ்சிமா ஆண்களுக்கு மட்டுமல்ல பல பெண்களின் பேவரைட்டும் கூட, அவரின் ஸ்டைல் அனைத்து பெண்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை கொடுக்கும். அனைவருக்கும் பிடித்த மஞ்சிமா தன்னுடைய அழகின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

மேக்கப்

null

பொதுவாக மேக்கப் என பிடிக்காத ஒன்று. நான் நடிக்கும் திரைப்படங்களிலே நான் மேக்கப் ரொம்ப கம்மியாக தான் போடுவேன். என்னை மேக்கப் இல்லாமல் வர சொன்னால் தாராளமாக வருவேன், என்னவோ மேக்கப் போட்டால் எனக்கு பிடிக்காது. நான் நானாக இல்லாதது போல் நினைப்பேன். ஆனால் சினிமாவில் இருப்பதால் மேக்கப் போட்டு தான் ஆக வேண்டும்.

ஸ்கின்கேர்

null

சன்ஸ்கிரீன், மாய்ஸ்ட்ரைசர் இவை நான் மறக்காமல் பயன்படுத்துபவை. அதுவே என்னுடைய ஸ்கின் கேர்.

ஹேர் கேர்

null

கேரளாவில் பிறந்த அனைவருக்கும் அடர்த்தியான கூந்தல் இருக்கும். என்னுடைய கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணெய் தான் காரணம். நான் அது தான் பயன்படுத்துகிறேன்.

நான் நானாக இருக்க விரும்புகிறேன்

null

நான் உடல் எடை அதிகமாக இருப்பது தான் என்னைப் பற்றி வரும் ஒரே செய்தி. அப்போது தான் நான் மிக கஷ்டப்படுவேன், ஏன் குண்டாக இருந்தால் என்ன? நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

ஊரடங்கு சமயத்தில் உடற்பயிற்சி செய்து எடை குறைத்தேன். ஆனால் மீண்டும் எடை அதிகரித்து விட்டது. அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். நான் நானாக இருக்கிறேன், என்னை குண்டு என நெகடிவாக பேசும் நபர்களிடம் நெருங்க மாட்டேன் என கூறினார் மஞ்சிமா மோகன்.

இப்படி தன்னுடைய சரும பராமபரிப்பு மற்றும் பாசிடிவிட்டி குறித்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார் மஞ்சிமா மோகன்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close