பிரபலங்கள் சாப்பிடும் தெருவோர இரவு பிரியாணிகடையில் கலக்கும் பெண் : Mahalakshmi On Night Biryani Shop

thumb_upLike
commentComments
shareShare

பல போராட்டங்களுக்குப் பிறகு இரவு நேர பிரியாணி கடையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 23 வயது மகாலட்சுமியுடன் ஓர் நேர்காணல்.

மகாலட்சுமி குறித்து

என் சொந்த ஊர் திருநெல்வேலி, சென்னைக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிறது. என் அம்மா கொரோனா சமயத்தில் தான் இறந்தார். அந்த சமயத்தில் கூட என்னால் அங்கு செல்ல முடியவில்லை. பல போராட்டங்களுடன் நான் வாழ்ந்து வருகிறேன்.

பிரியாணி கடை

இங்கு நான் விற்பனை செய்யும் பிரியாணியை நானே சமைத்து கொண்டு வருவேன். என்னுடன் துணைக்கு இங்கு ஒரு அண்ணா உள்ளார். இரவு பதினோரு மணியிலிருந்து இரண்டு மணி வரை பிரியாணி கடை நடத்தி வருகிறேன். அந்த சமயத்தில் தான் ஹோட்டல்கள் எதுவும் இருக்காது, நிறைய பேர் பசியுடன் வருவார்கள். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் வருவார்கள். குடும்பத்துடன் வந்து இங்கு பிரியாணி சாப்பிட்டு செல்வார்கள்.

பிரபலங்கள் விரும்பும் பிரியாணி

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் நம்முடைய ரெகுலர் கஸ்டமர். போன் பண்ணி பிரியாணி எடுத்து வைக்க சொல்லுவார், அதேபோல் வந்து வாங்கிவிட்டு செல்வார்.

இரவில் சந்திக்கும் பிரச்சனை

இங்கு குடும்பங்கள் எந்த அளவிற்கு வருகிறார்களோ, அதேபோல் குடிமகன்களும் வருவார்கள். காசு இல்லை பிரியாணி கொடு என்பார்கள், காசில்லாமல் தர மாட்டேன் என சொன்னால் அசிங்கமாக பேசுவார்கள். முடிந்த அளவிற்கு சமாளித்து விடுவேன். இல்லையேல் போலீசுக்கு போன் செய்து விடுவேன், அவர்கள வந்து பிரச்சனையை தீர்த்து விடுவார்கள்.

போலீஸும் இங்கு வந்து விரும்பி சாப்பிடுவார்கள்.

என் பிரியாணியின் தனித்துவம்

நான் ஓப்பனாக சொல்கிறேன், மற்ற இடங்களில் அஜினமோட்டோ சேர்ப்பார்கள், நம் பிரியாணியில் அது இல்லை. நான் அஜினமொட்டோ சேர்க்க மாட்டேன். அதுவே நம் பிரியாணியின் ஸ்பெஷல்.

என் வருமானம்

பிரியாணியின் விலை 100, தினமும் 50 டப்பாக்கள் பார்சல் சென்று விடும். அந்த டப்பாவே ஒன்று 10 ரூபாய் வரும், அதுபோக பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். இது எல்லாம் போக என் கையில் 500 ரூபாய் வரும், இதுவே என் ஒரு நாள் வருமானம்.

என் அடுத்த ப்ளான்

எனக்கு கடை வைக்க வேண்டும் என்பது தான் ஆசை, கூடிய விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். நான் எப்போதும் இப்போது இருக்கும் என் நிலையை மறக்க மாட்டேன். கடையே வைத்தாலும் இரவு பதினோரு மணிக்கு மேல் வந்து இங்கு பிரியாணி விற்பேன்.

மகாலட்சுமியின் கடை

மகாலட்சுமியின் கடை பெயர் MR & MRS BIRIYANI  

கடை : பாங்க் ஆப் இந்தியாவிற்கு எதிரில், ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம்.

தனக்கு பிடித்த வேலையை தைரியமாக செய்து மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் இந்த சிங்கப்பெண்னுக்கு வாழ்த்துக்கள்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close