குழந்தைகளின் நலனுக்காக காஜல் அகர்வால் ஆரம்பித்த பிசினஸ்

குழந்தைகளின் நலனுக்காக காஜல் அகர்வால் ஆரம்பித்த பிசினஸ்
1 Reactions
thumb_upLike
commentComments
shareShare

குழந்தை பராமரிப்பு பிராண்டான கேர் & கரெஸ் பொம்மைகள், தோல் பராமரிப்பு, உணவு மற்றும் தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான துடைப்பான்கள், மற்றும் அவர்களுக்கு தேவையான பலவற்றை வழங்குகிறது.

null

சஸ்டைன் கார்ட் ஒரு இணையவழி சந்தை. இதில் நம் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இயற்கை பொருட்களை கொண்டு தயாராகும் அனைத்தும் விற்கப்படுகிறது. வீட்டு கிட்சன் பொருட்களில் ஆரம்பித்து, உணவு, உடை என அனைத்தையும் இயற்கை வழியில் வழங்கும் பிராண்டுகளை தேடி கண்டுபிடித்து இதில் பதிவிட்டு வருகிறார்கள்.

null

null

இப்போது நடிகை காஜல் அகர்வாலுடன் அவர்கள் கை கோர்த்துள்ளார்கள். காஜலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. காஜல் இப்போது தனது தாய்மையை அனுபவித்து வருகிறார். தன்னுடைய குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பிளாஸ்டிக் பொருட்களும் அருகில் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் காஜல். குழந்தை பயன்படுத்தும் டையப்பர் தொடங்கி ஸ்கின் லோஷன், விளையாட்டு பொம்மைகள் என அனைத்தும் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேர் & கரெஸ் என்னும் புதிய பிராண்டை அவரே தொடங்கியுள்ளார்.

null

இதுகுறித்து காஜல் கூறும்போது, எனது பிறந்த குழந்தைக்கு சிறந்ததை மட்டுமே வழங்குவதற்கான எனது சொந்த தேவையிலிருந்து இந்த பிராண்ட் உருவானது. நான் கருத்தரித்த நாள் முதல், சந்தையில் சிறந்த தயாரிப்புகளைத் தேட ஆரம்பித்தேன். அப்போது தான் சிறந்த தயாரிப்புகளுடன் ஒரு பிராண்டை உருவாக்கும் எண்ணம் வந்தது, அதுவெ கேர் & கரேஸுக்கு வழிவகுத்தது.

null

சுற்றுசூழல் பாதுகாக்க, நம் குழந்தைகளுக்கு எந்த துன்புறுத்தலும் வராமல் இருக்க ஒவ்வொரு தாயும் எண்ணுவோம், அதுவே கேர் & கரேஸ். இயற்கை முறையில் உறவாகும் பொருட்களால் நாம் நம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.

காஜலின் இந்த புதிய பயணத்திற்கு நம் வாழ்த்துக்கள்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close