யாரும் இந்த தப்ப பண்ணிடாதீங்க: Lakshmi Vasudevan Emotional Speech | Muthazhagu |Saravanan Meenakshi

thumb_upLike
commentComments
shareShare

ஸ்மார்ட் ஃபோனை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், ஆன்லைன் குற்றங்களும் அதிகரித்து விட்டன. மக்களுக்கு ஆசையைக் காட்டி அவர்களிடமே பணம் பறிக்கும் குற்றச் செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக பெருகியுள்ளது.

குறிப்பாக எஸ்.எம்.எஸ். மூலம் நீங்கள் இத்தனை லட்சங்களை வென்றுள்ளீர்கள் என தகவல் அனுப்பி சம்பந்தப்பட்ட நபர்களின் போனை ஹேக் செய்து அதன் மூலமாக பணத்தை சமூக விரோதிகள் பறித்து விடுகின்றனர்.

null

அந்த வகையில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள், புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை லட்சுமி வாசுதேவன் இதுபோன்ற மெசேஜை நம்பி சிக்கலில் மாட்டியுள்ளார்.

null

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் லட்சுமி வாசுதேவன். இவரது மொபைலுக்கு நீங்கள் ரூ. 5 லட்சம் வென்று விட்டீர்கள் என மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து அந்த மெசேஜில் உள்ள லிங்க்கை அவர் க்ளிக் செய்திருக்கிறார்.

இதன் பின்னர் ஒரு ஆப் தன்னாலேயே டவுண்லோட் ஆகியுள்ளது. இந்த ஆப் காரணமாக லட்சுமி வாசுதேவனின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

null

இதையடுத்து அவரது உருவத்தை மார்ஃபிங் செய்து ஆபாச படங்களை உருவாக்கிய நபர்கள், லட்சுமியின் வாட்ஸ்ஆப் கான்டேக்ட்ஸில் உள்ள நம்பர்களுக்கு அவரது ஆபாச படங்களை அனுப்பியுள்ளனர்.

இதனால் அதிர்ந்துபோன லட்சுமி வாசுதேவன், தான் சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

null

அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு மிரட்டல் போன் கால் தொடர்ந்தன. இந்தப் படங்களை எனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்கள். இது குறித்து புகார் அளித்துள்ளோம். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள் எனவும் அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

null

சமீபகாலமாக லிங்க் அனுப்பி ஒருவரின் மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடும் சைபர் குற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இதேபோல் ஆன்லைன் கடன் செயலி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close