வழியில்லாமல் பாலியல் தொழிலுக்கு போனேன் : Transgender Jasmine Emotional Interview

thumb_upLike
commentComments
shareShare

தமிழ்நாட்டில் முதல் ஒப்பனை கலைஞரான திருநங்கை ஜாஸ்மின் அவர் கடந்து வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

திருநங்கைகளை இழிவாக பார்க்கும் பார்வை சமீப காலங்களில் மாறி வருகிறது. திருநங்கைகள், ஐ.பி.எஸ், மருத்துவர், எழுத்தாளர், என பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அதில் முதல் செர்டிபைட் மேக்கப் ஆர்டிஸ்டாக  திருநங்கை ஜாஸ்மின் உள்ளார். அவர் கடந்து வந்த கஷ்டமான பாதை குறித்து அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

தாய் தந்தை இறப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பிறந்த நான், வளரந்தது எல்லாம் பாட்டி வீட்டில் தான். கேன்சரால் தாயை இழந்த நான் தந்தையையும் இழந்தேன். அதனால் எனக்கு எல்லாம் என் பாட்டி தான்.

பெண்மையை உணர்ந்தது

பதிமூன்று வயதில் தான் நான் பெண்மையை உணர்ந்தேன். ஒரு நாள் வெட்டில் யாரும் இல்லாதபோது, புடவை கட்டிப் பார்த்து எனது சித்தியிடம் பிடிபட்டேன். வீட்டில் பெரிய பிரசன்னையாக அது வெடித்தது.

பாட்டியின் மறைவு

அதன்பின் பாட்டியின் மறைவு எனை மேலும் உடைத்தது. பாட்டியின் மறைவிற்கு பிறகு தான் சொந்தங்களின் உண்மையான முகம் தெரிந்தது. அப்போது முடிவு செய்தேன், இவர்கள் யாரும் வேண்டாம் நாம் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று.

மேக்கப் ட்ரைனிங்

மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக வேண்டும் என நினைத்து கோயம்பத்தூரில் ட்ரைனிங் சேர்ந்தேன். ஆனால் அவர்கள் என்னை மரியாதை குறைவாகவே நடத்தினார்கள். ட்ரைனிங் வந்த மற்ற யாரும் என்னோடு பேசவோ பழகவோ இல்லை. எங்களுக்கு வந்த ட்ரைனரே, என்னிட யாரும் பழக வேண்டாம் என மற்றவர்களிடம் கூறியுள்ளார். நான் அதைப்பற்றி கவலைப்படாமல் என்னுடைய ட்ரைனிங்கை முடித்தேன். இன்று நான் ஒரு மேக்கப் ஆர்டிஸ்டாக உள்ளேன்.

ஓஜஸ் ரஜானியிடம் ட்ரைனிங்

சென்னையிலும், கோயம்பத்தூரிலும் ஒரு மேக்கப் ஸ்டுடியோ ஓப்பன் செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. ஐ படத்தில் வந்த ஓஜஸ் ரஜானி நடத்திய வொர்க் ஷாப்பில் கலந்துகொண்டேன். அதன்பின் அனிதா சம்பத் வொர்க் ஷாப்பிலும் கலந்துகொண்டேன். இப்படி என்னை நான் என் தொழில் ரீதியாக வளர்த்துக் கொண்டுதான் வருகிறேன்.

ஏன் பாலியல் தொழில்

இங்கு எந்த வேலை தருகிறார்கள், வேறு வழியில்லாமல் தான் திருநங்கைகள் இந்த தொழிலில் தள்ளப்படுகிறார்கள். நாங்கள் அறுவை சிகிச்சை செய்து மாற வேண்டும், அதற்கு பணம் தேவைப்படும். வேறு எங்கு வேலைக்கு சென்றாலும் எந்த வேலையும் தர மாட்டார்கள். அதனால் தான் திருநங்கைகளுக்கு இந்த நிலை.

இழிவாக பேசிய மணப்பெண்

பொள்ளாச்சியில் ஒரு கல்யாணம் இருந்தது, மணப்பெண்னுக்கு மேக்கப் போட வேண்டும். நான் கோயம்பத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்ல வேண்டும், அதனால் அட்வான்ஸ் கேட்டேன் அவர்களும் அனுப்பினார்கள். ஆனால் நான் அவர்களிடம் சொன்னேன், நான் ஒரு திருநங்கை உங்களுக்கு எந்த பிர்சானையும் இல்லையே என்றேன், உடனே ஒரு ஜாதி பெயரை எல்லாம் சொல்லி நீ மேக்கப் போட்டு நான் மணமேடையில் அமர்வதா என தகாத வார்த்தைகளால் பேசினார் அந்த பெண். அதுமட்டுமல்ல நான் கொடுத்த அட்வான்ஸை பிச்சையாக வைத்துகொள் என்றார். ஆனால் நான் எதுவும் கோபமாக பேசாமல் அவர்களின் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டேன்.

எங்களை கேவலமாக பார்க்கும் சமூகம்

திருநங்கைகளை கேவலமாக பார்க்கும் சமூகம் தான் இது, இதை விட சிறந்த உதாரணம் இதற்கு என்ன உள்ளது? ஆனால் அதையும் தாண்டி நான் சாதிப்பேன் என்று அவரின் கடந்த வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஜாஸ்மின். 

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close