எனக்கு டையட் என்றாலே பிடிக்காது, ஆனால்... – ஐஸ்வர்யா மேனன்

1 Reactions
thumb_upLike
commentComments
shareShare

பிட்னஸ் என்ற சொல் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. உலகில் பாதி பேருக்கு மேல் உடற்பயிற்சி செய்கிறார்கள். அதிலும் முக்கியமாக பெண்களும் பிட்னஸி அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது சினிமா நடிகைகள் எந்த அளவுக்கு வொர்க் அவுட் செய்வார்கள் என யோசித்து பாருங்கள்.

கதாநாயகிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது, ஒன்று சினிமா சூட்டிங், மற்றொன்று உடற்பயிற்சி. திரையில் நாம் அவர்களை பார்க்கும்போது, இவர்கள் என்ன செய்கிறார்கள் இவர்களை போல் நாமும் இருக்க வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. அதற்கு பின்னால் கஷ்டமான உடற்பயிற்சிகளும், தவிர்க்க முடியாத ஸ்ட்ரிக்ட்டான டையட்டும் இருக்கும். அப்படி தன்னுடைய பிட்னஸ் சீக்கிரட்டை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

null

ஐஸ்வர்யா பிட்னஸ் பற்றி கூறும்போது, நான் சிறு வயதில் இருந்தே குண்டாக இருப்பேன். அதனால் காலேஜ் டைமில் இருந்தே ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்து விட்டேன். இன்று உடற்பயிற்சி என்பது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது.

null

ஜிம்முக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நடைபயிற்சியோ, யோகாவோ கூட செய்யலாம். நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நான் பிட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

null

அதேபோல் டையட் பற்றி பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையை சொல்கிறேன் நான் டையட் எல்லாம் செய்வதில்லை. அது எனக்கு பிடிக்காது. எனக்கு என்ன பிடிக்கிறதோ நான் அதை சாப்பிடுவேன். அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வேன்.

எனக்கு இனிப்புகள் என்றால் கொள்ளை பிரியம். எந்த இனிப்பு கொடுத்தாலும் சாப்பிடுவேன். அதேபோல் பாக்ஸிங் எனக்கு இஷ்டம் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா மேனன்.

இவ்வாறு பிட்னஸ் எவ்வளவு முக்கியம் என ஐஸ்வர்யா மேனன் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close