FirstMark எடுக்கலைனா என் புள்ள உயிரோட இருந்திருப்பான் : Karaikal Student Death Issue Detailed Report

thumb_upLike
commentComments
shareShare

புதுச்சேரி காரைக்கால் நேருநகர்ப் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார் பாலமணிகண்டன். இவர் வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். பிற்பகல் வீட்டிற்கு வந்த மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விசாரணை

பரிசோதித்து பார்த்ததில் மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மறுபுறத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விஷம் குளிர்பானத்தில்தான் கலந்து கொடுக்கப்பட்டது என்பதால், அதை யார் கொடுத்தார்கள் என விசாரித்ததில் பள்ளியின் வாட்ச்மேன்தான் அதை செய்தது என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே காவலாளியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழப்பு

அப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது காவலாளியிடம் ஒரு பெண்மணி வந்து குளிர்பானத்தை கொடுத்து அதை மாணவனின் தாய் கொடுத்ததாக கூறி மாணவனிடம் கொடுக்க சொல்லியதாக கூறியுள்ளார். இதை கேட்ட காவலாளியும், அதை மாணவனுக்கு கொடுத்துள்ளார். இதனை அருந்திய மாணவனுக்கு உடல் நகலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிசிடிவி

null

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தான் பிஸ்கெட் மட்டுமே கொடுத்ததாகவும், குளிர்பானம் எதையும் கொடுக்கவில்லையென்றும் அப்பெண்மணி கூறியுள்ளார். ஆனால் பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த பெண்மணி பள்ளி காவலாளியிடம் குளிர்பானத்தை கொடுத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியதில் அப்பெண்மணி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

மனிதநேயம் எங்கே ?

null

ஒரு தாயே இன்னொரு தாயின் பிள்ளையை கொன்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எப்படி மனம் வருகிறது? தன் பிள்ளை போல் தானே மற்ற பிள்ளைகளும், அப்படி இருக்க எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்ய மனம் வருகிறது. மனிதநேயம் என்பது எங்கே போனது?

இது ஒரு மனோநோய்

null

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்கிய காரணம், தன் பிள்ளையை விட இவன் நன்றாக படிக்கிறான். அதனால் இப்படி ஒரு காரியத்தை சகாய மேரி செய்துள்ளார். படிப்பு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் தான், அதுவே வாழ்க்கை அல்ல. தன் மகளை விட நல்ல மதிப்பெண் பெற்றுள்ளான் என சகாயமேரி விஷம் வைத்துள்ளார் என்றால், தன் பிள்ளையை எவ்வளவு கொடுமை செய்திருக்க வேண்டும். இது ஒரு மன நோய், பிள்ளைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது போல் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

படிப்பு தான் எல்லாம் என்று நீங்கள் நினைத்தால் ஒன்று சொல்லி கொள்கிறோம். வட இந்தியாவில் உள்ள ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி தன்னுடைய பள்ளி மார்க் ஷீட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஜஸ்ட் பாஸ் என்று சொல்லும் அளவிற்கே அவரது மதிப்பெண்கள் இருந்துள்ளன, ஆனால் இன்று அவர் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் தான் எல்லாம் என்று நினைக்கும் பெற்றோர்கள் மாற வேண்டும். அப்படி எந்த பெற்றோர்களாவது பிள்ளைகளை மதிப்பெண்களுக்காக துன்புறுத்துவது உங்களுக்கு தெரிய வந்தால், அது உங்கள் பக்கத்து வீட்டார் அல்லது உறவினராக இருந்தால் அவர்களை மன நல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்

தாயின் வேதனை

பாலமணிகண்டனின் தாயிடம் நாம் பேசிய போது அவர் நம்மிடம் அவரது வேதனையை வெளிப்படுத்தினார், எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதே கிடையாது. என் கணவர் தான் படிக்க சொல்லுவார். ஆனால் என் மகனுக்கு படிப்பில் முதலில் வர வேண்டும் என்ற எண்ணம், அதனால் அவனே முயற்சி செய்து படித்தான். ஆனால் இன்று அதனாலேயே என் மகன் உயிரோடு இல்லை. என் மகன் பர்ஸ்ட் மார்க் வாங்காமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருப்பான். நான் நடைப்பிணமாக வாழ்கிறேன் என மிகுந்த வேதனையோடு பகிர்ந்துகொண்டார்.

 

இந்த நிலை எந்த தாய்க்கும் வரக்கூடாது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க துன்புறுத்த கூடாது. அப்படி துன்புறுத்தாமல் இருந்தாலே நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் படிப்பு தான் எல்லாம் என்று அல்ல.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close