கல்கியின் படைப்புகளில் பெண்களின் ஆளுமை | சிவகாமி உண்மை கதாபாத்திரமா? | Gowri Ramnarayan Interview

கல்கியின் படைப்புகளில் பெண்களின் ஆளுமை | சிவகாமி உண்மை கதாபாத்திரமா? | Gowri Ramnarayan Interview
thumb_upLike
commentComments
shareShare

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக எடுத்து முடித்துவிட்டார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்தும் விட்டார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறையவில்லை.

null

அதற்கு காரணம் அமரர் கல்கியே. நிஜத்தில் வாழ்ந்த சோழர்களுடன் சேர்த்து கதையில் சில கற்பனைக் கதாப்பாத்திரங்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். முக்கியமாக படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் நந்தினி ஒரு கற்பனை கதாப்பாத்திரம் தான்.

அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, கதையை மிக ஸ்வாரஸ்யமாக எழுதியிருந்தார். அதனாலேயே பொன்னியின் செல்வன் நாவல் காலம் கடந்தும் இன்றும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

null

குந்தவை, நந்தினி, பூங்குழலி, வானதி, செம்பியன் மாதேவி, மணிமேகலை என பல முக்கிய பெண் கதாப்பாத்திரங்களே பொன்னியின் செல்வனின் தூண்கள். ஒவ்வொருவரும் ஒவ்வைறு விதமாக இருப்பார்கள், ஆனால் அனைவரும் வீர மங்கைகள். இப்படி ஒரு கதையிலேயே பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து எழுதியிருந்த கல்கி நிஜத்தில் தன் குடும்ப பெண்களை எப்படி நடத்தியிருப்பார்.

null

கல்கி பெண்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும், அவர் எழுதிய கதையில் உள்ள கற்பனை பெண்கள் குறித்தும் நம்முடன் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார் கல்கியின் மகள் வழி பேத்தி கௌரி ராம்நாராயணன்.

பெண்களிடம் கல்கி வைத்திருந்த மரியாதை

null

கல்கி எப்போதுமே பெண்களை மத்திபவர். என்னுடைய அம்மா, அதாவது கல்கியின் மகளை அவர் ஒரு டாம் பாயாக தான் வளர்த்தார். பெண்கள் வீட்டு பெரியவர்களிடம் தலை நிமிர்ந்து பேசாத அந்த காலத்திலேயே நேருக்கு நேர் நின்று என் அம்மா கல்கியிடம் சண்டை போடுவார், விவாதம் செய்வார்.

சைக்கிள் எடுத்துக் கொண்டு அவள் இஷ்டப்பட்ட இடங்களுக்கு செல்வாள், அதேபோல் மரம் ஏறுவது, நாட்டியம் ஆடுவது என என் அம்மா விரும்பிய அனைத்தையும் செய்வதற்கு கல்கி உறுதுணையாக இருந்துள்ளார்.

null

அதேபோல் என்னுடைய பாட்டி, அதாவது கல்கியின் மனைவி அவர் கல்கியின் மீது அவ்வளவு பிரியமும், பக்தியும் வைத்திருந்தார். ஈஸ்வரனையும் கல்கியும் ஒன்றாக நிற்க வைத்தால் அவள் ஈஸ்வரனை பார்க்க மாட்டார் அந்த அளவுக்கு கல்கி மீது என் பாட்டிக்கு பக்தி. ஆனால் என் பாட்டி விருப்பட்டதை தான் அவர் செய்வார் அதில் கல்கியின் முடிவு எடுபடாது.

கல்கி ஒரு படைப்பாளி

null

எழுத்தாளர் என்பவர் படைப்பாளி தானே, கல்கியின் கல்கியின் கற்பனைக் கதாப்பாத்திரங்களை கூட மக்கள் உண்மை கதாப்பாத்திரங்கள் என்றே நம்புகிறார்கள். அப்படிதான் ஒரு முறை நான் மகாபலிபுரம் சென்றிருந்த போது, அங்கு இருந்த டூரிஸ்ட் கைட் என்னிடம் இங்கு தான் சிவகாமி ஆடினால் என்றார்.

நான் யார் அந்த சிவகாமி என்றேன், என்ன மேடம் நீங்கள் கல்கியின் சிவகாமி சபதம் படித்ததில்லையா என்றார். நான் கல்கியின் பேத்தி என்று தெரியாமலையே என்னிடம் சிவகாமி சபதம் கதையையும் கூறினார். அப்படி அவர் உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரத்தை கூட மக்கள் உண்மை என்றே நினைகிறார்கள்.

சிவகாமியின் சபதம்

null

கல்கியின் நாவல்களில் சிறந்த சரித்திர நவீனம் என்று நான் கூறுவது சிவகாமியின் சபதம் தான். அந்த கதாப்பாத்திரங்கள், அந்த கதை எனக்கு மிக பிடிக்கும். என் மகள் ஒன்று சொன்னாள், சிவகாமியின் சபதம் இரண்டாம் உலகப் போரின் போது எழுதியது. அதனுடைய தாக்கம் இந்த நாவலில் உள்ளது என்று கூறினாள்.

அலையோசை

null

எனக்கு கல்கியின் கதைகளில் மிகவும் பிடித்தது, என்னுடைய பேவரைட் என்று சொன்னால் அலையோசை தான். அது 1934 –ல் தொடங்கப்பட்டு 1948-ம் ஆண்டு, அதாவது காந்திஜி இறந்த வருடம் முடிக்கப்பட்டது. கல்கி அவர்கள் குயிட் இந்தியா மூவ்மெண்டில் இணைந்தார். அப்போது கராச்சி, கொல்கத்தா, டெல்லி என பல இடங்களுக்கு சென்றார். சுதந்திர போராட்டத்தை நேரடியாக பார்த்தவர். அதை மையப்படுத்தி இந்த அலை ஓசையை உருவாக்கினார். அதில் நான்கு பெண் கதாப்பாத்திரம் முக்கியமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ரொம்ப அழகான கதை அது.

இவ்வாறு கல்கி குறித்து பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் அவரின் பேத்தி கௌரி ராம் நாராயணன்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close