பெண்கள் Weight தூக்குனா குடல் இறங்கிடுமா? | Mamiyar Marumagal Rivalry In The History Of Powerlifting

thumb_upLike
commentComments
shareShare

மாமியார் - மருமகள் என்றாலே சண்டை, சச்சரவு, என சீரியல், சினிமா துவங்கி நம் வீடு வரை இது தொடர்கதைதானே. எப்பேர்பட்ட அன்பான மாமியார் மருமகளும் கூட சின்ன சண்டையாவது போட்டுவிடுவார்கள். ஆனால் சென்னை, படப்பையைச் சேர்ந்த மாமியார் சோமசுந்தரி மனோஹரன் (55 வயது) மற்றும் மருமகள் மணிமொழி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பளு தூக்குவதும், தினமும் ஜிம்மில் ஓர்கவுட், டயட், இத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டு சாதிப்பதுமாக நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள். தன் அம்மா சோமசுந்தரி, மனைவி மணிமொழி என இருவருக்கும் பயிற்சியாளர் நான் தான் என்கிறார் கார்த்திகேயன் மனோஹரன்.

இவர்களின் உடற்பயிற்சி குறித்து கார்த்திகேயன்

null

நான் முதல்ல இந்த ஃபிட்னஸ், ஜிம் இந்த ஆர்வத்துக்குள்ள எப்படி வந்தேன்னு சொல்லிடறேன்’ எனர்ஜியாக ஆரம்பித்தார் மாஸ்டர் கார்த்திகேயன். எனக்கு முதுகு வலி வரவும் அறுவை சிகிச்சை செய்யணும்னு சொல்லிட்டாங்க.

அப்போதான் முதுகு, இடுப்பு வலிக்காக ஒர்க்கவுட் செய்ய ஆரம்பிச்சு தசைகளை வலிமைப் படுத்த ஆரம்பிச்சேன். அம்மாவுக்கு மூட்டு வலி வந்துடுச்சு. மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை செய்தாகணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. அதையும் வொர்க் அவுட் மூலம் சரி செய்தேன். அதுவே இந்த ஜிம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தது.

புடவை தான் எனக்கு விருப்பம்

null

தினமும் எப்படியாவது ஒர்க்கவுட் செய்துடணும்னு செய்வேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா வெயிட் லிஃப்ட்டிங் எல்லாம் ஆரம்பிச்சேன். தொடர்ந்து போட்டிகளும் வர ஆரம்பிக்கவும் கலந்துக்கலாம்னு தோணுச்சு. பவர் லிஃப்டிங் போட்டிகள்ல கலந்துக்கணும்னா அதற்குரிய டைட்டான உடைகள் போட்டுக்கணும்னு சொன்னாங்க. அந்த உடைங்கற காரணத்தாலேயே ஒண்ணு ரெண்டு போட்டிகள் மிஸ் ஆச்சு, எனக்கு அந்த உடை போட்டுக்கப் பிடிக்கலை. எனக்கு சேலை தான் பிடிக்கும், சேலை அணிந்தே போட்டிகளில் கலந்து வெற்றி பெற ஆரம்பித்தேன்.

என் மகள் வெளிநாட்டில் உள்ளார், அங்கு சென்றாலும் நான் புடவை தான் அணிவேன்.  என் மருமகளையோ, மகளையோ நான் இந்த உடை தான் அணிய வேண்டும் என சொல்ல மாட்டேன். அவர்களுக்கு விருப்பமான உடைகளை அணிவதில் தவறில்லை என கூறுகிறார் இந்த மாடர்ன் மாமியார்.

மருமகள் மணிமொழி

null

பி.டெக் ஏரோநாட்டிகல் படிக்கும் போதுதான் என் கணவரை சந்திச்சேன். நட்பு, காதல் ஆச்சு. இங்கே படிச்சு முடிச்சுட்டு பெங்களூருவிலே எம்.டெக் படிச்சேன். காலேஜ் டேய்ஸ்ல ஃபிரெண்ட்ஸ் கூட சேர்ந்து பேட்மின்டன் விளையாடுவேன் அவ்வளவுதான். ஆனால் திருமணத்துக்கு அப்பறம்தான் இந்த ஒர்க்கவுட் எல்லாம். டிரெய்னருடைய மனைவி எப்படி ஒர்க்கவுட் செய்யாம இருக்க முடியும்.

சேர்ந்து தான் வொர்க் அவுட் செய்வோம்

null

நானும் என் மாமியாரும் சேர்ந்துதான் செய்ய ஆரம்பிச்சோம். அப்படியே அது வெயிட் லிஃப்டிங் பயிற்சி, போட்டிகள், இப்படி போக ஆரம்பிச்சது. இப்போ நானும் என் அத்தையும் சேர்ந்தேதான் பயிற்சி எடுத்துக்கறோம், போட்டிக்கு சேர்ந்தே தயாராவோம். எங்க ரெண்டு பேரையும் தயார் செய்யறது என் கணவர் வேலை’. குடும்பமே தன்னம்பிக்கையின் உச்சத்தில் பேசுகிறார்கள்.

சண்டை என்றால் என்ன

null

இதுவரை நானும் என் மாமியாரும் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. இருவருமே வீட்டில் வேலைகள் செய்வோம், ஒருவருக்கு முடியவில்லை என்றால் இன்னொருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வோமே தவிர சண்டை போட மாட்டோம் என்கிறார் மணிமொழி.

முறையான ட்ரைனிங் எடுத்துக் கொள்ள வேண்டும்

null

இன்றைய காலத்தில் நாம் வேலை செய்வதே குறைந்து விட்டது, ஆனால் நம் உடல் வலிமையோடு இருக்க வேண்டும், அதற்கு வொர்க் அவுட் தான் சரியான வழி. பளு தூக்கினால் குடல் இறங்கிடும் என பலர் நினைப்பதுண்டு, ஆனால் முறையான கோச்சிடம் சரியாக ட்ரைனிங் எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் சோமசுந்தரி.    

பார்பெல் ஜிம்

null

கார்த்திகேயன் சென்னை தாம்பரத்தில் மெட்ராஸ் பார்பெல் என்னும் ஜிம் வைத்திருக்கிறார். மாமியார் -மருமகள் காம்போவாக உடற்பயிற்சி செய்வதையும், பளு தூக்குவதையும் பார்த்தே பல பெண்கள் ஆர்வமாக அங்கே உடற்பயிற்சி செய்கின்றனர்.

 

null

உடற்பயிற்சி செய்ய வயது வரம்பு கிடையாது. தகுந்த பயிற்சியாளர் உதவியோடு எந்த வயதிலும் உடற்பயிற்சி செய்யலாம்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close