இளம் பெண்கள் Dating Addict-ஆக மாறுகிறார்களா ? : Madurai Student Arrested For Sharing Obscene Videos

thumb_upLike
commentComments
shareShare

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவர் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு கமுதியில் முஸ்லீம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் ஆசிக் என்பவருக்கு திருமணமாகி 3 ஆண்டாகிவிட்டது. இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார். இவருக்கும், கமுதியைச் சேர்ந்த டாக்டர் ஆசிக் என்பவருக்கும் பல ஆண்டாக நட்பு இருந்துள்ளது.

 

இதற்கிடையில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்துவரும் காளீஸ்வரி, உடன் தங்கியுள்ள மற்ற பெண்களின் குளியல் அறை காட்சிகள், உடைகள் மாற்றும் காட்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக எடுத்து டாக்டர் ஆசிக் என்பவருக்கு அனுப்பி வந்துள்ளார்.

இப்படி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து அனுப்புவதை பார்த்த பெண் ஒருவர், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அவர், காளீஸ்வரியின் செல்போனை பார்த்தபோது அதுபோன்ற போட்டோக்கள், வீடியோக்கள் நிறைய இருந்துள்ளன.

null

 

இதையடுத்து விடுதி மேலாளர் மதுரை அண்ணாநகர் போலீஸில் புகார் தெரிவித்தார். அங்கிருந்து சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார் மாற்றப்பட்டு, வழக்கை விசாரித்து வந்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பியது உண்மை எனத் தெரிந்தது.

இப்படி மற்ற பெண்களின் போட்டோக்கள் அனுப்பினால் தனக்கு பணம் கிடைப்பதாக காளீஸ்வரி கூறியுள்ளார். இதேபோல் சண்டிகர் யுனிவர்சிட்டியில் சமீபத்தில் நடந்தது. அங்குள்ள பெண்கள் விடுதியில் இந்த மாதிரி ஒரு பெண் மற்ற பெண்கள் குளிக்கும்போதும், உடை மாற்றும்போதும் போட்டோ வீடியோக்கள் எடுத்தது தெரிய வந்து அந்த பெண்ணையும் கைது செய்தனர். இப்போது மதுரையிலேயே இது நடந்துள்ளது. இதன்படி, ஆசிக், காளீஸ்வரி ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

null

பணத்திற்காக இப்படி மற்ற பெண்களை போட்டோ, வீடியோ எடுப்பது எவ்வளவு கேவலமான செயல். சண்டிகரில் பிடிபட்ட பெண்ணும் சரி, மதுரையில் பிடிபட்ட காளீஸ்வரியும் சரி சொன்ன காரணம் ஒன்றே, பணம்.

ஒரு கல்லூரியில் பண வசதி படைத்த மாணவர்களும் படிக்கிறார்கள், பண வசதி இல்லாதவர்களும் படிக்கிறார்கள். பண வசதி இல்லாத மாணவர்கள் மற்றவர்களை பார்க்கும்போது நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வரும். இப்படி ஏக்கத்துடன் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை தப்பான வழிக்கு சிலர் அழைத்து செல்கின்றனர்.

அதாவது வெளியில் ஆண்களுடன் டேட்டிங் சென்றால் இவ்வளவு பணம் கிடைக்கும் என கூறுகிறார்கள், தெளிவு பெறாத பல கல்லூரி மாணவிகள் இந்த வலையில் விழுகிறார்கள். பணத்திற்கு, ஆடம்பர பொருட்களுக்கு ஆசைப்பட்டு தன்னையே இழந்த பெண்கள் ஏராளம்.

ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பது தவறல்ல, ஆனால் அதற்கு இது வழியல்ல. நன்றாக படித்து, நல்ல வேலைக்கு சென்று அப்போது வாங்கு நேர்மையான சம்பளத்தில், பிடித்த எதையும் வாங்கலாம்.

இந்த பதிவு நிச்சயம் பல பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என நம்புகிறோம்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close