Malavika’s Secret For Natural Glowing Skin | DIY Face Pack at Home | Home Remedies

thumb_upLike
commentComments
shareShare

சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, வாளமீனுக்கும் உள்ளிட்ட பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஆனால் தமிழ் சினிமா பெரிதாக கைக்கொடுக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.

null

2007-ல் சுமேஷ் மேனனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது 43 வயதாகும் மாளவிகா இன்றும் அதே இளமையுடன் இருக்கிறார்.

அவரின் இளமை ரகசியம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

உணவு

null

நல்ல சருமத்திற்கு நல்ல உணவு அவசியம். நான் நன்றாக சாப்பிடுவேன், ஆனால் எண்ணெய் உணவுகளை தொட மாட்டேன்.

யோகா

null

யோகா என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. தினமும் தவறாமல் யோகா செய்து விடுவேன். அது ஒரு புத்துணர்ச்சியை தரும். நேகடிவிட்டி அனைத்தும் நம்மை விட்டு ஓடி விடும்.

ஸ்கின் கேர்

null

நான் ஸ்கின் கேர் ஒன்றும் பெரிதாக பின்பற்ற மாட்டேன். TOMATO CLARITY CREAM தான் பயன்படுத்துகிறேன், அது சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்தது. அது தவிர்த்து இரவு தூங்க செல்லும் முன், ஐஸ் கட்டியை எடுத்து முகம் முழுக்க மசாஜ் செய்து விடுவேன். அது நம் முகத்திற்கு புத்துணர்ச்சியையும், பொலிவையும் தரும். முகம் வெயிலில் சென்று கருத்து விட்டால் தயிர் பயன்படுத்துவேன், அது மீண்டும் பழைய நிறத்திற்கு வர உதவும்.

தூக்கம்

null

9 மணி நேரமாவது கட்டாயம் நான் தூங்குவேன். நான் தூங்க ஆரம்பித்தால் எழுப்ப முடியாது. தூக்கம் என்பது எனக்கு மிக அவசியமானது.

ஹேர்கேர்

null

ஹேர்கேர் என்னும் அந்த கேள்வியை கேட்காதீர்கள், என் தலைமுடி அனைத்தும் வீணாகி விட்டது. நான் கலரிங் நிறைய செய்துள்ளேன், கெமிக்கல் ட்ரீட்மென்ட் அதிகம் செய்துள்ளேன். அதனால் முன்புபோல் இல்லை என் தலைமுடி. ஒரு பதினைந்து வருடத்திற்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என இப்போதும் நான் நினைப்பதுண்டு.

இவ்வாறு தன்னுடைய அழகின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் மாளவிகா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close