Love Today Ivana Skincare and Haircare Secrets Revealed

thumb_upLike
commentComments
shareShare

தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இயக்குனராக இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு, வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி இருந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

null

இந்த படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

null

விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது லவ் டுடே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் இவானா. இந்தப்படம் மூலம் ஆண் ரசிகர்கள் மட்டுமல்ல பெண் ரசிகர்களையும் இவர் பெற்றுள்ளார்.

இவானா நம்மிடம் அவரின் ஸ்கின் மற்றும் ஹேர் கேர் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஸ்கின் கேர்

null

நான் பெரிதாக ஸ்கின் கேர் எதுவும் செய்ய மாட்டேன். என்னுடைய பேஸ் வாஷ் மட்டும் தினமும் பயன்படுத்துவேன். என்னுடைய அக்கா ஸ்கின் கேரில் அதிக ஆர்வம் கொண்டவர், அவர் என்ன செய்கிறாரோ சில சமயங்களில் நானும் அதை பயன்படுத்துவேன். வாரத்திற்கு இருமுறை ஸ்க்ரப் பயன்படுத்துவேன். என் அக்காவின் பேஸ் மாஸ்க் உள்ளது, அதுதான் நான் பயன்படுத்துவேன்.

பேஸ் மாஸ்க்

null

கடலைமாவு, தக்காளி, தேன் இவற்றை கலந்து ஒரு பேஸ் மாஸ்க் தயார் செய்து பயன்படுத்துவோம். சருமம் அவ்வளவு நன்றாக இருக்கும்.

ஹேர் கேர்

null

பொதுவாக என் தலைமுடியை நான் நன்றாக பராமரிப்பேன். நானே ஒரு ஹேர் பேக் செய்து பயன்படுத்துவேன். வெறும் நான்கு பொருட்கள் போதும். கற்றாழை, என் வீட்டில் செடி உள்ளது அந்த கற்றாழை தான் நான் பயன்படுத்துவேன், அத்துடன் நீலாபிரிங்காதி எண்ணெய், வெங்காய ஜூஸ், முட்டையின் வெள்ளைக்கரு.

null

இவை அனைத்தும் சேர்த்து கலக்கி என் தலைமுடியில் பேக் போல் செய்துவிடுவேன். வாரத்திற்கு இரு முறை தலைக்கு குளிக்கும் முன் நான் இதை செய்வேன். இதனால் தலைமுடி ஆரோக்கியமாக உள்ளது.

இது தான் நான் பின்பற்றும் ஸ்கின் மற்றும் ஹேர் கேர் என்று புன்னகையுடன் கூறுகிறார் இவானா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close